Thursday 24 April 2014 | By: Menaga Sathia

பொட்டுக்கடலை குருமா/ Pottukadalai (Fried Gram Dal ) Kurma | Side dish for Idli,Dosa & Chapathi

தே.பொருட்கள்

வெங்காயம் -1
தக்காளி -1
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க

தேங்காய்த்துறுவல் -2 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை - 5 டீஸ்பூன்
பட்டை -சிறுதுண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் -1
காய்ந்த மிளகாய் -3
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை

* அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.வெங்காயம்+தக்காளியை பொடியாக நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
*வதங்கியதும் தக்காளி+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
*தேவைக்கு நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
*பின் அரைத்த விழுது + சிறிது நீர் சேர்த்து சிறுதீயில் கொதிக்கவிடவும்.
*இடையிடையே கிளறிவிடவும்.பொட்டுக்கடலை சேர்த்திருப்பதால் குருமா சீக்கிரம் அடிபிடிக்கும் மற்றும் கெட்டியாகிவிடும்.

*பச்சை வாசனை அடங்கியதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

பி.கு

தேங்காய்த்துறுவல் அதிகம் சேர்த்தாலும் சுவை மாறிவிடும்.

Sending to Priya's Vegan Thursday

9 பேர் ருசி பார்த்தவர்கள்:

திண்டுக்கல் தனபாலன் said...

தேங்காய்த்துறுவல் அதிகம் சேர்க்காமல் செய்து பார்க்கிறோம்... நன்றி சகோதரி...

great-secret-of-life said...

healthier version of the korma.. nice one

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிகவும் அருமையான, அதே சமயத்தில் செய்வதற்கு எளிய உணவுவகையை பகிர்ந்துள்ளீர்கள். மிக்க நன்றி மேனகா. வாழ்த்துக்கள்

Lifewithspices said...

hv made sambar with pottu kadalai shd try tis kurma too.. looks yumm

Priya Suresh said...

Super kurma, dosakuda semaiya irrukum intha kurma.

Shama Nagarajan said...

yummy preparation...tempting

Priya said...

arumai -easy yana side dish ..

mullaimadavan said...

Kurma looks super! will make a nice side for hot steaming idlis.

Asiya Omar said...

பார்க்கவே ஈசியாக இருக்கு. சூப்பர்.

01 09 10