Sunday 19 April 2009 | By: Menaga Sathia

பொருளாங்கா உருண்டை



தே.பொருட்கள்:
பச்சரிசி[அ]பொன்னி அரிசி - 1 கப்
வெல்லம் - 1/2 கப்
ஏலக்காய் - 1
தேங்காய் துறுவல் - 1/2 கப்
உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

*அரிசியைக் கழுவி தண்ணீரை வடிக்கட்டவும்.அப்போழுது தான் சீக்கிரமாக பொரியும்.

*வடிகட்டிய அரிசியை வெறும் கடாயில் போட்டு அரிசி பொரியும் வரை பொரிக்கவும்.

*ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஏலக்காய் சேர்த்தரைத்து மாவாக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் 1 கப் அரிசிக்கு 21/2 கப் தண்ணீரில் வெல்லம் போட்டு கரைந்ததும் வடிக்கட்டவும்.வடிகட்டிய வெல்லத்தை மறுபடியும் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

*பிசுக்கு பதம் வந்ததும் உப்பு+மாவு சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.

*மாவு நன்கு வந்ததும் இறக்கவும்.[மாவு வேகவில்லை எனில் வெந்நீர் சேர்த்துக் கிளறவும்].

*ஒரு தட்டில் தேங்காய் துறுவலைக் கொட்டவும்.

*நம் கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக உருட்டி தேங்காய்த் துறுவலில் சேர்த்து பிறட்டி எடுக்கவும்.

*இப்போழுது சுவையான உருண்டை ரெடி.

பி.கு:

இதில் தேங்காய் சேர்த்து இருப்பதால் அன்றே உபயோக்கிக்கனும்.எங்கம்மா செய்யும் இனிப்பில் இதுவும் ஒன்று எனக்கு ரொம்ப பிடிக்கும்.
.

7 பேர் ருசி பார்த்தவர்கள்:

Jaleela Kamal said...

மேனகா ரொம்ப சூப்பர்.
எங்க வீட்ட்லும் பிள்ளைகளுக்குஇது ரொம்ப பிடிக்கும், நானும் அடிக்கடி செய்வேன். ஆனால் என் செய்முறை வேறு உங்களுடையதும் வித்தியாசமாஅ இருக்கு,
அரிசியை வருத்து பொடிப்பது.
அடுத்த முறை செய்து பார்க்கிறேன், மாதம் ஒரு முறை நான் செய்வேன், இது பேர், இனிப்பு உருண்டை, இல்லை என்றால் ஆ உருண்டை என்போம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பொருளாங்கா....என்பதை ஈழத்தில் பொரிவிளாங்கா...என்கிறார்கள் போல் உள்ளது.
இதன் செய்முறை பற்றி எதுவும் தெரியாது. இப்படி ஒரு சாப்பாட்டுப் பண்டத்தை ஈழத்தில் பொரிவிளாங்கா உருண்டை எனக் கூறக்கேட்டது மாத்திரமன்றி அச் சொல் பொருள்+விளங்கா உருண்டை
என்பதே பொரிவிளங்கா என மருவியாதாகக் கேள்விப்பட்டேன்.
பொருள்+ விளங்கா என்பது கூட என்ன என்று தெரியாததால் அப்படி வந்ததாக விளக்கம் கூறினார்கள்.

Menaga Sathia said...

ஜலிலா அக்கா இந்த இனிப்புக்கு நிறைய பெயர் இருக்குப் போல.உங்க செய்முறையும் போடுங்க.செய்து பார்க்கிறேன்.இதை புடலங்கா உருண்டைன்னு கூட சொல்வாங்க.அரிசியை வறுக்காம நீங்க எப்படி செய்வீங்க?

Menaga Sathia said...

யோகன் பாரிஸ் நீங்கள் சொன்ன மாதிரி இதன் பெயர் பொருள் விளங்கா என்பது தான் மருவி பொருளாங்கா உருண்டை என வந்தது.தங்கள் கருத்து எனக்கு மகிழ்ச்சி தருகிறது!!

Jaleela Kamal said...

மேனகா என் செய்முறை ஏற்கனவே அருசுவையில் இருக்கு பாருங்கள், இனிப்பு உருண்டை சோறு என்று இருக்கும்.

Menaga Sathia said...

பார்த்தேன் ஜலிலாக்கா,உங்களுடையது அரிசியை வேகைவைத்து செய்வது வித்தியாசமா இருக்கு,அதையும் செய்துப் பார்க்கிறேன்.

Asiya Omar said...

அருமையான குறிப்பு.பார்க்கவே அதன் ருசி தெரிகிறது மேனகா.

01 09 10