Monday, 30 January 2012 | By: Menaga Sathia

தக்காளி சட்னி - 5/Tomato Chutney -5


அண்ணியிடம் கற்றுக்கொண்ட ரெசிபி...

தே.பொருட்கள்
பழுத்த தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயத்தூள் - தலா1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை
*தக்காளியை பொடியாக நறுக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுது+மிளகுத்தூள்+மிளகாய்த்தூள்+உப்பு+1/4 கப் நீர் சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.

*எண்ணெய் பிரியும் வரை கெட்டியானதும் இறக்கவும்.

*இட்லி,தோசை,சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்.

18 பேர் ருசி பார்த்தவர்கள்:

Angel said...

பார்க்க கலர்ஃபுல்லா இருக்கு .வேக வைத்து செய்யும் முறை புதியதாக இருக்கு .செய்து விடுவேன் இன்னைக்கே .நன்றி மேனகா

Vimitha Durai said...

Tangy chutney look so inviting.

ராமலக்ஷ்மி said...

வேகவைத்து செய்வது வித்தியாசமான குறிப்பு. நன்றி மேனகா.

Unknown said...

அண்ணி ரொம்ப சிம்பிலாக சொல்லிக்கொடுத்திருக்காங்க... சட்னி கலர் நல்லா இருக்கு

இராஜராஜேஸ்வரி said...

ருசியான பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஈஸி ரெசிபியா இருக்கே.. ட்ரை பண்றேன். தேங்க்ஸ். :)

விச்சு said...

sashiga - தக்காளி சட்னி சூப்பர். செஞ்சு பார்த்துடவேண்டியதுதான்.

Asiya Omar said...

தக்காளி சட்னி எப்பவும் டேஸ்ட் தான்.நல்ல கலராக இருக்கு.

Priya Suresh said...

Chutneyoda colour'ee attagasama irruku menaga..

Sujaa Sriram said...

Appa chance ila naaku ooruthu ... Sure ra iniketry panna vendiyathu than :)

http://preethisculinary.blogspot.com
http://yenkaivannam.blogspot.com

Sangeetha M said...

wow...chutney looks so tempting and inviting...nice recipe!!

Spicy Treats
OnGoing Event ~ Dish It Out-Brinjal n Garlic

Sowmya said...

inviting chutney...looks tempting!

Sumi said...

Romba nalla iruku..amma siyura mathiri :) Love your blog

Mahi said...

காரசாரமா கலர்ஃபுல்லா இருக்கும் போலிருக்கு!:P

ஸாதிகா said...

மல்லிகை இட்லியுடன் கலர்புல் தக்காளி சட்னி..அருமையாக உள்ளது மேனகா!

சி.பி.செந்தில்குமார் said...

உங்க அடுத்த போஸ்ட் வேலண்டைன்ஸ் டே கேக் செய்வது எப்படி?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

பாக்கவே ஊறுகாய் போல அட்டகாசமா இருக்கு.. சூப்பர்

Jaleela Kamal said...

செக்கச்செவலேன்னும் இருக்கு ஈசியாக வும் இருக்கு.
நாவூறுது

01 09 10