Wednesday, 13 July 2011 | By: Menaga Sathia

வெண்பொங்கல்&பாம்பே(கடலைமாவு)சாம்பார்/ Venpongal &Bombay(Besan)Sambhar

பொங்கல் செய்ய தே.பொருட்கள்
பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு  - 3/4 கப்
பால் - 1 1/2 கப்
தண்ணீர் - 2 1/2 கப்
உப்பு - தேவைக்கு

தாளிக்க
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
முந்திரி - தேவைக்கு
பொடியாக நறுக்கிய இஞ்சி -1டீஸ்பூன்
மிளகு -1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்

செய்முறை
*பருப்பு+அரிசி+உப்பு+பால்+தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேகவைக்கவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.

கடலைமாவு சாம்பார் செய்ய தே.பொருட்கள்
கடலைமாவு - 3 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி -தலா 1 சிறியது
கீறிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்
புளிபேஸ்ட் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
சீரகம் -1/4 டீஸ்பூன்
பெருங்காயம் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை
*கடலைமாவை வெறும் கடாயில் லேசாக வறுத்து ஆறவைத்து மஞ்சள்தூள்+1 1/2 கப் நீர் விட்டு கட்டியில்லாமல் கரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் புளியை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி+உப்பு+சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும் கரைத்துவைத்த கடலைமாவை ஊற்றி கட்டியில்லாமல் கலக்கி 5-6 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

*சிறிதளவு கெட்டியானதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*இந்த சாம்பார் சப்பாத்தி,பூரிக்கும் நன்றாகயிருக்கும்.

20 பேர் ருசி பார்த்தவர்கள்:

Sangeetha M said...

romba easy erukke intha sambar recipe...also pongal,vada sambar very tempting platter..can you pass that now ..you made me hungry my lunch time :)

Nithya said...

Venpongal paathaley margazhi masam kovil prasadam than neyabagam vardhu. Arumaya irukkum and ungaludhum paarkave sapdanumpola irukku :)

Angel said...

வெண்பொங்கல் செய்திருக்கேன் ஆனா பாம்பே சாம்பார் செய்ததில்லை .
வீட்ல எல்லா ஐட்டமும் இருக்கு நாளைக்கு செய்கிறேன் .ரெசிபிக்கு நன்றி .

KrithisKitchen said...

Super combo... sambar pudumaiya nalla iruku...

http://krithiskitchen.blogspot.com
Event: Serve It - Grilled/Barbequed/Tandoored

Unknown said...

wow.. ippadi oru site !!! athuvum tamila ...super a irukunga....

BTW, coming here from vimitha's blog.To be frank, todays dinner at our home is venpongal and quick sambar. :-)

Romba santhosama irukku ella recipe um tamila padikka.

Nalvazhthukkaludan,
Uma
http://umaskitchenexperiments.blogspot.com/

Shanavi said...

Kadalai maavu sambar is new to me..POngal ..Thevamirdham..

ராமலக்ஷ்மி said...

அருமை. பால் சேர்த்து செய்ததில்லை.

கடலைமாவு க்ரேவி பூரிக்கு செய்வதுண்டு. சாம்பார் பொடி சேர்ப்பது புதிது. இன்று இதுதான் மெனு:)! நன்றி.

ஸாதிகா said...

பேசன் சாம்பார் வித்தியாசமாக இருக்கே.

Priya Sreeram said...

loved the recipe for the besan sambhar- inviting myself in for the yum platter !

'பரிவை' சே.குமார் said...

Good one.

Umm Mymoonah said...

Bombay sambhar is new to me, both are super combination. Yummy breakfast.

சசிகுமார் said...

பகிர்விற்கு நன்றி அக்கா

சி.பி.செந்தில்குமார் said...

மேனகா அக்கா .. உங்களோட செம காமெடி.. உங்க பிளாக்ல காப்பி பேஸ்ட் பண்ண முடியாம லாக்டு.. ஓக்கே.. ஆனா மெயில்ல அனுப்பி இருக்கீங்களே அது? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சி.பி.செந்தில்குமார் said...

pongal foto sema

Priya said...

Superb combination...!

Prema said...

Wow pakum pothe arumaiya irrukuthu...pls pass the plate.

Cilantro said...

My favorite Breakfast. Looks delicious with Sambhar.

Jayanthy Kumaran said...

I m in awe of you..:P
tempting click..
Tasty Appetite

ஜெய்லானி said...

பாம்பே சாம்பாராஆஆஆ....!! :-))

மாய உலகம் said...

பொங்கலோ..பொங்கல்...

01 09 10