Wednesday, 25 January 2012 | By: Menaga Sathia

ஹைதராபாத் காலிபிளவர் 65/Hyderabad Cauliflower 65

ஹைதராபாத் சிக்கன் 65 குறிப்பில் சிக்கனுக்கு பதில் காலிபிளவரில்   செய்தது.

தே.பொருட்கள்
காலிபிளவர் - 1 சிறியது
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
மைதாமாவு - 1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சிகப்பு கலர்,மஞ்சள் கலர் - தலா 1 சிட்டிகை
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
மிளகுத்தூள் ,சீரகத்தூள்,கரம் மசாலா - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
கீறிய பச்சை மிளகாய் -2
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை
*காலிபிளவரை சிறிய பூக்களாக எடுத்து உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் போட்டு வைக்கவும்.

*பின் நன்கு அலசி நீரை வடிகட்டி அதனுடன் சோளமாவு+அரிசிமாவு+சிகப்பு கலர்+உப்பு+இஞ்சி பூண்டு விழுது+மிளகாய்த்தூள் என அனைத்தையும் ஒன்றாக கலந்து 1/2 மணிநேரம் வைக்கவும்.

*பின் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

*ஒரு பவுலில் தயிர்+உப்பு+மஞ்சள் கலர்+மிளகுத்தூள்+சீரகத்தூள்+கரம்மசாலா என அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய்+கறிவேப்பிலை போட்டு தாளித்து தயிர் கலவையை ஊற்றவும்.

*இதனுடன் பொரித்த காலிபிளவர் துண்டுகளை சேர்த்து நன்கு சுண்டும் வரை கிளறி இறக்கவும்.

19 பேர் ருசி பார்த்தவர்கள்:

Priya Suresh said...

Wat a super tempting starter, cauliflower 65 looks fabulous..

Sowmya said...

Cauliflower 65 looks very tasty n thanks for the recipe!

Asiya Omar said...

அருமை,மேனகா.

ராமலக்ஷ்மி said...

மஞ்சூரியன் செய்வதுண்டு. இது வித்தியாசமான குறிப்பு. செய்து பார்க்கிறேன். நன்றி மேனகா.

Vimitha Durai said...

Would love to have some now.. yum and crispy...

சசிகுமார் said...

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்....

குறையொன்றுமில்லை. said...

காலி ஃப்ளவரில் புது ரெசிப்பியா. ஃப்லவரின் ஸ்மெல் சிலருக்கு பிடிக்கரதில்லே. வித்யாசமாகத்தான் செய்து கொடுக்க வேண்டி இருக்கு.

நட்புடன் ஜமால் said...

மிகவும் பிடித்த ஐட்டம் தான்,

இந்த முறையிலும் செய்து பார்க்க சொல்லிடுவோம் ...

Ms.Chitchat said...

Super a irukku, kalakkiteenga :):)

MANO நாஞ்சில் மனோ said...

அசத்துங்கப்பா அசத்துங்க, போட்டோவை பார்த்ததுமே நாக்கில் எச்சில் ஊருது வாழ்த்துக்கள்...!!!

அஸ்மா said...

நீண்ட நாட்கள் சரியாக எந்தப் பக்கமும் வரமுடியவில்லை. எப்படியிருக்கீங்க மேனகா? :)

காலிஃப்ளவர் 65 அருமையா இருக்கு! தயிர், கரம் மசாலாவை பொரித்த பிறகுதான் தாளித்து ஊற்றுவீர்களா? நாங்கள் பொரிக்கும்போதே அனைத்தையும் சேர்த்துவிடுவோம். உங்கள் முறையிலும் செய்து பார்க்கணும் :)

Unknown said...

சிக்கனில் செய்வது போலவே இருக்கு... பார்க்கவே அருமையாக இருக்கு

எம் அப்துல் காதர் said...

super post siss.

Raks said...

Thanks for sharing a wonderful recipe with cauliflower!

சி.பி.செந்தில்குமார் said...

காலிபிளவர் மஞ்சூரியன் ....எனக்குபிடித்த ஸ்நாக்ஸ்.

ஸாதிகா said...

அருமையான சை டிஷ் மேனகா!

மனோ சாமிநாதன் said...

அருமையான குறிப்பு மேனகா! உங்கள் புகைப்படம் உடனேயே இதை செய்து பார்க்கத் தூன்டுகிற‌து!

Jaleela Kamal said...

நானும் அப்படியே மசாலா ஊறவைத்துப் பொரிபப்து தான், பார்க்கவே நல்ல இருக்கு

MyKitchen Flavors-BonAppetit!. said...

Nalla Starter n Easy Good Sidedish.Yumm Gobi 65!

01 09 10