Wednesday 4 January 2012 | By: Menaga Sathia

இஞ்சி பூண்டு விழுது &புளி பேஸ்ட் செய்வதெப்படி?? /Homemade Ginger Garlic Paste & Tamarind Paste

இஞ்சி பூண்டு விழுது

தே.பொருட்கள்
இஞ்சி பூண்டு - தலா 100 கிராம்
உப்பு - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் தேவைக்கு
செய்முறை
*இஞ்சி பூண்டை நறுக்கி உப்பு+எண்ணெய் சேர்த்து மைய அரைக்கவும்.

பி.கு
*தண்ணீர் சேர்த்து அரைக்ககூடாது,சீக்கிரம் கெட்டுவிடும்.கலரும் மாறிவிடும்.ப்ரிட்ஜில் வைத்திருந்து பயன்படுத்தவும்.

*எடுக்கும் போது ஈரமில்லாத கரண்டியால் எடுக்கவும்.

புளிபேஸ்ட்

தே.பொருட்கள்

புளி - 500 கிராம்
மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - 1 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 6 கப்
செய்முறை

*புளியை 6கப் நீர் சேர்த்து குக்கரில் 5 விசில் வரை வைக்கவும்.
*ஆறியதும் நன்கு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

*பின் கடாயில் கரைத்த புளி+மஞ்சள்தூள்+உப்பு சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கொதிக்கவைத்து ஆறியதும் பாட்டிலில் ஊற்றி ப்ரிட்ஜில் வைத்திருந்து பயன்படுத்தவும்.

பி.கு
*எடுக்கும்போது ஈரமில்லாத கரண்டியால் எடுக்கவும்.

*1 டேபிள்ஸ்பூன் புளிபேஸ்ட்க்கு தேவையானளவு நீர் சேர்த்து கரைத்து பயன்படுத்தவும்.

17 பேர் ருசி பார்த்தவர்கள்:

Mahi said...

புளி பேஸ்ட் ஐடியா நல்லா இருக்கே? பகிர்வுக்கு நன்றி மேனகா! இஞ்சி-பூண்டு விழுது நானும் இப்படித்தான் செய்துவைப்பேன். இப்பல்லாம், அப்பப்ப தேவைக்கு அரைச்சு போட்டுக்கறது..ப்ரிட்ஜில் செய்து வைப்பது மறந்தே போச்! :)

பூங்கோதை said...

மிகவும் பயனுள்ள குறிப்பு, மிக்க நன்றி!

இரண்டையும் சுமாராக எவ்வளவு நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்?

Sangeetha M said...

never tried tamarind paste @ home, yesterday i bought 50g paste bottle it costs $4.99, thank you menaga for the recipe will try this soon...
Spicy Treats
OnGoing Event ~ Dish It Out-Brinjal n Garlic

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தகவலுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

இஞ்சி பூண்டு இப்படி செய்து கொள்வதுண்டு. புளி பேஸ்ட் செய்முறைக்கு நன்றி.

நல்ல பதிவு மேனகா.

சாந்தி மாரியப்பன் said...

உபயோகமான குறிப்புகள்.

Vimitha Durai said...

Nice informative post.

புவனேஸ்வரி ராமநாதன் said...

அன்றாட சமையலுக்கு மிகவும் உபயோகமான குறிப்பு
மேனகா. குறிப்புக்கு மிக்க நன்றி.

Menaga Sathia said...

@பூங்கோதை

இவ்விரண்டையும் 1 மாதம் வரை ப்ரிட்ஜில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.


அனைவரின் கருத்துக்கும் மிக்க நன்றி!!

Priya Suresh said...

Trust me or not even i prepared tamarind paste this way few days back with my one year old tamarind..Useful post Menaga.

Aarthi said...

very useful post..

Jayanthy Kumaran said...

lovely idea..always homemade is best & aromatic..thanks for sharing..;)
Tasty Appetite

Kanchana Radhakrishnan said...

பயனுள்ள குறிப்பு.

avainaayagan said...

இவற்றைச் செய்யும் எளிய முறையை எழுதி இருக்கிறீர்கள்

Sangeetha M said...

Hi Menaga
I tried this puli paste 2-3 times n today posted it on my space too...
Thanks for sharing this great tips!!

சாரதா சமையல் said...

புளி பேஸ்ட் நல்ல குறிப்பு .குக்கரில் வேக வைப்பதற்கு பதிலாக வென்னிரிலும் ஊற வைத்து கரைத்தும் செய்யலாம் .

Aradhya said...

அருமையான பதிவு !! பூண்டின் நன்மைகள் | Garlic Benefits in Tamil

01 09 10