Wednesday, 6 March 2013 | By: Menaga Sathia

சம் சம்/Cham Cham - Traditional Bengali Sweet


இந்த வாரம் தினகரன் வசந்தம் இதழில் மகளிர்  தின ஸ்பெஷலாக  இணையத்தைக் கலக்கும் இலக்கியப்  பெண்கள் என்னும் தலைப்பில் என் வலைப்பூ மற்றும் மற்ற தோழிகளின் வலைப்பூ இடம் பெற்றுள்ளது.இதில் இடம்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...இத்தகவலை முகநூலில் தெரிவித்த சாரு அக்கா மற்றும் ராமலஷ்மி அக்கா,கமெண்டில் தெரிவித்த ஸாதிகா அக்காவுக்கும் நன்றிகள்...மேலும் இப்பக்கத்தினை எனக்கு ஸ்கேன் செய்து அனுப்பிய ராமலக்ஷ்மி அக்காவுக்கு ஸ்பெஷல் நன்றி....

என் வலைப்பூ பத்திரிக்கைகளில் இடம்பெறுவது இது 2வது முறையாகும்.2009 ல் முதல்முறையாக ஆனந்த விகடன் புத்தகத்தில் ஆகஸ்ட் மாத இதழில் விகடன் வரவேற்பறையில் இடம்பெற்றுள்ளது.



இப்போழுது இந்த சம் சம் இனிப்பின் செய்முறையை பார்க்கலாம்.

தே.பொருட்கள்

பால் -2 லிட்டர்
சிட்ரிக் ஆசிட் -1 டீஸ்பூன்
மஞ்சள் கலர் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 2 கப்
நீர் - 4 கப்
பொடியாக நறுக்கிய பிஸ்தா -அலங்கரிக்க

செய்முறை

*பாலை காயவைத்து சிட்ரிக் ஆசிட் சேர்கக்வும்.பல் நன்கு திரிந்ததும் மெல்லிய துணியால் நீரை வடிகட்டி பனீரை குளிர்ந்த நீரில் நன்கு அலசி நீரை நன்கு பிழியவும்.
*பனீரை மஞ்சள் கலர் சேர்த்து மிருதுவாக பிசைந்து சிறு உருண்டைகளாக எடுக்கவும்.

*அதனை ஒவல் வடிவத்தில் உருட்டி வைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் சர்க்கரை+நீர் சேர்த்து கொதிக்க வைத்து பனீர் உருண்டைகளை சேர்த்து 10 நிமிடங்கள் மூடி போட்டு வேகவிடவும்.

*உருண்டைகள் இருமடங்காக உப்பியிருக்கும்,அதனை மெதுவாக திருப்பிவிட்டு மேலும் 2 நிமிடங்கள் வேகவிடவும்.

*உருண்டைகளில் சிறு சிறு புள்ளிகள் வந்திருந்தால் நன்கு வெந்துவிட்டது என்று அர்த்தம்.அடுப்பிலிருந்து இறக்கி நன்கு ஆறவிடவும்.

*ஆறியதும் ஒவ்வொரு துண்டுகளையும்  சர்க்கரை பாகிலிருந்து எடுத்து பிஸ்தா துண்டுகளை வைத்து அலங்கரித்து பரிமாறவும்.


பி.கு

*பிஸ்தா துண்டுகளில் அலங்கரிப்பதற்க்கு பதில் தேங்காய் பவுடரில் பிரட்டி எடுக்கலாம் அல்லது மலாய் சேர்த்து பரிமாறலாம்.ஆனால் இவைகளை உடனே பயன்படுத்த  வேண்டும்.

Sending to Faiza's Passion on plate & Gayathri's WTML  Event Hosted By  Hema

24 பேர் ருசி பார்த்தவர்கள்:

Angel said...

வாழ்த்துக்கள் மேனகா ..இனிப்பான செய்திக்கு அருமையான இனிப்பு ரெசிப்பி !!! பகிர்வுக்கு நன்றி .

Angel said...

வாழ்த்துக்கள் மேனகா ..இனிப்பான செய்திக்கு அருமையான இனிப்பு ரெசிப்பி !!! பகிர்வுக்கு நன்றி .

Hema said...

Congrats, way to celebrate it with this delicious sweet..

Asiya Omar said...

வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள் மேனகா.தொடர்ந்து அசத்துங்க.அருமையான இனிப்பு பார்க்கவே சூப்பர்.

Mahi said...

வாழ்த்துக்கள் மேனகா! எனக்கு ரொம்ப பிடிச்ச மில்க் ஸ்வீட்டுக்கு நன்றி! [நீங்க எந்த ஸ்வீட்டைப் போட்டாலும் இதே டயலாக்-ஐ சொல்லுவேன், ஏனா எல்லா ஸ்வீட்டுமே எனக்குப் பிடிக்கும்! ஹிஹி!:)]

Unknown said...

Congrats Menaga.Chum chum looks so inviting.

great-secret-of-life said...

Yummy sweet.. I love milk sweets

திண்டுக்கல் தனபாலன் said...

இனிப்பான வாழ்த்துக்கள் சகோதரி...

ஸாதிகா said...

மீண்டும் வாழ்த்துகள்.பத்திரிகையில் வந்ததற்கு அருமையான பெங்காலி ஸ்வீட் செய்முறையை கற்றுத்தந்துவிட்டீர்கள்.தேங்க்ஸ்.

Ms.Chitchat said...

wow, super chamcham, never tried this at home,ur illustrative clicks is going to help me do this, thanks for sharing.

ராமலக்ஷ்மி said...

சுவையான இனிப்பு. எளிதாக செய்யும் வகையில் நல்ல குறிப்பு.

தங்களுக்கும் தோழியர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள் மேனகா:)!

தொடரட்டும் உங்கள் நற்பணி.

ஹுஸைனம்மா said...

வாழ்த்துகள் மேனகா.

ஸ்வீட்டில், சிட்ரிக் ஆஸிடுக்குப் பதிலாக, எலுமிச்சைச் சாறு பயன்படுத்தலாம்தானே? இதே அளவு போதுமா?

Vimitha Durai said...

Congrats dear... Sweet looks so yum

Menaga Sathia said...

@ஹூசைனம்மா

சிட்ரிக் ஆசிட் பதில் 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு பயன்படுத்தலாம்.

அனைவரின் அன்பான வாழ்த்திற்க்கு மிக்க நன்றி!!

Prema said...

wow yummy sweet,love to taste it immediately...

Priya Suresh said...

Wow neegha kalakuringa Menaga, vaazhuthukal ungaluku, romba santhosham..

Juicy cham cham superaa irruku, tempting.

Divya A said...

Congrats :) Cham cham looks so delicious :)

மனோ சாமிநாதன் said...

சம் சம் இனிப்பு குறிப்பும் விளக்கப்படங்களும் பிரமாதம்!
தினகரன் ' வசந்தம்' இதழில் உங்களின் வலைப்பூ பற்றி தகவல் வெளியிடப்பட்டிருப்பதற்கு என் அன்பு வாழ்த்துக்கள்!!

Unknown said...

Looks so delicious..

சாருஸ்ரீராஜ் said...

congrats menaga

Sangeetha Priya said...

congrats n this is the perfect treat :-)

Unknown said...

Super thank u

Unknown said...

வாழ்த்துகள் சகோதரி.... வாழ்க வளமுடன்....

- லவ்டேல் மேடி

Kanchana Radhakrishnan said...


வாழ்த்துகள் மேனகா

01 09 10