Thursday 28 April 2011 | By: Menaga Sathia

தக்காளி கொத்சு /Tomato Kotsu

தே.பொருட்கள்:
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 3
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
இட்லி மாவு - 1 குழிக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.

*பின் மிளகாய்த்தூள் சேர்த்து லேசாக வதக்கி 2 கப் நீர்+உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும் இட்லிமாவு சேர்த்து 5 நிமிடம் கழித்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*அவசரத்திற்க்கு உடனடியாக செய்துவிடலாம்.இட்லி,தோசைக்கு நன்றாகயிருக்கும்.

18 பேர் ருசி பார்த்தவர்கள்:

Sangeetha M said...

Simple n little tangy kostu for tiffin ...nice recipe...I too make in similar way with dal ...this is easy n quick.. Will make a note of this recipe

சசிகுமார் said...

thanks

Vimitha Durai said...

Easy looking curry... Would be delish with rice...

MANO நாஞ்சில் மனோ said...

ஹேய் நானும் வந்துட்டேன்....

MANO நாஞ்சில் மனோ said...

பதிவை போட்டுட்டு தூங்க போன கடைக்காரரை வன்மையாக கண்டிக்கிறேன்....

MANO நாஞ்சில் மனோ said...

நீங்க அசத்துங்க மேடம்....

MANO நாஞ்சில் மனோ said...

ம்ஹும் நமக்கு சுடுதண்ணி வைக்குரதுக்குள்ளே விடிஞ்சிரும் போல இருக்கு....

Cool Lassi(e) said...

Must taste good with Idli and Dosai!

GEETHA ACHAL said...

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு மேனகா...சூப்பர்ப்...

Unknown said...

Super kotsu! With pongal or idli, great combo!

Mrs.Mano Saminathan said...

தக்காளி கொத்ஸ் அருமையாக இருக்கிறது மேனகா! நானும் இதுபோல செய்வதுன்டு. இட்லி மாவு சேர்க்காமல், மிள‌காய்த்தூளுக்கு பதில் சாம்பார்ப்பொடி சேர்ப்பேன்.

Unknown said...

உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்

என்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி

http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html

Priya Suresh said...

Ildikuda intha kosthu superaa irruku..yumm!

ஸாதிகா said...

சுலபமாக செய்யக்கூடிய சைட் டிஷ்.

Jayanthy Kumaran said...

worth to try...very interesting..:)
Tasty Appetite

Asiya Omar said...

மிக அருமை..

athira said...

பார்க்கவே அருமையாக இருக்கு.

Anonymous said...

nice mam

01 09 10