தே.பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
தேங்காய்ப்பால் - 3/4 கப்
சர்க்கரை - 3/4 கப்
உப்பு - 1 சிட்டிகை
நெய் - 3 டீஸ்பூன்
முந்திரி திராட்சை - தேவைக்கு
ஏலக்காய் - 2
செய்முறை:
*அரிசியைக் கழுவி 11/2 கப் தண்ணீரில் ஒரு பாத்திரத்தில் வேகவைக்கவும்.
* தண்ணீர் சுண்டி வரும் போது தேங்காய்ப்பால் ஊற்றவும்.
*அரிசி வேகாமல் இருந்தால் மேலும் சிறிது நீர் சேர்த்து வேகவைக்கவும்.
*அரிசி வெந்ததும் சர்க்கரை+உப்பு சேர்க்கவும்.
*நன்கு நீர் சுண்டி வரும் போது ஏலக்காய்ப்பொடி+நெய்யில் வறுத்த முந்திரி திராட்டை+மீதமிருக்கும் நெய் சேர்த்து இறக்கவும்.
பி.கு:
இந்த பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
9 பேர் ருசி பார்த்தவர்கள்:
பக்கத்து வீட்டில் இன்று வரலெட்சுமி பூஜைனு எனக்கு சர்க்கரை பொங்கல் தந்தாங்க இப்ப தான் சாப்பிட்டுவிட்டு வரேன்.இந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் பொங்களையே ருசித்தது போல் உணர்வு..
Hmmmm.. My favourite Dish is Sugar Pongal...
நாங்க பூஜைன்னு செய்தால் தவறாமல் சர்க்கரைப் பொங்கல் இருக்கும்ப்பா.தாங்கள் தொடர்ந்து பின்னுட்டம் அளித்து வருவது மகிழ்ச்சி+நன்றிகள்!!
தாங்கள் தொடர்ந்து பின்னுட்டம் அளித்து வருவது மகிழ்ச்சி+நன்றிகள் ராஜ்!!
வரலஷ்மி பூஜை வாழ்த்துக்கள்,
மேனகா ஸ்பெஷல் தேங்காய் பால் சர்க்கரைஇதற்கு விரதம் இருப்பீர்களா? பொங்கல் சூப்பர்,
சர்க்கரை பொங்கல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
நன்றி ஜலிலாக்கா!!
//மேனகா ஸ்பெஷல் தேங்காய் பால் சர்க்கரைஇதற்கு விரதம் இருப்பீர்களா?//புரியலையே????
இன்னைக்கு எங்க வீட்லே சாமிக்கு உங்க ”தேங்காய்ப்பால் சர்க்கரைப் பொங்கல்"... தேங்காய்பால் விட்டு செய்தது இது தான் முதல் முறை...அளவும் எல்லாம் சரியாக இருந்தது...சுவையும் பிரமாதம்.
செய்துப் பார்த்து பின்னூட்டம் அளித்ததற்க்கு மிக்க நன்றி ஹர்ஷினி அம்மா.அனைவருக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
Post a Comment