Monday, 18 May 2009 | By: Menaga Sathia

கத்திரிக்காய் இட்லி சாம்பார்/Brinjal Idli Sambhar

தே.பொருட்கள்:

மைசூர் பருப்பு - 1/2 கப்
கத்திரிக்காய் - 6
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 8
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 1
பூண்டுபல் - 5
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு+உளுத்தம்பருப்பு = 1 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசைக்கு
காய்ந்த மிளகாய் - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது

செய்முறை:

*பருப்பை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.

*குக்கரில் பருப்பு+அரிந்த வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய்+பூண்டு+மஞ்சள்தூள்+கத்திரிக்காய்+1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து 5 விசில் வரும் வரை வேகவிடவும்.

*வெந்ததும் தாளிக்க குடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.

*பின் உப்பு+கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

பி.கு:
1 . இட்லி,தோசை,சப்பாத்தி,பூரிக்கு பரிமாறலாம்.
2 . சாம்பார் தண்ணியாக இருந்தால் தோசைமாவோ 1/2 குழிக்கரண்டி அல்லது அரிசிமாவு 1டேபிள்ஸ்பூன் கலந்து கொதிக்கவிட்டால் திக்காக இருக்கும்.
3 . சாப்பிடும் போது சாம்பாரில் 1 ஸ்பூன் நெய்விட்டு கலந்து சாப்பிட்டால் ரொம்ப சூப்பரா இருக்கும்.நெய்யில் தாளிப்பதை விடசாப்பிடும் போது கலந்து சாப்பிட்டால் வாசனை தூக்கலா இருக்கும்.

5 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

மைசூர் பருப்பில் நான் செய்தது கிடையாது மேனகா.. செய்து பார்க்கிறேன்.

Menaga Sathia said...

மைசூர் பருப்புக்கு பதில் துவரம் பருப்பு,பாசிப்பருப்பிலும் செய்யலாம் பாயிசா.செய்து பாருங்க நல்லாயிருக்கும்.

பனித்துளி சங்கர் said...

இன்று சாம்பார் மற்றும் இட்லி சமையல் மிகவும் அருமை . எனக்கு மிகவும் பிடிக்கும் . பகிர்வுக்கு நன்றி

http://rkguru.blogspot.com/ said...

உங்கள் பக்கத்தின் குறிப்பே எங்கள் விட்டின் சமையலாக இருக்கும்.

Menaga Sathia said...

நன்றி சங்கர்!!

நன்றி குரு!! மிகவும் சந்தோஷமா இருக்கு....

01 09 10