தே.பொருட்கள்:
மைதா - 1 கப்
உப்பு - 1 பிஞ்ச்
உருக்கிய டால்டா (அ) நெய் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
பூரணத்துக்கு:
ரவை - 1/2 கப்
மெல்லிய சேமியா -1/2 கப்
சர்க்கரை - 3/4 கப்
தேங்காய்த்துறுவல் - 3/4 கப்
பொடித்த ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
முந்திரி,திராட்சை - தேவைக்கு
செய்முறை:
*மைதா மாவில் உப்பு+நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
*தேங்காயை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வதக்கி தனியாக வைக்கவும்.
*பின் நெய் விட்டு முந்திரி+திராட்சையை வதக்கி ரவை+சேமியாவை பொன் முறுவலாக வறுக்கவும்.
*ஒரு பாத்திரத்தில் வதக்கிய தேங்காய்+ஏலக்காய்த்தூள்+ரவை+சேமியா+முந்திரி +திராட்சை+சர்க்கரை அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
*இப்போழுது பூரணம் ரெடி.
*மைதாமாவை நன்கு பிசைந்து சிறு சிரு உருண்டைகளாக்கி மெல்லியதாக பூரி போல் தேய்க்கவும்.
* தேய்த்த பூரியில் பூரணத்தை வைத்து நன்றாக ஓரங்களை மடித்து அல்லது சோமாஸ் கட்டரில் வெட்டி எடுக்கவும்.
*பின் மிதமான எண்ணெய் சூட்டில் பொரிக்கவும்.சுவையான சோமாஸ் ரெடி.
கவனிக்க:
* மைதாவை நன்கு ஊறவைத்து பிசைவதால் சோமாஸ் நன்றாக இருக்கும்.பிசையும் போது வெந்நீர் ஊற்றி பிசைந்தால் சீக்கிரம் நமத்து போகாது.
* பூரணத்தை வைத்த பிறகு ஓரங்களை நன்றாக மடிக்கவும் இல்லையெனில் பொரிக்கும் போது எண்ணெயில் கொட்டும்.எண்ணெயை ரொம்ப சூடாக இருக்ககூடாது.
*நான் ஓரங்களை மடித்து செய்ததால் இந்த அளவுகள் சரியாக இருக்கும்.சோமாஸ் அச்சியில் செய்தால் அளவுகள் ஒரே சீராக இருக்கும்,சோமாஸும் அதிகமா வரும் ஆனால் பூரணம் இன்னும் அதிகமா செய்யனும் மற்றும் வேலை அதிகமா இருக்கும்.
*இந்த அளவில் செய்ததில் 15 சோமாஸ் வந்தது.
*10 சோமாஸ் செய்ததும் பொரிக்கவும்,பின் மறுபடியும் உருட்டி பொரிக்கவும்.மொத்தமாக பொரித்தால் சோமாஸ் காய்ந்துபோய் எண்ணெயில் பொரிக்கும் போது பூரணம் கொட்டும்.
*சேமியா இல்லையெனில் வெறும் ரவை மட்டும் போட்டு செய்யலாம்.
*இன்னொரு வகை பூரணம் செய்ய பொட்டுக்கடலை மாவு 1/2 கப்+பொடித்த சர்க்கரை 1/2 கப்+ஏலக்காய்த்தூள் 1/4 டீஸ்பூன்+தேங்காய்த்துறுவல் 1/2 கப்.தேங்காயை வறுத்து ஆறியதும் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.படங்களில் இருப்பது இந்த பூரணம் வைத்து செய்தது.

31 பேர் ருசி பார்த்தவர்கள்:
ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் எனக்கு நொம்ப்ப்ப்ப்ப் புடிச்ச ஐட்டம் பார்த்துக்கிட்டே இருக்கேன் :))))
புரொசீஜர் நோட் பண்ணிக்கிறேன் பிறகு வாய்ப்பு கிடைக்கும்போது செஞ்சு அசத்திப்புடறேன் :)
நன்றி!
SHASHIGA
ithuthaan naan tharpothu en relatives and friends ikku anupik kondu irukum link
newly married girls visit ur blog and told VOW and FANTASTIC
thanks Menagasathiya for healthy receipes
looks inviting...
ஹையோ!! 25 சேமாஸ்ல எனக்கு ஒன்னு கூட தரவில்லை. அழுதுருவேன். நல்ல இருக்கு. நாங்க பண்ணதுல்லை, ஆனா தீபாவளிக்கு யாராது வீட்டில் கொடுப்பார்கள். சாப்பிட்டுயுள்ளேன். நன்றி.
Good One
menaga
thanks for the recipe.soon i will give my feedback.
anita
மேனகா
சோமாஸ் எல்லாம் கண்ணால் பார்த்தே ரொம்ப நாள் ஆகிறதே... இப்போ பார்த்ததே சாப்பிட்ட திருப்தி எனக்கு...
வாழ்த்துக்கள்...
ஆமாம்... தீபாவளிக்கு என்னென்ன ஸ்வீட்ஸ், காரம் பண்ணி அசத்த போறீங்க??
//*இந்த அளவில் செய்ததில் 25 சோமாஸ் வந்தது.//
ஒரு 20% ஒதுக்கீடு பண்ணினா கூட எனக்கு 5 கிடைக்குமே / வருமே... கிடைக்குமா??
Yennaku romba pidicha item, saapitu naal achu..Deepavali pallakaram start panniyachu pola irruke..
என்ன சோமாஸ் ஸ்பெஷலா? ஜலீலாவும் சோமாஸ், இங்கேயும், ம்ம்ம், கலக்குங்க!! தீபாவளி சமயத்தில் போலின்னு ஒன்னு செய்வாங்களே அதுவும் இதே முறைதானா? எனக்கு பிடித்த பலகாரம், தெரிந்தால் பதிவில் போடுங்களேன். அடவான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
இந்த வாரம் தான் எல்லாம் செய்யனும்..சூப்பர்ப்..
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஆயில்யன்!!
//SHASHIGA
ithuthaan naan tharpothu en relatives and friends ikku anupik kondu irukum link
newly married girls visit ur blog and told VOW and FANTASTIC
thanks Menagasathiya for healthy receipes// மிகவும் சந்தோஷமா இருக்குங்க.தங்கள் கருத்துக்கு நன்றி தேனம்மை!!
நன்றி அம்மு!!
25 சோமாசும் எடுத்துக்குங்க பித்தன்,அழாதீங்க.ஏன் நீங்க செய்ய மாட்டீங்க?தங்கள் கருத்துக்கு நன்றி பித்தன்!!
நன்றி நவாஸ்!!
நன்றி சாராம்மா!!கிறிஸ்துமஸ் செய்து பார்த்து சொல்லுங்க.நன்றாக வரும்.
ஏன் கோபி இந்தியா போய் எத்தனை வருஷம் ஆகுது?.பார்சல் அனுப்புறேன்,சாப்பிடுங்க. தினம் ஒரு ஸ்பெஷல் வரும் பாருங்க...அது மட்டும் சஸ்பென்சஸ்....
எல்லா சோமாசும் நீங்களே எடுத்துக்குங்க.அதுல பித்தன் அவர்களுக்கு பாதி கொடுத்துடுங்க.இல்லைன்னா அவர் அழுவார்.நன்றி கோபி!!
ஆமாம் ப்ரியா நேற்றிலிருந்து ஆரம்பித்துவிட்டேன்.நீங்கள் செய்யவில்லையா?நன்றி தங்கள் கருத்துக்கு!!
இனிப்பு விரும்புவதில்லை
அதுவும் தான் ...
இருப்பினும் தங்கமணிக்கு புடிக்கும்
வாறாங்க விரைவில் - சொல்லிடுவோம்
ஆமாம் ஷஃபி,நீங்கள் சொல்வது சுகியன் என்று நினைக்கிறேன்.விரைவில் செய்து போடுகிறேன்.நன்றி தங்கள் கருத்துக்கு!!
இனி செய்து அசத்துங்க கீதா.அம்மாவுடன் தீபாவளியை நல்லா எஞ்சாய் பன்னுங்க.நன்றி தங்கள் கருத்துக்கு!!
தீபாவளி பலகாரம் சீக்கிரமே ஆரம்பிச்சுட்டீங்க போல. நல்லா இருக்குங்க. நான் இது செஞ்சதில்லை. ட்ரை பண்ணி பார்க்கிறேன்.
அழகான விளக்கம்
ஆமாங்க பலகாரம் செய்ய ஆரம்பித்தாச்சு.செய்து பாருங்க நன்றாக இருக்கும்.நன்றி சுகந்தி!!
நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்!!
ஓஓ அண்ணி வந்ததும் சொல்லுங்க.தங்கள் கருத்துக்கு நன்றி ஜமால்!!
1. இது என் பையனுக்கு ரொம்ப பிடித்த அயிட்டம் பல பில்லிங்கில் இதை மாதம் ஒரு முறை சோமாஸை செய்து பள்ளிக்கு அனுப்ப்புவேன்.
2. நாங்க கசகசா, எள் தேங்காய், சர்க்கரை , நட்ஸ் வகைகள் சேர்த்து நோன்பில் கண்டிப்பாக ஒரிருநாள் இது உண்டு.
3. அதுவும் இல்லாமல் அல்வா பூரி என்று (நேர்ந்து கொண்டு வருடம் ஒரு முறை ஒரு நாளில் ரொம்ப சுத்தபத்தமாக செய்வார்கள்)
4. ஆனால் இந்த பில்லிங் நான் வைத்ததில்லை. இது சேமியா ரவையை நெயில் வருத்து அதை அப்படியே கலக்கனுமா? இந்த முறைபையன் வரும் போது உங்கள் முறையில் செய்து கொடுக்கவேண்டியது தான்.
5 ஆனால் இந்த ரவை பில்லிங் நான் பேபி கேர் செய்யும் போது அந்த பொண்ணின் அம்மா கிருஸ்மஸ்க்கு செய்து கொடுத்தார்கள், ஒரே ஒரு முறை சாப்பிட்டதா ஞாபகம்.
தங்கள் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்திற்க்கு நன்றி ஷஃபிக்ஸ்!!
ரவை சேமியா பில்லிங்கை நெய்யில் வறுத்துதான் சேர்க்கனும்.அப்போதான் ரவை வறுப்பட்டு சாப்பிட நல்லாயிருக்கும்.தங்கள் கருத்திற்க்கு நன்றி ஜலிலாக்கா!!
நீங்க தஞ்சாவூரா? எங்க ஆத்தா இருந்தப்ப எப்பவுமே இந்த சோமாஸ் வீட்டில் இருக்கும். எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப நாளைக்கு அப்புறம் என் மணைவி செய்து கொடுத்தார்கள். ஆச்சரியம் என் மகனுக்கும் இது ரொம்ப பிடித்திருக்கிறது. மிக்க நன்றி.
இல்லைங்க.பாண்டிச்சேரி சொந்த ஊர்.உங்க மகனுக்கும் பிடித்ததில் சந்தோஷம்.செய்து பார்த்து கருத்து தெரிவித்ததில் மிக்க மகிழ்ச்சி+நன்றி kaartzin!!
this is the firsttime see yourblog.very nice
நன்றி சானா!!
Post a Comment