Friday 9 November 2012 | By: Menaga Sathia

புழுங்கலரிசி முறுக்கு/ Boiled Rice Murukku


தே.பொருட்கள்
புழுங்கலரிசி - 2 கப்
பொட்டுக்கடலை மாவு - 1/2  கப்
வறுத்த உளுத்தமாவு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம்,எள் - தலா 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சூடான எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை
*அரிசியை கழுவி 2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*பின் பெருங்காயத்தூள்+உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

*அதனுடன் பொட்டுக்கடலை மாவு + சீரகம்+எள்+உளுத்தமாவு வெண்ணெய்+சூடான எண்ணெய் சேர்த்து கெட்டியாக பிசையவும்.


*கடாயில் எண்ணெய் காயவைத்து முறுக்கு அச்சில் மாவை போட்டு முறுக்குகளாக பிழிந்து சுட்டெடுக்கவும்.


பி.கு
* அரிசியை அதிகநேரம் ஊறவைத்து அரைத்தால் முறுக்கு எண்ணெய் இழுக்கும்.

*விரும்பினால் அரிசி அரைக்கும் போது காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கலாம்.

*பொட்டுக்கடலை மாவு சேர்த்த பிறகும் மாவு பதம் தளர்த்தியாக இருந்தால் ஒரு காட்டன் துணியில் 1/2 மணிநேரம் மாவை வைத்திருந்து எடுத்தால் கெட்டியாக இருக்கும்.

10 பேர் ருசி பார்த்தவர்கள்:

ராமலக்ஷ்மி said...

தீபாவளி ஸ்பெஷலாக அருமையான குறிப்பு.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லா இருக்குங்க... செய்து பார்த்திடுவோம்...

Asiya Omar said...

வாவ்! அட்டகாசமாக இருக்கு,அருமையாக முறுக்கு சுற்றியிருக்கீங்க.

Unknown said...

Looks so crisp and yum...

Priya Suresh said...

Super round shaped murukku, naanum innaiku intha murukku senchen:).

M. Shanmugam said...

நல்ல ஒரு சமையல் குறிப்பு.
தீபாவளி சமயத்தில் தந்தமைக்கு நன்றி.

Tamil Online

ராமலக்ஷ்மி said...


தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

Hema said...

Looks so crispy and yumm..

Sorna said...

Hello madam. Nan unga receipes try panni irukaen and it came out very well.. But I tried ur boiled rice murukku it was not soft. Kadaika kasdama irunthathu

Menaga Sathia said...

@Sorna lakshmi

ரெசிபிகளை செய்து பார்த்தமைக்கு மிக்க நன்றிங்க...இதே அளவில் செய்யும்போது நன்றாக வரும்,ஒருவேளை வெண்ணெய் குறைவாக இருந்தால் நீங்கள் சொல்வதுபோல் இருக்கும்.

பொதுவாக ஒரு கப் மாவிற்கு 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் என்பது சரியான அளவு,கொஞ்சம் அதிகமானாலும் முறுக்கு எண்ணெயில் பிழிந்ததும் பிரிந்துவிடும்..

01 09 10