பெங்களூர் தக்காளி - 1/2 கிலோ
சர்க்கரை - 1 1/4 கப்
ஏலக்காய் - 4
முந்திரி,திராட்சை - விருப்பத்துகேற்ப
உப்பு - 1 சிட்டிகை
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
*தக்காளியை கொதிக்கும் நீரில் 10நிமிடம் போட்டு வைக்கவும்.ஏலக்காயை பொடிக்கவும்.
*பின் அதன் தோலை எடுத்து மிக்ஸியில் அரைக்கவும்.
*கடாயில் 1 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு முந்திரி,திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும்.அதே கடாயில் அரைத்த தக்காளியை போட்டு கிளறி விடவும்.
*தீயை சிம்மில் வைக்கவும்,கொதிக்கும் போது மேலே படும்.
*தக்காளி நன்கு வெந்து சுருண்டி வரும் போது உப்பு+சக்கரையை போடவும்.
*சக்கரை கரைந்து நன்கு சுண்டி வரும் சமயத்தில் ஏலக்காய்,வருத்த முந்திரி,திராட்சை மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
*சுவையான தக்காளி இனிப்பு ரெடி.
7 பேர் ருசி பார்த்தவர்கள்:
மேனகா ஒரு பார்சல்... ஆமாம்ப்பா இது தக்காளி அல்வா தானே!!!
உங்களுக்கு இல்லாததா ஹர்ஷினி,பார்சல் அனுப்பினேனே வந்ததா,ஆமாம்பா தக்காளி ஹல்வா தான்.நன்றி ஹர்ஷினி அம்மா!!
எங்க வீட்டில் பிரியாணி செய்யும்பொழுது இதை தான் இனிப்புக்கு செய்வாங்க.. எங்க அம்மா செய்முறை போல் இருக்கு..
இந்த குறிப்பை எங்க மாமியாரிடமிருந்து கத்துக்கிட்டேன்பா.தங்கள் கருத்துக்கு நன்றி பாயிசா!!
உங்கள் டெம்ப்ளேட்டும், contentsம் அருமை. நல்லா இருக்கு. கலக்குங்க
பெங்களூர் தக்காளி - 1/2 கிலோ - யப்பா.. சாமி.. ஆளை விடுங்க. அதையே சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்துப்போச்சு.. சும்மா தமாசு.
//உங்கள் டெம்ப்ளேட்டும், contentsம் அருமை. நல்லா இருக்கு. கலக்குங்க// மிக்க நன்றி தமிழ்நெஞ்சம்!!
//பெங்களூர் தக்காளி - 1/2 கிலோ - யப்பா.. சாமி.. ஆளை விடுங்க. அதையே சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்துப்போச்சு.. சும்மா தமாசு.//
உங்களுக்கு நாட்டு தக்காளி கிடைக்காதா?எனக்கு இங்க இந்த தக்காளி கிடைப்பது அரிது.கிடைத்தால் இந்த டிஷ் செய்திடுவேன்.என் கணவருக்கும் ரொம்ப பிடிக்கும்.
Post a Comment