Tuesday, 12 October 2010 | By: Menaga Sathia

ஹைதராபாத் மட்டன் பிரியாணி /Hyderabad Mutton Biryani

தே.பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
பாஸ்மதி - 4 கப்
பச்சை மிளகாய் - 3
வறுத்த வெங்காயம் - 1/4 கப்
தயிர் - 150 கிராம்
வரமிளகாய்த்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
புதினா,கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு+நெய் = தேவைக்கு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
இளஞ்சூடான பால் - 1 டேபிள்ஸ்பூன்
குங்கமப்பூ - சிறிதளவு
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
ரம்பை இலை - 2
ஏலக்காய் -2

பிரியாணி மசாலா தயாரிக்க:
தனியாத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த வெந்தயக்கீரை - 1 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
பச்சை ஏலக்காய் - 3
கறுப்பு ஏலககய் - 2
பிரியாணி இலை - 3
ஜாதிபத்திரி - 1
வறுத்த வெங்காயம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:
*மசாலாவுக்கு கொடுத்துள்ள பொருட்களை நைசாக பொடிக்கவும்.

*சுத்தம் செய்த மட்டனில் பிரியாணி மசாலா+தயிர்+உப்பு+வரமிளகாய்த்தூள்+கீறிய பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றாக கலந்து 1 மணிநேரம் ப்ரிட்ஜில் வைக்கவும் அல்லது முதல்நாள் இரவே கலந்து வைக்கலாம்.

*ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் பட்டை+கிராம்பு+ஏலக்காய்+ரம்பை இலை+ உப்பு+அரிசி சேர்த்து 3/4 பதமாக வடித்து ஆறவைக்கவும்.

*பிரஷர் பானில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு+புதினா கொத்தமல்லியை லேசாக வதக்கி ஊறவைத்த மட்டனை சேர்த்து 4 விசில் வரை வேகவைக்கவும்.தண்ணீர் ஊற்ற தேவையில்லை.

*ஒரு பாத்திரத்தில் வேகவைத்த மட்டன் கலவை+சாதம்+நெய்+வறுத்த வெங்காயம்+ வறுத்த முந்திரி(விரும்பினால்)போட்டு எலுமிச்சை சாறு +பாலில் சிறிது குங்கமப்பூ கரைத்து ஊற்றவும்.

*இப்படியாக கலவையை போட்டதும் 10 நிமிடம் தம்மில் போடவும் அல்லது 190°C முற்சூடு செய்த அவனில் 10 நிமிடம் வைக்கவும்.
 

26 பேர் ருசி பார்த்தவர்கள்:

புவனேஸ்வரி ராமநாதன் said...

Superb.

Priya Suresh said...

Wowww paathathume pasikuthu, such a tempting mutton briyani..

SathyaSridhar said...

Hmm,,,,mutton biriyani paarkum poedhe enakku echil ooruthu paa..nalla gama gamannu irukkum biryani.

Unknown said...

Hi,

Arumaiyaana mutton biriyaani...

Dr.Sameena@

www.myeasytocookrecipes.blogspot.com

நட்புடன் ஜமால் said...

சிக்கன்ல போடுங்க ...

Asiya Omar said...

சேர்த்த மசாலா பொருட்கள்,பிரியாணி அருமை.

சசிகுமார் said...

super taste

Jaleela Kamal said...

த்னிஷா குறிப்பு பார்த்து நானும் மசாலா திரித்து வைத்து செய்து இருக்கேன்.
. தக்காளி சேர்க்காமல் இந்த பிரியானி ந்ல்ல இருக்கும்
ரொம்ப நல்ல இருக்கும்,நேத்து நானும் ஒரு ம்ட்டன் பிரியாணி செய்தேன் , சுவை அபாரம் விரைவில் போடுகிறேன்.

Menaga Sathia said...

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி ப்ரியா!!

நன்றி சத்யா!!

நன்றி ஷமினா!!

Menaga Sathia said...

நன்றி சகோ!! விரைவில் சிக்கனில் போடுகிறேன்..

நன்றி ஆசியாக்கா!!

நன்றி சசி!!

நன்றி ஜலிலாக்கா!! உங்க செய்முறையும் சீக்கிரம் போடுங்க...

Kousalya Raj said...

so nice.........!!

Shama Nagarajan said...

delicious biriyani

Priya said...

Superb Briyani!

அன்புடன் மலிக்கா said...

ஹைதராபாத் மட்டன் பிரியாணி Superb மேனகா.

அப்படியே வந்து
பொக்கிஷ தேவதையை பாருங்க.

http://niroodai.blogspot.com/2010/10/blog-post_12.html

பொன் மாலை பொழுது said...

எனக்கு ஒரு சந்தேகம் எப்ப பாத்தாலும் எல்லா ஊர்லேயும் பிரியாணிக்கு ஏன் இந்த வெங்காயம் தயிர் பச்சடி தானா?
வேறு ஒன்னும் தோதா இருக்காதா?
மற்றபடி பிரியாணி நல்ல டேஸ்டா தான் இருக்கு

Jayanthy Kumaran said...

wow...thanx for sharing this delicious recipe...

Tasty Appetite

Chitra said...

yummy to the tummy.

மின்மினி RS said...

அருமையான பிரியாணி வாசம் மூக்கத் துளைக்குது..

வேலன். said...

படம் பார்க்கும்போதே சாப்பிடஆவல் ஏற்படுகின்றது. சூப்பர்...
வாழக் வளமுடன்.
வேலன்.

Sriakila said...

mm...mm... very tasty!

Deepa said...

Coming Sunday ithu thaan. Thanks!

ஹுஸைனம்மா said...

மேனகா, நல்லாருக்கு.

தனிஷா சிக்கனை வேகவைக்காமலே போட்டாரே, அதுபோல மட்டனையும் போட்டால் வேகாதோ?

ஒரு ரெஸிப்பி வீடியோவில், மட்டனை லெமன், மற்றும் meat tenderizerல் நல்லா ஊற வைப்பதால் சீக்கிரம் வெந்துவிடும் என்று காட்டினார்கள். அதான் கேட்டேன்.

Menaga Sathia said...

நன்றி கௌசல்யா!!

நன்றி ஷாமா!!

நன்றி ப்ரியா!!

நன்றி மலிக்கா!!

Menaga Sathia said...

நன்றி சகோ!! தயிர் பச்சடி தவிர வெள்ளரிக்காய்,கோவைக்காய்,கேரட்,தர்பூசணி வெள்ளைப்பகுதி இவைகளில் பச்சடி செய்யலாமே...

நன்றி ஜெய்!!

நன்றி சித்ரா!!

நன்றி மின்மினி!!

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி ஸ்ரீஅகிலா!!

நன்றி தீபா!! செய்து பார்த்து சொல்லுங்கள்..

நன்றி ஹூசைனம்மா!! சிக்கனில் செய்தால் வெந்துவிடும்,மட்டன் என்பதால் வேகுமோ வேகாதான்னு சந்தேகமா இருந்தது.அதனால் அதை முதலில் வேகவைத்து செய்தேன்..

vanathy said...

mouth watering recipe & photo!

01 09 10