Tuesday, 19 May 2009 | By: Menaga Sathia

சிக்கன் பாஸ்தா

தே.பொருட்கள்:

பாஸ்தா - 2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
முட்டை - 1
போன்லெஸ் சிக்கன் - 1/4கிலோ
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
பட்டர் - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

*சிக்கன்+வெங்காயம்+தக்காளி இவைகளை பொடியாக கட் செய்யவும்.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து பாஸ்தாவை போட்டு சிறிது உப்பு+எண்ணெய் விட்டு 10 நிமிடம் வேகவிடவும்.

*வெந்ததும் வடிகட்டி குளிர்ந்தநீரில் அலசி வைக்கவும்.

*கடாயில் பட்டர் போட்டு உருகியதும் வெங்காயம்+தக்காளியை நன்கு மசிக்க வதக்கி சிக்கனை போட்டு குறைந்த தீயில் தண்ணீர் விடமால் வதக்கவும்.

*சிக்கன் வெந்ததும் மிளகுத்தூள் சேர்த்து லேசா வதக்கவியபின் பாஸ்தாவை போட்டு கிளறவும்.தேவையானால் உப்பு சேர்க்கவும்.

*பின் முட்டையை ஊற்றி நன்கு கிளறி வெந்ததும் இறக்கவும்.

*இப்போழுது சுவையான பாஸ்தா ரெடி.

6 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

சிக்கன் பாஸ்தா ரொம்ப சூப்பர் மேனகா

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி பாயிசா!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி Kripa!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஒரு சந்தேகம்.. பாஸ்தான்னா என்ன?

Menaga Sathia said...

பாஸ்தா என்பது மைதாவில் செய்யப்படும் ஒரு உணவு.மக்ரோனின்னும் சொல்வாங்க,இந்தியாவிலும் கிடைக்குது.மக்ரோனி,பாஸ்தா,ஸ்பகடி[சேமியா மாதிரி இருக்கும்]எல்லாம் ஒன்னுதான்னு நினைக்கிறேன்.பலவகை மாடலில் கிடைக்கும்.

Ahamed irshad said...

பாஸ்தா இப்பதான் கேள்விபடுகிறேன். பாஸந்தி எனக்கு ரொம்ம்ம்ம்ப்ப பிடிக்கும்..

01 09 10