Saturday 9 May 2009 | By: Menaga Sathia

கோஸ் வெங்காயத்தாள் பொரியல்

தே.பொருட்கள்:

கோஸ் - 1/4 கிலோ
வெங்காயத்தாள் - 1 கட்டு
பச்சை மிளகாய் - 2
பாசிப்பாருப்பு - 1 கைப்பிடி
உப்பு+எண்ணெய் =தேவைக்கு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
செய்முறை:

*கோஸ்+வெங்காயத்தாள்+பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்களைப் போட்டு தாளித்து நறுக்கிய காய்களைப் போட்டு உப்பு+மஞ்சள்தூள்+பாசிப்பருப்பு போட்டு காய் வேகுமளவு நீர்விட்டு வேக வைக்கவும்.

*வெந்ததும் தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.

பி.கு:
இதே மாதிரி வெங்காயத்தாளை கேரட் பொரியலிலும் சேர்த்து செய்யலாம்.

4 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

கோஸ் வெங்காயத்தாள் பொரியல் இது புதுவித கூட்டாக இருக்கு..

Menaga Sathia said...

ஆமாம்பா,இந்த குறிப்பை எங்கக்கா கிட்ட கத்துக்கிட்டது.

Perspectivemedley said...

wow, pudhu combination!.. idhu rendum combo rombha nalla irukum :), adutha thadavai, naan cabbage seirappo, idhai seiren, thank you :)

Menaga Sathia said...

அடுத்தமுறை செய்து பார்த்து சொல்லுங்கள்.இதே முறையில் கேரட்,முள்ளங்கியிலும் செய்யலாம்.நன்றி தேவி!!

01 09 10