Thursday, 18 February 2010 | By: Menaga Sathia

சீஸ்-வெஜ் ப்ரெட் பஜ்ஜி

தே.பொருட்கள்:

ப்ரெட் ஸ்லைஸ் - 4
சீஸ் துருவல் - சின்ன பாக்கெட்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 1
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 1
பொடியாக நறுக்கிய கேரட்,கோஸ் - 1/4 கப்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

மேல் மாவுக்கு:

கடலைமாவு - 3 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு - 1 டேபிள்ஸ்பூன்
சுத்தம் செய்த ஒமம் - 1/4 டீஸ்பூன்

செய்முறை :


* கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.


*பின் கேரட்,கோஸ்+மிளகாய்த்தூள்+மஞ்சள்தூள் போட்டு வதங்கியதும் குடமிளகாய்,மசித்த உருளைக்கிழங்கு+உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கி வைக்கவும்.


*மேல் மாவுக்கு கொடுத்துள்ளவைகலில் உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்க்கு கரைக்கவும்.


*ப்ரெட்டின் ஓரங்களை கட் செய்து,ஒவ்வொரு ப்ரெட்டையும் 4 முக்கோணங்களாக வெட்டிக் கொள்ளவும்.


*ஒரு முக்கோண ப்ரெட்டின் மேல் காய்கலவையை வைத்து அதன்மேல் சீஸ்துருவலை வைக்கவும்.பின் அதன்மேல் இன்னொரு முக்கோண ப்ரெட்டை வைத்து மூடவும்.இப்படியாக அனைத்து ப்ரெட்களையும் செய்யவும்.


*கடாயில் எண்ணெய் காயவைத்து ப்ரெட்டை (ஸ்டப்பிங் வெளியே வராதபடி) பஜ்ஜிமாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.


*இதனை கெட்சப்புடன் சாப்பிட சுவையோ சுவை!!

31 பேர் ருசி பார்த்தவர்கள்:

suvaiyaana suvai said...

looks yummy Menaga!

Pavithra Elangovan said...

Oh wow looks yumm , never tried with stuffings inside..

Nithu Bala said...

Lovely presentation..I wish I could grab that plate:-)

Trendsetters said...

love bread pakoda...brings back college memories

malar said...

meen vakayil niraya kurippu koduthu irukeengka hamur fish vakai poodavillai

Priya Suresh said...

Wow superb stuffed bread bajji, konjam inga anupi vidunga..pasikuthu paathathume..

M.S.R. கோபிநாத் said...

Sueprb

வேலன். said...

நலலாயிருக்கு சகோதரி....வாழ்க வளமுடன் வேலன்.

Asiya Omar said...

சூப்பர்.குழந்தைங்க ரொம்ப விரும்பிச்சாப்பிடற டிஷ்.நம்ம மட்டும் என்னவாம்.

kavisiva said...

மேனகா எனக்கு பிடிச்ச ஐட்டமா போடுறீங்களே! டயட் இருக்கனும்னு நினைச்சாலும் ப்ரெட் பஜ்ஜி எக்ஸ்ட்ரா ரெண்டு ரவுண்ட் ஜாகிங் பண்ணிட்டு சாப்பிடுன்னு சொல்லுது :-)

நட்புடன் ஜமால் said...

கெட்ச்சாப் பிடிக்காது

இந்த முறை ரொம்ப பிடிக்கும்

நன்றி.

சாருஸ்ரீராஜ் said...

மேனகா ரொம்ப நல்லா இருக்கு

Chitra said...

Arumai.. i too make bread bajji but not with fillings..will try this for my kid !!

டவுசர் பாண்டி said...

எல்லா காய்கறியும் போட்டு சூப்பரா !! தான் கீது !! பாக்க சொல்லவே நல்லா கீதே !! செஞ்சி பாத்துடுவோம் !!

பித்தனின் வாக்கு said...

மன்னிக்கவும் மேனகா எட்டுப் பதிவுகளை நான் படிக்கவில்லை. இன்று மொத்தமாக படித்து விட்டேன். இப்படி அழகான டிஸ்ஸை நான் கெட்சப்புடன் கொடுத்தால் ஒத்துக் கொள்ள மாட்டேன். தேங்காய் அல்லது வெங்காய காரச் சட்டினியுடன் கொடுக்க வேண்டும். நல்ல டிஷ். பார்க்கவும் மிக அருமை. நன்றி.

Menaga Sathia said...

நன்றி சுஸ்ரீ!!

நன்றி பவித்ரா!!

Menaga Sathia said...

உங்களுக்கு இல்லாததா?நன்றி நிதுபாலா!!


நன்றி Trendsetters!!

Menaga Sathia said...

ஹமூர் மீன் வாங்கினால் நிச்சயம் குறிப்பு போடுகிறேன்.நன்றி மலர்!!


தாராளமா செய்து பார்சல் அனுப்புகிறேன்.நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

நன்றி கோபி அண்ணா!!


நன்றி வேலன் அண்ணா!!

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!என் பொண்ணுக்காக செய்தேன் ஆனால் நாந்தான் அதிகமா சாப்பிட்டேன்.


ப்ரெட் பஜ்ஜி சாப்பிட்டுட்டு டயட் இருங்கப்பா.நன்றி கவி!!

Menaga Sathia said...

கெட்சப்புடன் சாப்பிட்டு பாருங்கள்.இன்னும் வேணும்னு நிறைய சாப்பிடுவோம்.நன்றி சகோ!!

நன்றி சாரு அக்கா!!

Menaga Sathia said...

ஸ்டப்பிங்குடன் செய்து பாருங்கள்.குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.நன்றி சித்ரா!!

செஞ்சி பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க.நன்றி அண்ணாத்தே!!

Menaga Sathia said...

மன்னிப்பெல்லாம் எதற்க்கு சகோ!!வேலை பளு அதிகமா இருதால் என்ன செய்யமுடியும்.எப்படியோ எல்லா பதிவையும் படித்திங்களே அதுவே ரொம்ப சந்தோஷம்.உங்களுக்காக இந்த ரெசிபியை ஸ்பெஷல் சட்னியுடன் பார்சல் அனுப்புகிறேன்.நன்றி சுதாண்ணா!!

Thenammai Lakshmanan said...

Yummy.. Delicious.. MENAKA

இனியா said...

Sueprb

Padma said...

Nice presentation. Kids will love these.

Menaga Sathia said...

நன்றி தேனக்கா!!

நன்றி இனியா!!

நன்றி பத்மா!!

Jaleela Kamal said...

ஸ்டஃப்டு வெஜ் பிரெட் பஜ்ஜி அருமை மேனகா

Menaga Sathia said...

நன்றி அக்கா!!

SUFFIX said...

நல்ல ரெசப்பி, நன்றி...

Menaga Sathia said...

நன்றி சகோ!!

01 09 10