இந்த சொதியின் சிறப்பே காய்களை தேங்காய்பாலில் தக்காளி சேர்க்காமல் செய்வது தான். சிலர் பாசிப்பருப்பு +மஞ்சள்தூள் சேர்க்காமல் செய்வார்கள்.
இதனை செய்த அன்றே உபயோகப்படுத்துவது நல்லது.மறுபடியும் சூடுபடுத்தி சாப்பிடும் போது சொதியின் சுவை மாறிவிடும்.
தே.பொருட்கள்
வேகவைத்த பாசிப்பருப்பு - 1/4 கப்
நீளமாக அரிந்த வெங்காயம் - 1
பூண்டுப்பல் - 5
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
கேரட் - 2
பீன்ஸ் - 10
உருளைகிழங்கு - 2 பெரியது
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க
பட்டை - 1 சிறுதுண்டு
கிராம்பு - 3
பிரிஞ்சி இலை -1
ஏலக்காய் - 2
எண்ணெயில் வதக்கி அரைக்க
இஞ்சி துண்டுகள் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
செய்முறை
*எண்ணெயில் வதக்கி அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.
*தேங்காயை துருவி முதல் பால் 1/2 கப்,2ஆம் பால் 3/4 கப் மற்றும் 3ஆம் பால் 1 கப் எடுக்கவும்.
*காய்களை நடுத்தர துண்டுகளாக நறுக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாலிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம் +பூண்டுப்பல் சேர்த்து வதக்கவும்.
*பின் காய்கள் சேர்த்து வதக்கி மஞ்சள்தூள்+உப்பு+3 ஆம் பால் சேர்த்து வேகவிடவும்.
*3/4 பாகம் காய்கள் வெந்ததும் 2ஆம் பால் சேர்த்து வேகவிடவும்.
*காய்கள் முழுவதும் வெந்ததும் அரைத்த பச்சை மிளகாய் விழுது+வேகவைத்த பாசிபருப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
*பச்சை வாசனை அடங்கியதும் 1ஆம் பால் சேர்த்து நுரை வரும் போது இறக்கவும்.
*சூடு சிறிது அடங்கியதும் எலுமிச்சை சாறு + கறிவேப்பிலை சேர்க்கவும்.
*இதனை சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
*1ஆம் பால் சேர்த்ததும் சொதியை கொதிக்கவிடக்கூடாது.
This is off to Priya's Vegan Thursday
9 பேர் ருசி பார்த்தவர்கள்:
mapillai sothi pere arumaiya iruku .seithu parkavendiya sothi
குறிப்பு அருமை, மேனகா.
I remember seeing this in Chef Damodaran's show long back. Thanks for sharing this delicious recipe, looks so good, bookmarked :)
அருமையான செய்முறையுடன், புதியதொரு பெயருடன் பார்க்கும்போதே சாப்பிடத் தூண்டும்படி உள்ளது மேனகா. பகிர்ந்தமைக்கு நன்றி.
Simple tasty sodhi
செய்து பார்ப்போம்... நன்றி சகோதரி...
tis s a long due to prepare.. will try it looks so good
Sothi looks delicious, i can enjoy with some rice and spicy potato fry.
super delicious...
Post a Comment