Saturday, 4 April 2009 | By: Menaga Sathia

வெங்காய வடகம் அல்லது தாளிப்பு வடகம் / Vengaya(Onion) Vadagam| Thalippu Vadagam | Summer Spl


தே.பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 2 கிலோ
மஞ்சள்தூள் - 1/3 கப்
கடுகு - 1/2 கப்
வெ.உளுத்தம் பருப்பு - 1/2 கப்
வெந்தயம் - 1/4 கப்
உப்பு - 1/2 கப்
பூண்டு - 4 பெரிய முழு பூண்டு
சீரகம்+சோம்பு தலா 1/4 கப்
கறிவேப்பிலை - 1/3 கப்
நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் - 50 கிராம்

செய்முறை:

* வெங்காயத்தை தோலுரித்து கழுவி மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுத்தி எடுக்கவும்.


*மிக்ஸியைக் கழுவி அந்த தண்ணீரை வெங்காயத்தில் சேர்க்கவும்.

*மஞ்சள்தூள்,உப்பு[உப்பு கரிக்கும் அளவு இருந்தால் தான் கெடாது]சேர்த்து மண்சட்டியில் அல்லது பிளாஸ்டிக் வாளியில் பிசைந்து வைக்கவும்.

*3 வது நாளில் கடுகு+வெ.உ.பருப்பு+சீரகம்+வெந்தயம்+சுத்தம் செய்த கறிவேப்பிலை+தோலுடன் நசுக்கிய பூண்டு இவற்றை எல்லாத்தையும் வெங்காயத்தில் சேர்த்து பிசைந்து 2 நாள் ஊறவிடவும்.


* 2 நாள் கழித்து பிளாஸ்டி ஷீட்டில் வெங்காயத்தை தண்ணீயில்லாமல் பிழிந்து உருண்டைகளாக பிடித்து காயவைக்கவும்.

*மாலையில் மறுபடியும் அதே தண்ணீயில் போடவும்.இதே மாதிரி அந்த தண்ணீர் வற்றும்வரை காயவைக்கவும்.

*வெங்காயத்தை கையில் எடுத்தால் பொலபொலவென காய வைக்கவும்.


*நன்கு காய்ந்ததும் எண்ணெய் கலந்து வைக்கவும்.

*இது எத்தனை வருடமானாலும் கெடாது.

பி.கு:
*சாம்பார்,துவையல்,வத்தக்குழம்பு,கூட்டு என அனைத்திற்க்கும் தாளிக்க பயன்படுத்தலாம்.வாசனை தூக்கலா இருக்கும்.

*வடகம் நாளாக கலர் மாறிவிடும்,அதனால் கெட்டுவிட்டது என பயப்பட வேண்டும்.

*எப்போழுதும் வடகத்திற்கு சின்ன வெங்காயம் மட்டுமே பயன்படுத்தவும்.

*வடகம் காய்ந்ததும் அளவு குறைந்துவிடும்.எப்போழுதும் தாளிக்கும் பொழுது 1 டீஸ்பூன் அளவு பயன்படுத்தவும்,என்ணெயில் பொரிந்ததும் அதிகமாகும்.

*எங்க ஊர் பாண்டி பக்கமெல்லாம் இந்த வடகம் இல்லாத சமையலே இல்லை எனலாம்.இதைதான் நாங்க பயன்படுத்துவோம்.

14 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஹர்ஷினி அம்மா - said...

ஓஓஓ அப்படியா... இது புதுசா இருக்கே......ஆனா எனக்கு நிறைய சந்தேகம்பா?... ஊற வைச்சுதான் பன்னனுமா?... பிரிஜில் 3 நாள் வைக்கனுமா?

Mrs.Menagasathia said...

ஆமாம் ஹர்ஷினி வெங்காயத்தை ஊறவைத்து தான் செய்யனும்.ப்ரிட்ஜில் வைக்க வேணாம்.வெளியில் வைத்தாலே போதும்.நல்ல வெயிலில் ஈரம் போக காயவைக்கனும்.அப்போ தான் கெடாது.

Geetha Achal said...

உங்க வடகம் குறிப்பினை பார்த்து செய்த வைத்து இருக்கின்றேன்..

அம்மாகிட்ட இருந்து ஒரே பாராட்டு மழைதான் போங்க மேனகா..

அப்புறம் தான் அம்மாகிட்டே சொன்னே, அம்மா இன்னைக்கும் காலையில மேனகாகிட்ட பேசினேன் இல்ல...அவங்க தான் இதனை சொல்லி கொடுத்தாங்க...

அதே போல மதியம் வத்தல் பொரித்தேன்...அம்மா ரொம்ப சந்தோசம் பட்டாங்க மேனகா...நன்றி.

Mrs.Menagasathia said...

அம்மா சந்தோஷப்பாட்டாங்களா அப்போ எனக்கும் சந்தோஷம் தான்ப்பா.செய்து பார்த்து பின்னுட்டம் அளித்ததில் சந்தோஷம்+நன்றி கீதா.

தெய்வசுகந்தி said...

நான் இதெல்லாம் உபயோகிச்சதே இல்லை. texasல அடிக்கிற வெய்யிலுக்கு ட்ரை பண்ணி பார்க்கிறேன்.

LK said...

நன்றி

asiya omar said...

இது நான் இதுவரை உபயோகிச்சது இல்லை மேனு.இதற்கு பதில் கடைகளில் கிடைக்கும் வெங்காய வடகத்தை தாளிக்கும் பொழுது போடலாமா?

Mrs.Menagasathia said...

நன்றி தெய்வசுகந்தி!! செய்து பாருங்கள்..

நன்றி எல்கே!!

நன்றி ஆசியாக்கா!! கடையில் விற்பதை உபயோகிக்கலாம் ஆனால் நாம் செய்வதுபோல் வாசனையாக இருக்காது.நானும் இதுவரை கடையில் வாங்கியதில்லை...

Barakath said...

இதை தாளிக்க மட்டும்தான் பயன் படுத்த வேண்டுமா, சும்மா பொருச்சு சாப்டலாமா.............

Mrs.Menagasathia said...

பொரித்து சாப்பிட்டால் கசக்கும்.அதை பொரித்து துவையலாக சாப்பிட்டால் நன்றாகயிருக்கும்.நன்றி பராகத்!!

Mahi said...

இப்போதான் நானும் இந்த குறிப்பை பார்க்கிறேன்.செய்ய ஆசையா இருக்கு,ஆனால் இங்கே சின்னவெங்காயத்தை கண்ணால பார்ப்பதே கஷ்டம் மேனகா.200கிராம் பேக்கட், $2! கொஞ்சமா வாங்கி செய்துபார்க்கிறேன்..அளவுகளை ப்ரபொர்ஷனலா குறைச்சுக்கலாம்தானே?

Mrs.Menagasathia said...

ஆமாம்பா அளவுகளை மாற்றி போட்டுக்கலாம்...செய்து பாருங்கள்..நன்றி மகி!!

Anonymous said...

romba thanks varapora veyilla kandipa seivean ennaku vadakam vasanai romba pidikum vathal kulambu la pota nalla erukum

Geetha6 said...

Super madam!!!

01 09 10