மீதமான சாதத்தை இரவு புளி ஊற்றி வைத்து மறுநாள் தாளித்து சாப்பிடும் சுவையோ சுவைதான்.எனக்கு இந்த முறையில் செய்த புளிசாதம் என்றால் உயிர்.
தே.பொருட்கள்:
மீதமான சாதம் - 2 கப்
புளி - 1 எலுமிச்சை பழளவு
உப்பு +எண்ணெய் =தேவைக்கு
தாளிக்க:கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது
காய்ந்த மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கடலைப்பருப்பு - 3/4 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
*மீதமான சாதத்தில் இரவே புளியை உப்பு கெட்டியாக கரைத்து கிளறி வைக்கவும்.
*மறுநாள்,பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சாதத்தை கொட்டி நன்கு கிளறி இறக்கவும்.
*இதற்கு தொட்டுக்கொள்ள மசால்வடை இருந்தால் போதும் எனக்கு....
தே.பொருட்கள்:
மீதமான சாதம் - 2 கப்
புளி - 1 எலுமிச்சை பழளவு
உப்பு +எண்ணெய் =தேவைக்கு
தாளிக்க:கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது
காய்ந்த மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கடலைப்பருப்பு - 3/4 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
*மீதமான சாதத்தில் இரவே புளியை உப்பு கெட்டியாக கரைத்து கிளறி வைக்கவும்.
*மறுநாள்,பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சாதத்தை கொட்டி நன்கு கிளறி இறக்கவும்.
*இதற்கு தொட்டுக்கொள்ள மசால்வடை இருந்தால் போதும் எனக்கு....
24 பேர் ருசி பார்த்தவர்கள்:
புது மாதிரியாக இருக்கே, கேள்விபட்டதே இல்லை இந்த முறையை. எளிமையானது போல.
இன்னைக்கு புளிசாதமா எனக்கு புடிக்காது ஆனால் மேனகா அக்கா சொல்லி கொடுத்தா சூப்பரா இருக்குமே மிஸ் பண்ணுவேனா
மேனகா...எனக்கு இந்த புளிசாதம் ரொம்ப பிடிக்கும்..
நானும் நாளைக்கு தான் இந்த போஸ்டிங்க போட வேண்டும் என்று சேவ் பண்ணீ வைத்து இருக்கின்ரேன்...கலக்குறிங்க...
ஆஹா. இது நல்லா இருக்குதே. ஈசி கூட. புளி சாதம் கோவிலில் கொடுப்பது போல மஞ்சளாக வருவதில்லை அக்கா. ஏன் அப்படி.
நான் செய்யும் போது பிரவுன் நிறத்தில் வருகிறது. தங்கள் வீடுகளில் அப்படி செய்வது இல்லை என்று என்னை ஒரே கிண்டலடிப்பார்கள். கர்ர்ர்ர்ர்ர்ர்ர், tips please
எனக்கும் ரொம்ப பிடித்த சாதம் இது. நான் பச்சை மிளகாய் சேர்ப்பேன் அல்லது புளி உப்புடன் மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து வைப்பேன். இதை ஒரு பதிவா போடனும்னு ரொம்ப நாளா நெனைச்சிட்டு இருந்தேன். நீங்க போட்டுடீங்க!
மீந்த சாதத்தில் புளித்தண்ணீரை ஊற்றி வெளியில் வைக்கலாமா அல்லது ஃபிரிட்ஜில் வைக்கணுமா மேனகா? வெளியே வச்சா சாதம் நமுத்து போகாதா?
looking yummy!!
ரயில் [[மும்பை டூ நாகர்கோவில்]] பயணத்துக்கு ஏற்றதுன்னு நினைக்கிறேன்....
Nice Recipe...I like puli satham :)
@சகோ மாணிக்கம்
இந்தமுறையில் செய்வது மிக எளிதானது,சுவையானதும் கூட...
@அனாமிகா
புளிசாதத்தில் மஞ்சள்தூள் சேர்க்கவேண்டும்.நீங்கள் சிவப்பு அரிசியில் செய்தால் மஞ்சள்கலரில் வராது.வெள்ளை அரிசியில் செய்தால்தான் மஞ்சள்கலர் வரும்.
@ஹூசைனம்மா
மீதமான சாதத்தில் புளித்தண்ணீரை ஊற்றி வெளியில் வைத்திருந்தால்தான் புளிநீர் சாதத்தில் நன்கு ஊறியிருக்கும்.சாதம் நீங்கள் வடிக்கும் நேரத்தை பொறுத்தது.இரவு வடித்த சாதத்தில் செய்தால் வெயில் காலத்தில் நல்லாயிருக்கும்.மறுநாள் சாதத்தை ப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு தேவைப்படும் நேரத்தில் தாளித்துக் கொள்ளலாம்.
எனக்கு புளிசாதம் ரொம்ப பிடிக்கும்.... இது மிக எளிமையான முறையா இருக்கே, நன்றி!
Enaku migavum piditha variety sadham.. naavooruthu
நானும் புளிசாதம் பல விதமாக செய்வேன்,ஆனால் புளியை சாதத்தில் ஊற்றி செய்ததில்லை...நல்லாயிருக்கு மேனகா...
Paathathume pasikuthu,my fav anytime..
simple yet all time favorite :)
புதுசா இருக்கு எனக்கு.
really this is new recipe to me menaga...so many times i have wasted left over rices :( but hereafter will definitely do like this...thanx for sharing such a useful recipes...
Puli sadham ennakkum romba pidikkum..unga plate paarthathum saapidanumnu romba aasaiya erukku :))
பாரம்பரிய முறையிலிருந்து, ரெடிமேட் மிக்ஸ்வரைக்கும் எந்தவகை புளிசாதமா இருந்தாலும் எனக்குப்பிடிக்கும். இது புதுமாதிரியா இருக்கு. ஹூஸைனம்மாவின் சந்தேகம்தான் எனக்கும் வந்தது, பதிலும் கிடைச்சுட்டுது :-)
easy method.good.
any time favourite
சூப்பர்!!!!!!!!!!
நாலு மசால்வடை பார்ஸல் ப்ளீஸ்:-))))))
ஊரில் சாதம் மீதமாகும்போதெல்லாம் இந்த முறை புளியோதரைதான்! எனக்கும் ரொம்ப பிடிக்கும்.சூப்பரா இருக்கு!
idhu pachaiya pulikaraisal with salta? illa puliya cook pannnuma?
enkitta plain pulipaste irukku epdi use seyya?
@காயத்ரி
புளியை காய்ச்ச தேவையில்லை..புளிபேஸ்ட்டை சிறிது தண்ணீரில் கரைத்து உப்பு சேர்த்து முதல்நாள் இரவே சாதத்தில் கலந்து மறுநாள் நான் சொன்ன முறையில் தாளிக்கவும்.
Post a Comment