Recipe Source: Savitha's Kitchen
இது எப்பவும் நாம் பிரியாணிக்கு பயன்படுத்தும் பொருட்கள் போல் உபயோகபடுத்தவேண்டும் செய்முறை மட்டும் சிறிது மாறுபடும்.
இதில் தயிர் +தேங்காய்ப்பால் சேர்க்கதேவையில்லை.நெய் மட்டும் சிறிது அதிகமாக ஊற்றி செய்தால் அதே சுவையுடன் இருக்கும்.
எந்த பிரியாணி செய்தாலும் அரிசியை சிறிது நெய்யில் வருத்து சமைத்தால் சாதம் உதிரியாக இருக்கும்.
புதினா கொத்தமல்லியை வதக்கி சேர்க்காமல் அரிசி சேர்க்கும் போது சேர்க்கவேண்டும்.
தே.பொருட்கள்
சிக்கன் - 3/4 கிலோ
பாஸ்மதி - 3 கப்
வெங்காயம் - 2 பெரியது
தக்காளி - 3 பெரியது
நெய் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 6
வரமிளகாய்த்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டேபிள்ஸ்பூன்
புதினா + கொத்தமல்லி - தலா 1/2 கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
தாளிக்க
பிரியானி இலை - 4
ஏலக்காய் - 5
கிராம்பு - 4
ஜாதிக்காய் - சிறுதுண்டு
பட்டை - 1 துண்டு
செய்முறை
*வெங்காயத்தை நீளவாக்கிலும்,தக்காளியை துண்டுகளாகவும் ,பச்சை மிளகாயை நீளவாக்கிலும் நறுக்கவும்.
*அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைத்து நீரைவடிக்கவும்.
*குக்கரில் சிறிது நெய் ஊற்றி அரிசியை லேசாக வறுத்தெடுக்கவும்.
*வதங்கியதும் தக்காளி+உப்பு சேர்த்து வதக்கவும்.
*தக்காளி நன்கு வெந்ததும் சுத்தம் செய்த சிக்கன்+இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
*சிக்கன் வெந்து வெள்ளை கலரில் நிறம் போது மிளகாய்த்தூள் சேர்த்து அதிகதீயில் வதக்கவும்.அதேநேரம் சிக்கன் முழுதாக வெந்துவிடவும் கூடாது.
*பின் 4 1/2 கப் நீர் சேர்த்து கொதிக்கவைத்து அதனுடன் வறுத்த பாஸ்மதி+புதினா+பாதி கொத்தமல்லித்தழை +தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
*மூடி போட்டு வேகவிடவும் நீர் நன்கு சுண்டி வரும் போது மீதமுள்ள நெய் சேர்த்து தம்மில் 10 நிமிடம் போடவும்.
*சாதம் வெந்ததும் வேறொரு பாத்திரத்தில் மாற்றி மீதமிள்ள கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி விட்டு பரிமாறவும்.
பி.கு
*இதே முறையில் மட்டனில் செய்யும் போது முதலில் மட்டனை வேகவைத்த பின் மேற்கூறிய செய்முறையில் செய்யவேண்டும்.
20 பேர் ருசி பார்த்தவர்கள்:
Ayoo... Summa supera iruku Briyani....
இங்கு பிரியாணி... அங்கு சாம்பார் பொடி போட்ட சிக்கன் 65 (http://asiyaomar.blogspot.in/2013/06/65-chicken-65-with-sambar-powder.html)
நன்றி...
Wow too tempting,passing this link to a friend who is gr8 fan of Briyani...
Wow too tempting,passing this link to a friend who is gr8 fan of Briyani...
பிரியாணின்னா எந்த பேருனாலும் சாப்பிட பிடிக்கும்.., ம்ம் செஞ்சு பார்த்துட வேண்டியதுதான்.. பகிர்வுக்கு நன்றி!
பிரியாணின்னா எந்த பேருனாலும் சாப்பிட பிடிக்கும்.., ம்ம் செஞ்சு பார்த்துட வேண்டியதுதான்.. பகிர்வுக்கு நன்றி!
Super.Looks awesome..
nice...
anjsappar piriyaaNi..aahaa..
Thanks for the recipe. Keep up the good work.
Super Biryani Menaga, Asathal...
paakave supera irukku
ருசியான குறிப்பு..
tempting cliks with perfect version
Tasty Appetite
looks real yummy ! wonderful clicks !
OMG ! u r tempting me badly !
This looks super delicious and yumm..
அருமையாக, மிகச் சுவையாக வந்தது. அடுத்த முறை தண்ணீர் அளவை சற்று குறைக்கலாமென்று இருக்கிறேன்.
செய்முறைக்கு மிகவும் நன்றி.
அஞ்சப்பர் ஸ்டைல் என்றால் என்ன?
@அப்பாதுரை சார்
செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி!!அஞ்சப்பர் என்பது செட்டிநாடு உணவகம்
Post a Comment