தே.பொருட்கள்:
பூரி - 5
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1
வெங்காயம் - 1 சிறியது
தக்காளி - 1 சிறியது
ஓமப்பொடி - 1/4 கப்
துருவிய மாங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்
துருவிய வெள்ளரி - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
இனிப்பு சட்னி - 2 டேபிள்ஸ்பூன்
புதினா சட்னி - 2 டேபிள்ஸ்பூன்
புதினா சட்னி :
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லி - 1 கைப்பிடி
வெல்லம் - 1 சிறுகட்டி
பச்சை மிளகாய் - 1
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
* இவை அனைத்தும் மிக்ஸியில் அரைக்கவும்.
இனிப்பு சட்னி:
பேரிச்சை பழம் - 5
உலர் திராட்சை - 5
புளி - 1 கொட்டைபாக்களவு
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
வெல்லம் - 1 சிறு கட்டி
* இவை அனைத்தும் 1/2 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேகவைத்து,அரைத்து வடிக்கட்டவும்.
செய்முறை:
*பூரியை நொறுக்கிக் கொள்ளவும்.வெங்காயம்+தக்காளியை விதை நீக்கி பொடியாக அரியவும்.
*அனைத்தையும் ஒன்றாக கலந்து பறிமாறவும்.
பி.கு:
இதில் 1/4 கப் பொரி சேர்க்கவும்.எனக்கு கிடைக்காததால் சேர்க்கவில்லை.விருப்பப்பட்டால் பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழையும் சேர்க்கலாம்.
14 பேர் ருசி பார்த்தவர்கள்:
எப்படி மேனகா...இப்படி எல்லாம்...கலக்குறீங்க போங்க...அருமையாக இருக்கின்றது..படங்கள் மிக தெளிவாக அழகாக இருக்கின்றது..அனைவரும் சொல்வது போல professional photographer தான் போங்க...
மேனகா எனக்கு ரொம்ப பிடிச்சது இங்கு முன்பு அடிக்கடி சாப்பிடுவோம்,
நேற்று தான் பேரிட்சை சட்னி செய்தேன், ஊருக்கு பையனுக்கு எடுத்து செல்ல. ஒகே பை நாளைக்கு கிளம்புகிறேன்.
மேடம் பேல் பூரி இந்த பதிவை மட்டுமில்ல எல்லாத்தையும் காப்பி பண்ணி ஸ்டோர் பண்ணிட்டேன்
பின்னாடி ரொம்ப உதவியா இருக்கும்ல
அதான்.....
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கீதா!!.எனக்கு திருப்திவரும் வரை ஒரு படத்தை எடுப்பேன் கீதா.
ஊருக்கு நல்லபடியாக போய்ட்டு வாங்கக்கா.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!!
ம்ம் வருங்கால மனைவிக்காக இப்போதே எல்லாத்தையும் காப்பி செய்துட்டீங்களா.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி வசந்த்.உங்கள் பதிவுகள் அனைத்தும் நகைச்சுவையாக இருக்கு.
உங்கள் பதிவுகள் அனைத்தும் சுவையாக இருக்கிறது உங்கள் உணவுகளைப்போல்....
தொடருங்கள் வாழ்த்துக்கள்
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
Super
தங்கள் வாழ்த்திற்க்கும்,கருத்திற்க்கும் நன்றி சந்ரு!!
என் பதிவை இணைத்ததற்க்கு நன்றி செய்திவளையம் குழுவினருக்கு..
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி இங்கிலீஷ்காரன்!!
இது தான் வேற்றுமையில் ஒற்றுமை.. எல்லா மாநில சாப்பாட்டையும் செஞ்சு அசத்துறீங்க..
ஏதோ எனக்கு தெரிந்ததை செய்கிறேன்,தங்கள் கருத்துக்கு நன்றி ராஜ்!!
Post a Comment