Monday 1 August 2011 | By: Menaga Sathia

ஆப்பிள் பாயாசம் /Apple Payasam

எனக்கு பாயாசம் என்றாலே பிடிக்காது.வித்தியாசமா ஆப்பிளில் செய்து பார்க்கலாம்னு செய்து பார்த்தேன்.நினைத்ததைவிட ரொம்ப நல்லாயிருந்தது.

தே.பொருட்கள்

தோல்,விதை நீக்கி துருவிய ஆப்பிள் - 1 கப்
பால் -1கப்
கண்டென்ஸ்ட் மில்க் - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்கு
வெனிலா எசன்ஸ் - 2 துளி
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை
*பாத்திரத்தில் நெய் விட்டு ஆப்பிளை போட்டு வதக்கவும்.

*பின் பாலை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.ஆப்பிள் வெந்து பால் பாதியளவு வெந்ததும் கண்டென்ஸ்டு மில்க் ஊற்றி 5நிமிடம் கழித்து இறக்கவும்.

*பின் லேசாக ஆறியதும் ஏலக்காய்த்தூள்+முந்திரி,திராட்சை+எசன்ஸ் சேர்த்து  கலக்கவும்.

*வெகு சுவையான பாயாசம் தயார்!!

23 பேர் ருசி பார்த்தவர்கள்:

Lifewithspices said...

wow simple tasty payasam..

MANO நாஞ்சில் மனோ said...

முதல் பாயாசம் நாந்தேன்....

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு மேனகா. அவசியம் செய்திடலாம்:)! நன்றி.

Vimitha Durai said...

Creamy and delicious looking fruit payasam.

சசிகுமார் said...

பகிர்வுக்கு நன்றி அக்கா

சி.பி.செந்தில்குமார் said...

சம் பாயாசம், பிரயாசம்

ஸாதிகா said...

அசத்தல் ஆப்பிள் பாயசம்

Prema said...

Healthy yummy payasam,nice way to bring the kids to eat apples...

ஆமினா said...

எளிமையான குறிப்புங்க... நான் செய்யும் போது கொஞ்சமா ரவையும் சேர்த்துக்குவேன். அப்ப தான் வாய்ல உரசிட்டு போக இன்னும் சுவை கூடுவதாக உணர்வு ஏற்படுத்தும் :) உங்க முறைல செய்து பாக்குறேன் :))

Peggy said...

Sounds yummy!

ஜெய்லானி said...

//MANO நாஞ்சில் மனோ

முதல் பாயாசம் நாந்தேன்....//

//*பாத்திரத்தில் நெய் விட்டு ஆப்பிளை போட்டு வதக்கவும்.//

ஹய்யோ...ஹய்யோ...!! :-))

ஜெய்லானி said...

ஒரு லிட்டர் பாயாசம் டெலிவரி பிலீஸ் :-))

Shanavi said...

Ippave payasam saapta madhiri thonudhu Menaga..Romba arumai

Chitra said...

lovely recipe...i started my blog with similar apple payasam...

GEETHA ACHAL said...

romba supera iruku menaga...kandipaka seithu parka vendum...

Chitra said...

something new ..... super!

Sangeetha M said...

romba supera erukku apple payasam...so creamy n delectable...i want to try this now but i don't have condensed milk ,can i add sugar? will it taste good ?? any idea plz share...

Unknown said...

Simple and tasty. Wonderful.

Cheers,
Uma

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஹாய்...நான் பாயாச பிரியை இல்ல.. இருந்தாலும்.. உங்க ரெசிபி-ன்னா ட்ரை பண்ணலாம். :)

தேங்க்ஸ் பா.. ;)

'பரிவை' சே.குமார் said...

பகிர்வுக்கு நன்றி அக்கா.

Jayanthy Kumaran said...

cant wait to try this tempting payasam..:P
Tasty Appetite

ஹுஸைனம்மா said...

என் தங்கை செய்வாள். அருமையா இருக்கும். இவ்வளவு ஈசியா? செஞ்சுப் பாக்கிறேன். ஆமினா சொன்ன மாதிரி, ரவையும் சேத்துப் பாக்கணும்.

Menaga Sathia said...

@சங்கீதா

கண்டென்ஸ்ட் மில்க் இல்லையெனில் சர்க்கரை சேர்த்தும் செய்யலாம்.பாலை நன்கு சுண்டக் காய்ச்சிக் கொள்ளவும்.

@ஆமினா
ரவை போட்டும் செய்து பார்க்கிறேன்...

01 09 10