Saturday 4 April 2009 | By: Menaga Sathia

மோர் ரசம் / Mor(Buttermilk) Rasam



தே.பொருட்கள்:
புளித்த மோர் - 1 கப்
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

வறுத்து பொடிக்க:
துவரம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
மிளகு - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2டீஸ்பூன்

தாளிக்க‌
எண்ணெய் - 1/2டீஸ்பூன்
கடுகு- 1/4 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி- 1/8 டீஸ்பூன்

செய்முறை:
*வறுக்க குடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் லேசாக வறுத்துப் நைசாக‌ பொடிக்கவும்.
*மோரில் உப்பு+மஞ்சள்தூள்+கறிவேப்பிலை +1 டேபிள்ஸ்பூன் வறுத்த பொடி+1/2 கப் நீர்  சேர்த்து நன்கு  கலக்கவும்.
*மோர் கலந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து,இடைவிடாமல் கலக்கி கொண்டே இருக்கவும்.லேசாக கொதி வரும் போது இறக்கி தாளித்து சேர்க்கவும்.

4 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

நான் சும்ம தான் தாளித்து மோரை ஊற்றுவேன். இது ரொம்ப விதியாசமாக இருக்கு, ட்ரை பண்ணி பார்க்கிறேன். வெயில் காலத்தில் ரொம்ப நல்லது

Menaga Sathia said...

செய்து பார்த்து சொல்லுங்க பாயிசா!!

தாஜ் said...

மோர் குழம்பு சூப்பர் நானும் ட்ரை பண்ணி பார்க்கறேன்

Menaga Sathia said...

ஹாய் தாஜ் தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி!!செய்துப் பார்த்து சொல்லுங்க.

01 09 10