Thursday, 23 July 2009 | By: Menaga Sathia

குடமிளகாய்த் தொக்கு

தே.பொருட்கள்:

பச்சை கலர் குடமிளகாய் - 1 பெரியது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
மிளகாய்த்தூள் - 1/4 டேபிள்ஸ்பூன்
கெட்டி புளிசாறு - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

கடுகு+உளுத்தம்பருப்பு = 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது


செய்முறை:

*குடமிளகாயை விதைகளை நீக்கி நறுக்கவும்.

*அதை லேசாக எண்ணெய் விட்டு வதக்கி,ஆறியதும் மிக்ஸியில் நீர்விடாமல் அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து மிளகாய்த்தூளை போடவும்.

*உடனே அரைத்த மிளகாய் விழுதைப் போட்டு நன்கு வதக்கவும்.

*நீர் சுண்டியதும் உப்பு+புளிசாரு சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வதக்கி இறக்கவும்.


பி.கு:

ரசம்,சாம்பார்,தயிர் சாதத்துக்கு மிகநன்றாக இருக்கும்.விருப்பப்பட்டால் சிறிது வெல்லம் சேர்க்கலாம்.

15 பேர் ருசி பார்த்தவர்கள்:

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்லா இருக்கும் போல இருக்கே!!!

Unknown said...

உங்கள் சமையல் கலையினை மிஞ்ச வேறு ஆளில்லை.. அருமை மேனகா.. சமையல் ராணி னு ஒரு பட்டம் உங்களுக்கு கொடுக்கலாம்..

பொன் மாலை பொழுது said...

உங்க செய்முறை குறிப்புகளை படிக்க ஆரம்பித்த பின் key board மீது பாதுகாப்பாக சில cleanex பேப்பர்களை வைத்துக்கொள்ளும் பழக்கம் வந்துவிட்டது!

Admin said...

உங்கள் சமையல் பிரமாதமா இருக்கே... வாழ்த்துக்கள்...

சிங்கக்குட்டி said...

குடமிளகாய்த் தொக்கு கேள்வி பட்ததில்லை, இந்த வீக்எண்டுல பண்ண முயற்சி செய்து பார்கிறேன் தகவலுக்கு நன்றி :-)

Menaga Sathia said...

செய்து பாருங்க ராஜ்,நல்லாயிருக்கும்.நன்றி!!

Menaga Sathia said...

குடமிளகாய் வாங்கி வந்தார்,அதை தூக்கி போட மனமில்லாமல் இப்படி செய்து பார்த்தேன்பா.தங்கள் கருத்துக்க மிக்க நன்றி பாயிஷா!!

Menaga Sathia said...

//உங்க செய்முறை குறிப்புகளை படிக்க ஆரம்பித்த பின் key board மீது பாதுகாப்பாக சில cleanex பேப்பர்களை வைத்துக்கொள்ளும் பழக்கம் வந்துவிட்டது!//
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மாணிக்கம் சார்!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி சந்ரு!!

Menaga Sathia said...

செய்து பாருங்கள் நன்றாக வரும்.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சிங்கக்குட்டி!!

dharshini said...

வித்யாசமாக இருக்கு மேனகா.. நானும் முயற்சி செய்கிறேன்.

Menaga Sathia said...

வாங்க தர்ஷினி,நீங்க தமிழ்குடும்பத்தில் வருபவர் தானே.செய்து பாருங்கப்பா நன்றாகயிருக்கும்.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தர்ஷினி!!

Asiya Omar said...

கொடைமிளகாயில் தொக்கு சூப்பர்.

Chef.Palani Murugan, said...

கொக்ஸ் மாதிரி இட்லிக்குகூட‌ தொட்டுக்க‌லாம்.

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

நன்றி செஃப்!!

01 09 10