சகோதரர் தமிழ்நெஞ்சம் அவர்களின் தளத்தில் 3 நிமிடத்தில் பரோட்டா செய்வதெப்படி? என்று ஒரு வீடியோ பதிவு போட்டுள்ளார்.அதைப் பார்த்து நான் செய்த பரோட்டா ஒரளவுக்கு நன்றாக வந்தது.இப்போழுது தான் முதன்முதலில் பரோட்டா செய்தேன்.வீடியோவுடன் எளிதாக இருந்ததில் செய்வதற்க்கு ஈஸியாக இருந்தது.அவருக்கு மனமார்ந்த என் நன்றி!!
தே.பொருட்கள்:
பரோட்டாவுக்கு:
மைதா - 5 கப்
சர்க்கரை - 4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபில்ஸ்பூன்+தேவைக்கு
நெய் 2 டேபிள்ஸ்பூன்
குருமாவுக்கு:
முட்டை - 6
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
மல்லித்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2
செய்முறை :
*மைதா+உப்பு+நெய்+சர்க்கரை+1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மாவை நன்கு தளர பிசைந்து ஈரத்துணி போட்டு மூடி ஊறவிடவும்.
*ராத்திரி செய்வதாக இருந்தால் காலையிலேயே பிசைந்து வைக்கலாம்.
*ஊறிய மாவை நன்கு அடித்து தேவையான அளவில் உருண்டைகள் போடவும்.
*ஒவ்வொரு உருண்டையின் போல் எண்ணெய்த் தடவி மறுபடியும் ஈரத்துணியால் மூடி 1/2 மணிநேரம் ஊறவிடவும்.
*பின் உருண்டையை பூரிக்குத் தேய்ப்பது போல் தேய்த்து கையால் நன்கு அடிக்கவும்.அதாவ்து கிழிந்த பனியன் போல நன்கு அடிக்கவும்.
*அதை அப்படியே சுருட்டி அதன் மேல் எண்ணெய்த் தடவி வைக்கவும்.இப்படியாக அனித்து உருண்டைகளை செய்யவும்.
* கடாய் காயவைத்து உருட்டிய உருண்டையை எண்ணெய் தொட்டு கையால் தட்டி வேகவைத்து எடுக்கவும்.
*4 பரோட்டக்கள் சுட்டதும் 2 கையாலும் பரோட்டகளை தட்டவும்.அப்போழுது தான் லேயராக வரும்.
*முட்டையின் வெள்ளைகரு+மஞ்சள்கரு தனியாக பிரிக்கவும்.
*வெள்ளைகரு நன்கு அடித்து கடாயில் ஊற்றி பொடிமாஸ் போல கொத்தி எடுத்து தனியாக வைக்கவும்.
*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காய்ம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+கரம்மசாலா+தூள்வகைகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.
*தேவையானளவு நீர் விட்டு கொதிக்க விடவும்.
*கொதித்ததும் மஞ்சள்கருவை ஒவ்வொன்றாக ஊற்றி வேகவிடவும்.
*மஞ்சள் கரு வெந்ததும் பொடித்த வெள்ளைக்கருவினை போட்டு ஒரு கொதி கொதித்ததும் இறக்கவும்.
*பரோட்டவுடன் பறிமாறவும்.
தே.பொருட்கள்:
பரோட்டாவுக்கு:
மைதா - 5 கப்
சர்க்கரை - 4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபில்ஸ்பூன்+தேவைக்கு
நெய் 2 டேபிள்ஸ்பூன்
குருமாவுக்கு:
முட்டை - 6
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
மல்லித்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2
செய்முறை :
*மைதா+உப்பு+நெய்+சர்க்கரை+1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மாவை நன்கு தளர பிசைந்து ஈரத்துணி போட்டு மூடி ஊறவிடவும்.
*ராத்திரி செய்வதாக இருந்தால் காலையிலேயே பிசைந்து வைக்கலாம்.
*ஊறிய மாவை நன்கு அடித்து தேவையான அளவில் உருண்டைகள் போடவும்.
*ஒவ்வொரு உருண்டையின் போல் எண்ணெய்த் தடவி மறுபடியும் ஈரத்துணியால் மூடி 1/2 மணிநேரம் ஊறவிடவும்.
*பின் உருண்டையை பூரிக்குத் தேய்ப்பது போல் தேய்த்து கையால் நன்கு அடிக்கவும்.அதாவ்து கிழிந்த பனியன் போல நன்கு அடிக்கவும்.
*அதை அப்படியே சுருட்டி அதன் மேல் எண்ணெய்த் தடவி வைக்கவும்.இப்படியாக அனித்து உருண்டைகளை செய்யவும்.
* கடாய் காயவைத்து உருட்டிய உருண்டையை எண்ணெய் தொட்டு கையால் தட்டி வேகவைத்து எடுக்கவும்.
*4 பரோட்டக்கள் சுட்டதும் 2 கையாலும் பரோட்டகளை தட்டவும்.அப்போழுது தான் லேயராக வரும்.
*முட்டையின் வெள்ளைகரு+மஞ்சள்கரு தனியாக பிரிக்கவும்.
*வெள்ளைகரு நன்கு அடித்து கடாயில் ஊற்றி பொடிமாஸ் போல கொத்தி எடுத்து தனியாக வைக்கவும்.
*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காய்ம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+கரம்மசாலா+தூள்வகைகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.
*தேவையானளவு நீர் விட்டு கொதிக்க விடவும்.
*கொதித்ததும் மஞ்சள்கருவை ஒவ்வொன்றாக ஊற்றி வேகவிடவும்.
*மஞ்சள் கரு வெந்ததும் பொடித்த வெள்ளைக்கருவினை போட்டு ஒரு கொதி கொதித்ததும் இறக்கவும்.
*பரோட்டவுடன் பறிமாறவும்.
37 பேர் ருசி பார்த்தவர்கள்:
menaga
it looks so delicious.thanks for the recipe.
anita
yummy parotta and delicious kurma
கிழிந்த பனியன்......
ஆஹா............. சரியான எடுத்துக்காட்டு:-))))))))))))
மேனகா, அப்படியே சில்லிபரோட்டா எப்படி செய்வது என்று சொன்னிங்கன்னா.. என்னைப் போன்றவர்கள் ஜென்ம சாபல்யம் அடைவோம்.
சூப்பர் மேனகா... பரோட்டா பார்த்தா கடையில் வாங்கின மாதிரியே செய்து இருக்கீங்க..ம்ம் நானும் ட்ரை பன்னி பாத்துட்டு சொல்லரேன் சப்பாத்தியா வரலேன்னா சரின்னு இங்கே ஒருத்தர் என்வோ சொல்லரார்... .ம்ம்ம் ஒரு பார்சல் பிளிஸ் :-)
முட்டையை உடைத்து ஊற்றி செய்யும் குருமா.டிரை பண்ணிபார்க்கின்றென் மேனகா.எனக்கு முட்டை குருமா,பரோட்டா காம்பினேஷன் மிகவும் பிடிக்கும்.
முதலில் செய்யும் புரெட்டாவே இவ்வளவு நல்லா வந்துருக்கா. குட். ஆனா முட்டைக் குருமாக்கு பதில் நவரத்தினக் குருமா என்னும் வெஜிட்டபிள் குருமா போட்டா சூப்பரா இருக்கும். நன்றி. நான் இன்னும் ஒரு மாதத்திற்க்கு இட்லி தோசைதான், பூண்டு. மசாலாக் கிடையாது. ஆதலால் அப்புறம் எடுத்துக் கொள்கின்றேன். நன்றி.
அருமையான் ரெசிப்பி
ஆகா. என்ன ஒரு ஒற்றுமை. இன்னிக்கு காலைல இதுதான் என்னோட ப்ரேக்ஃபாஸ்ட்.
Mutta kurma, parotta summa kalakuringaa Menaga..
நன்றி சாராம்மா!!
நன்றி ஷாமா!!
நன்றி துளசி டீச்ச்ர்!!
நன்றி துரை!!இதோ வருகிறேன் தங்கள் வலைப்பக்கத்துக்கு..
சில்லி பரோட்டானா கொத்து பரோட்டாவா?கொத்து பரோட்டா தான் தெரியும் எனக்கு.நன்றி கோபி ப்ரதர்!!
பூண்டு,வெங்காயம் இல்லாத என்ன சமையல் செய்வீங்கன்னு சொல்லுங்க எனக்கு.உங்களுக்காக ஸ்புஷல் குருமா 1 மாதம் கழித்து அனுப்புகிறேன்.நன்றி சுதா அண்ணா!!
முயற்சி செய்து பாருங்க,நன்றாக வரும்ப்பா.நான் இப்பதான் ப்ர்ஸ்ட் செய்து பார்த்தேன்.ஒரளவுக்கு நல்லா வந்தது.ப்ரோட்டாவை நன்கு திருப்பி அடிப்பதில் தான் இருக்கு.நன்றி ஹர்ஷினி அம்மா!!
முட்டையை உடைத்து ஊற்றி செய்தால் குருமாவில் முட்டை நிறைய இருக்கறமாதிரி இருக்கும்.நன்றி ஸாதிகா அக்கா!!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பேனாமுனை!!
நீங்களும் காலையில் பரோட்டாதான் சாப்பிட்டீங்களா?ம்ம் எனக்கு கொடுக்காம நீங்கமட்டும் சாப்பிட்டுட்டீங்க...நன்றி நவாஸ் அண்ணா!!
பயப்படாம அடிங்க. அது நம்மைத்திருப்பி அடிக்காது:-)))))))))))))
நன்றி ப்ரியா!!
//பயப்படாம அடிங்க. அது நம்மைத்திருப்பி அடிக்காது:-)))))))))))))// ஹி.. ஹி.. வாங்க டீச்சர்......
எனக்கு புரோட்டா ரொம்ப பிடிக்கும்!
அதனாலயே 9ம் வகுப்பு படிக்கும் போது எங்க ஊரு புரோட்டா மாஸ்டரை (+ எங்க ஸ்கூல் வாட்ச்மேன்) வீட்டுக்கு வரவழைச்சு புரோட்டா போடக் கத்துக்கிட்டேன்.
மாவுப் பந்தை வீசியடித்து பேப்பராக மாற்றும் பக்குவம் கைவசமானதும் எனக்கு நானே மாஸ்டர் பட்டம் கொடுத்துக் கொண்டேன்.
அம்மா குருமா வைப்பார்கள்.. ஆசையாக ஒவ்வொரு வாரமும்... மாவோடு விளையாடி புரோட்டா செய்து சாப்பிட்ட நினைவை சுட்டு எடுத்து பரிமாறிவிட்டீர்கள் எனக்கு! நன்றி!!
இணைப்பில் சொன்ன வீடியோ பார்த்தேன்.. ஸேம் ஸ்டைல்!!
மேனகா பார்க்கவே நல்லா இருக்கு. இந்தியால இருக்கறப்ப இந்த மாதிரி பண்ணினது. இப்பல்லாம் frozen கிடைக்கறதால செய்யறதேயில்ல. ஒரு நாள் செய்யணும்.
கிழிந்த பனியன்!!!
super comedy
நீங்க பரோட்ட நல்லா போடுவீங்களா?அப்போ மறக்காமல் அடுத்த முறை செய்யும்போது பார்சல் அனுப்புங்க.மிக்க நன்றி ஜெகநாதன்!!
நான் ப்ரோசன் பரோட்டாதான் வாங்குவேன்.அது பிடிக்கல.சரி நம்மாளே டிரை பண்ணலாம்ன்னு செய்தேன்.மிக்க நன்றி சுகந்தி!!
//கிழிந்த பனியன்!!!
super comedy//நல்லா சிரிச்சிங்களா சுஸ்ரீ,நன்றி!!
எனக்கு புரோட்டா ரொம்ப பிடிக்கும், பார்சல் பிளிஸ்
உங்களுக்கு இல்லாததா,உடனே பார்சல் அனுப்புகிறேன்.நன்றி செல்வி!!
barotta muttai kurma superb
kurma vithyasama irukku
jamaikiriinga menaka
நன்றி தேனம்மை அக்கா!!
அருமையான முட்டை குருமா
Hi We have tried this dish and it came out well for the first try. Thanks for posting it. Though.. have a question.. The parota wasn't soft. Are we missing a key item to make the parota soft? What do we need to add?
நன்றி இனுல் அலிப்!!
செய்து பார்த்து பின்னூட்டம ளித்ததில் மிக்க மகிழ்ச்சி+நன்றி அனானி!! இன்னும் சாப்டாக வர முட்டை சேர்த்து பிசைந்து பாருங்கள்..நான் பெரும்பாலும் பரோட்டாவில் முட்டை சேர்க்கமாட்டேன்.அதுவே நன்றாக வரும்.நீங்கள் அடுத்த முறை செய்யும் போது முட்டை சேர்த்து மாவை நன்கு மிருதுவாக பிசைந்து நன்கு ஊறவிட்டு அடித்து பிசைந்து உருண்டையாக்கி சுட்டு பாருங்கள்.பழக பழக சரியாக வரும்..
We are veg ppl. No egg, meat, fish, chicken in our food. Anything else can be added in the place of egg?
முட்டையில்லாமல் நான் சொல்லிய விதத்திலேயே செய்து பாருங்கள்...மாவை நன்கு மிருதுவாக பிசையவும்.இதற்க்கு சைட் டிஷ்ஷாக எம்டி சால்னா குருமா லேபிளில் இருக்கு பாருங்கள்..சைவ குறிப்புதான்.நன்றி அனானி!!
i want to contact you..
i want to do this and some good recipe.. pl contact me..
Desingh.R
9789042745
Please join with my blog : desinghraja.blogspot.com
Post a Comment