Thursday 28 July 2011 | By: Menaga Sathia

வெங்காய சமோசா /Onion Samossa


Hi Friends, See My Guest Post  at Nithu's Kitchen......

சின்ன வயசுல இந்த வெங்காய சமோசாவை சாப்பிட்டது.அதோட இந்த சமோசாவை மறந்தேபோய்ட்டேன்.ஒரு நாள் எங்க அண்ணி வெங்காய சமோசா உங்க அண்ணன் செய்து கொடுத்தார் சாப்பிட்டோம்னு சொன்னாங்க.விடுவோமா உடனே அதை எப்படி செய்றதுன்னு அண்ணியிடம் கேட்டு  செய்து சாப்பிட்டாச்சு.என் பொண்ணுக்கு ரொம்ப பிடித்துவிட்டது.

தே.பொருட்கள்

சமோசா ஷீட் - 5
எண்ணெய் - பொரிப்பதற்க்கு

ஸ்டப்பிங் செய்ய
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லித்தழை - (சிறிது பொடியாக நறுக்கியது)
அவல் - 1 கைப்பிடி
ஆம்சூர் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு-தேவைக்கு

செய்முறை
*ஸ்டப்பிங் செய்ய கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலக்கவும்.

*உப்பு+வெங்காயத்தின் ஈரத்திலேயே அவல் ஊறிவிடும்.

*சமோசா ஷீட்டை (பெரிதாக இருக்கும் )2ஆக கட் செய்து,ஒரு ஷீட்டில் ஸ்டப்பிங்கை வைத்து சமோசாவாக மடித்து பொரித்தெடுக்கவும்.

பி.கு
*சமோசா ஷூட் இல்லையெனில் மைதா+உப்பு+வெண்ணெய் சேர்த்து கெட்டியாக பிசைந்து,சப்பாத்தி போல் மெலிதாக தேய்த்து ஸ்டப்பிங் வைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

21 பேர் ருசி பார்த்தவர்கள்:

Sangeetha M said...

Onion samosa looks super crispy n yummy...I too make it similar way :) s these are my childhood fav snacks...remember those days,weekends my mom n Athai make these onion samosa for us...help panromnu sollittu romba trouble pannuvom :)

Lifewithspices said...

simple aanaal super ahh irukku..

Thenammai Lakshmanan said...

delicious da..:))

Vimitha Durai said...

Crunchy and tasty tea-time snack...

GEETHA ACHAL said...

ஆஹா...ரொம்ப நல்லா இருக்கு மேனகா...எனக்கு ரொம்பவும் பிடித்த சமோஸா...

கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்..

Priya said...

மிக சுலபமா இருக்கு... செய்து பார்க்கிறேன்! பகிர்வுக்கு நன்றி மேனகா!

ஆமினா said...

ரொம்ப நாளா இத தான் தேடிட்டு இருந்தேன்

வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

நானும் கல்லூரி காண்டீனில் சாப்பிட்டதுதான். வருஷமாச்சு. நிச்சயம் செய்து விடுகிறேன்:)!

Mahi said...

ஆனியன் பஃப்ஸ் சூப்பரா இருக்கு மேனகா! ப்ரேக்டைம்ல சுடச்சுட சாப்பிட சூப்பரா இருக்கும். நான் சாப்பிட்ட ஸ்டஃபிங் கொஞ்சம் வேறமாதிரி இருக்கும்.

அவல்-ஆம்ச்சூர் பவுடர் எல்லாம் சேர்ப்பது புதுசா இருக்கு.

Angel said...

இது எனக்கு பிடிச்ச ஸ்நாக்ஸ் .சனிகிழமை செஞ்சுடறேன் .தேங்க்ஸ் மேனகா

Prema said...

Perfect snack with a cup of tea,luks delicious...

Unknown said...

awesome...i remember eating these samosas when I used to go to movies...

ஸாதிகா said...

சமோசவினுள் அவல் எல்லாம் ஸ்டஃப் செய்து.வித்தியாசமாக உள்ளது.இங்கு மூலைக்கு மூலை வெங்காய சமோச கிடைக்கின்றது,:-)

SpicyTasty said...

Arumayana suvai. parkave asaiyaga ulladhu.

சசிகுமார் said...

பகிர்வுக்கு நன்றி அக்கா

Unknown said...

They look very crispy. Love it.Whenever i hear about onion samosa, i remember chennai trian by defaults. only place when you can see these samosa sellers more.

Cheers,
Uma

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

This is my favourite... காலேஜ் டேஸ்ல சாபிட்டது... ட்ரை பண்ணி பாக்கறேன்...:)

athira said...

சூப்பர் சமோசா மேனகா. அப்படியே எப்படி மடிப்பது என்பதையும் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Prabu Krishna said...

உஷ் அப்பா உங்க பதிவுகள்ள நிறைய படிச்சேன். எனக்கு எது முடியுமோ அதை மட்டும் செய்து பார்க்கப் போறேன். மிக்க நன்றி சகோ.

'பரிவை' சே.குமார் said...

பகிர்வுக்கு நன்றி அக்கா.

Jaleela Kamal said...

சமோசா என்றாலே எனக்கு ரொமப் பிடிக்கும் சென்னை போனாலே முதலில் வெங்காய சமோசா, வாங்கி சாப்பிடுவோம். அங்கு தெருவுக்கு தெரு கிடைக்கும்.

வீட்டில் செய்வதா இருந்தா கீமா அல்லது சிக்கன் சமோசாதான். பிள்ளைகளுக்கு பிடிக்கும்.
அவள் சேர்த்து இருப்பது வித்தியாசமாக இருக்கு

01 09 10