Wednesday, 18 January 2012 | By: Menaga Sathia

காலிபிளவர் பட்டாணி மசால் தோசை/Cauliflower Peas Masala Dosa

 வழக்கமாக நாம் மசால் தோசைக்கு உருளையை வைத்துதான் செய்வோம்.இந்தமுறை இந்தியாவுக்கு சென்றபோது ஹோட்டலில் இந்த தோசையை சாப்பிடும்போது ரொம்ப பிடித்துவிட்டது.செய்துபார்த்ததில் அதேமாதிரி சுவையுடன் இருந்தது....

காலிபிளவர் பட்டாணி மசாலா

தே.பொருட்கள்

காலிபிளவர் - 1 நடுத்தரசைஸ்
ப்ரோசன் பட்டாணி - 1/2 கப்
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
தக்காளி - 2 விழுதாக அரைக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
காஷ்மிரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 செய்முறை

*காலிபிளவரை சிறிய பூக்களாக நறுக்கி உப்பு கலந்த நீரில் 10நிமிடம் வேகவைத்து நீரை வடிக்கவும்.


*கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.


*பின் தக்காளி விழுது+மிளகாய்த்தூள்+உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.


*வேகவைத்த காலிபிளவர்+பட்டாணி சேர்த்து நன்கு கெட்டியாக வரும்வரை கிளறி இறக்கவும்.

மசால் தோசை செய்ய

இட்லி/தோசை மாவு - 3 கப்
காலிபிளவர் பட்டாணி மசாலா - தேவைக்கு
எண்ணெய்/ நெய் - தேவைக்கு

செய்முறை

*தோசைக்கல்லில் எண்ணெய் தடவி 1குழிக்கரண்டி மாவை விட்டு மெலிதாக வார்க்கவும்.
 *சுற்றிலும் எண்ணெய் ஊற்றவும்.தோசை 1பக்கம் வெந்தபிறகு மசாலாவை ஒருபக்கம் வைக்கவும்.
 *பின் அப்படியே மடித்து எடுத்து சட்னி,சாம்பாருடன் பரிமாறவும்.
பி.கு

*தோசை ஒருபக்கம் வெந்த பிறகு திருப்பிபோடகூடாது.

*மாவு கொஞ்சம் தண்ணியாக இருந்தால் தோசை மெலிதாக சுட வரும்.

*நான் தக்காளி சட்னி,காரகுழம்புடன் பரிமாறியுள்ளேன்..

24 பேர் ருசி பார்த்தவர்கள்:

Aarthi said...

What a awesome dosa...Delicious dear..

Aarthi
http://yummytummy-aarthi.blogspot.com/

Sangeetha M said...

cauliflower masala dosa is one of my fav dosa, yours with peas combo is excellent...dosa looks so crispy n yummy!!
Spicy Treats
OnGoing Event ~ Dish It Out-Brinjal n Garlic

Prabha Mani said...

Superb yummy dosai..

Unknown said...

வாவ் ரொம்ப அருமை

Asiya Omar said...

அருமையாக இருக்கு.

Angel said...

இந்த காம்பினேஷன் டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும் மேனகா .அம்மா இப்படிதான் செய்வாங்க
நானும் செய்து பார்க்கிறேன்

Mahi said...

சூப்பர் தோசை! :P

எனக்கென்னமோ மசாலா தோசைய முக்கோணமா மடிச்சே பழகிருச்சு மேனகா! இப்படி ரெண்டா மடிக்கறதே வரதில்லை!;)

MyKitchen Flavors-BonAppetit!. said...

a real crispy Dosa snack with a yumm Gobi Masal.Fabulous recipe

Unknown said...

dosa stuffing suma super a irruku Menaga :)

ஸாதிகா said...

அட..வித்தியாசமாக இருக்கே.

Lifewithspices said...

super combination dosa..

Priya Suresh said...

Super o super intha masala dosa.

சி.பி.செந்தில்குமார் said...

>>இந்தமுறை இந்தியாவுக்கு சென்றபோது ஹோட்டலில் இந்த தோசையை சாப்பிடும்போது


wat? r u foreign blogger? avvv

பித்தனின் வாக்கு said...

menaka neenga india vil illaiya?..

thane puyal vantha pothu ungalai ninaithu varuthappa patten.

பித்தனின் வாக்கு said...

oru naalu thosai parcel please.

Prema said...

Dosai arumai,antha red chutney recipeum podunga menaga...

Raks said...

Its my favorite too! Great recipe

Jayanthy Kumaran said...

wish to be your neighbour ..;P
Tasty Appetite

Kurinji said...

Dosai paarkave supera erukku meanaga, my sister's fav dosai.

ராஜி said...

படங்களை பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்கே

Kanchana Radhakrishnan said...

super dosai.

புவனேஸ்வரி ராமநாதன் said...

ரொம்ப சுவையான அருமையான செய்முறை விளக்கத்திற்கு
மிக்க நன்றி சஷிகா. வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...

கிட்டதட்ட மசால் தோசைபோலத்தான் இல்லியா? உங்க பேரு மேனகாவா சஷிகாவா?

Jaleela Kamal said...

காலிபிளவர் தோசை எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஹோட்டல் போனால் மசால் தோசைக்கு பதில் இதை தான் கேட்பேன்.

01 09 10