Saturday, 2 May 2009 | By: Menaga Sathia

பீன்ஸ் பொரியல்


தே.பொருட்கள்:

பீன்ஸ் - 1/4 கிலோ
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
பாசிப்பருப்பு - 1 கைப்பிடி
வெங்காயம் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு+உளுத்தப்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

*பீன்ஸ்+வெங்காயம் பொடியாக நறுக்கவும்.பச்சை மிளகாயை கீறவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*பின் பீன்ஸ்+ உப்பு+11/2 கப் தண்ணீர்+பாசிப்பருப்பு செர்த்து வேகவிடவும்.

*காய் வெந்ததும் தேங்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

5 பேர் ருசி பார்த்தவர்கள்:

தாஜ் said...

பீன்ஸ் பொரியல் சூப்பர் பாசி பருப்பு சேர்ர்க்காமல்தான் நான் செய்வேன் இது மாதிறி ட்ரை பன்னுகுறேன்

Menaga Sathia said...

பொரியலுக்கு பருப்பு சேர்த்து செய்தால் ரொம்ப நல்லா இருக்கும்.நன்றி தாஜ்!!

Angel said...

i ve made this poriyal with carrots .im gonna try with beans .

ALHABSHIEST said...

செய்முறை விளக்கியமைக்கு நன்றி.அதில் 11/2 என்று இருக்கிறது.அநேகமாக அது [1½]ஆக இருக்குமெண்ரு நினைக்கிறேன்.அதற்கு 1ண்ணை தட்டச்சிவிட்டு பின்பு Alt அழுத்தி கொண்டு நம்பர் கீ போர்டில் 0189 தட்டச்ச[Alt+0189] ½ கிடைக்கும்.

Menaga Sathia said...

நன்றி ஏஞ்சலின்!! செய்து பார்த்து சொல்லுங்கள்..

நன்றி சிவா!! ஆமாம் அது 1 1/2 தான்.ந்நிங்கள் சொல்லியவாறு தட்டச்சு செய்து பார்த்தேன்,வரவில்லையே....

01 09 10