இன்றுடன் வலைப்பூவில் எழுத தொடங்கி 6 ஆண்டுகள் நிறைவடைகிறது...
தே.பொருட்கள்
பால் பவுடர் - 1 கப்
மைதா -1/4 கப்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
வெண்ணைய் -2 டேபிள்ஸ்பூன் (அறைவெப்பநிலையில்)
குளிர்ந்த பால் - தேவைக்கு
சர்க்கரை - 1 1/2 கப்
நீர் - 1 1/2 கப்
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
ரோஸ் எசன்ஸ் - 2 துளிகள்
எண்ணெய் -பொரிக்க
செய்முறை
* பால் பவுடர் + மைதா + சோடா உப்பு மூன்றையும் நன்றாக சலித்து வெண்ணெய் சேர்த்து கலக்கவும்.
*பின் தேவைக்கு பால் சேர்த்து மிருதுவாக பிசையவும்.மாவு கைகளில் ஒட்டும் பதத்தில் இருக்கும். 5 நிமிடம் வைத்திருந்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.
*பாத்திரத்தில் சர்க்கரை+நீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிடவும்.பிசுபிசுப்பு பதம் வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஏலக்காய்த்தூள்+ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.
*எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து சர்க்கரை பாகில் 3 - 4 மணிநேரங்கள் ஊறவைத்து பரிமாறவும்.
*இதனை ஐஸ்க்ரீம் அல்லது அல்வாவுடன் பரிமாற சுவையாக இருக்கும்.
பி.கு
* மாவில் பேக்கிங் சோடா அதிகம் சேர்த்தால் பொரிக்கும் போது உதிர்ந்துவிடும்
* உருண்டையை உருட்டும் போது வெடிப்புகள் இல்லாமல் உருட்டவும் இல்லையெனில் சர்க்கரை பாகில் ஊறியதும் உதிர்ந்துவிடும்.அப்படி உருட்டும் போது வெடிப்பு வந்தால் மாவினை மேலும் சிறிது பால் தெளித்து பிசையவும்.
*எண்ணெய் அதிகம் காயவைத்து பொரித்தால் ஜாமூன் மேலே பொன்னிறமாகவும்,உள்ளே வேகாமலும் இருக்கும்.மிதமான சூட்டில் பொரிக்கவும்.
*பொரித்த உருண்டைகளை சர்க்கரை பாகு மிதமான சூட்டில் இருக்கும் போது போடவும்.சூடான பாகில் போட்டால் உருண்டை ஊறியதும் எடுக்கும் போது உடையும்.
*உருண்டைகளை சிறியதாக உருட்டவும்,பொரிக்கும் பொது 2 மடங்காகும்.
18 பேர் ருசி பார்த்தவர்கள்:
இனிப்புச் செய்முறையுடன்
ஆறாம் ஆண்டை நிறைவு செய்யும்
தாங்கள் தொடர்ந்து சிறந்த பதிவராக
பல்லாண்டு பல்லாண்டு பரிமளிக்க
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
congrats for ur milestone.. looks so yum
Super akka... onnu kedaikuma
இனிய வாழ்த்துக்கள் !! குலோப்ஜானின் இனிப்பைப்போல வலைப்பயணம் இனிதே தொடர மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!
Congrats dear...delicious and yummy gulab jamun :)
super yummy and wishes for the sixth year dear :)
super soft jamuns
Different and interesting version, looks good :)
Happy blog anniversary Menaga, gulab jamuns looks absolutely succulent and juicy.
2 murai valthanum ungala .ondru piranthanal valthu erandu unga blog kulanthaiku 6 andu .
அருமையான குறிப்பு.ஆறாண்டு நிறைவுக்கு வாழ்த்துகள்! தொடருங்கள்!
ஆறாம் ஆண்டை நிறைவு செய்து
ஏழாம் ஆண்டில் எழுச்சியுடன் இனிமையாக பயணம் தொடங்கி இருப்பதற்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!
Happy blog anniversary n belated birthday wishes.. yummy jamuns
ஆறாம் ஆண்டு விழாவிற்கு வாழ்த்துக்கள்! சுவையான குலாப் ஜாமூன் பகிர்வு அருமை! பின்குறிப்புக்கள் மிகவும் உதவும்! நன்றி!
dry gulab jamun seivathu epdi endru sollavum,,
dry gulab jamun eppadi seiyyavendum endru sollavum
@Thiruvarur V.Mani
Here is the link for dry jamun http://sashiga.blogspot.fr/2010/10/dry-jamun.html
Hi ..Thank you for information.. recently Aachi launched Aachi nxtgen cooking YouTube channel. It's amazing. All quick recipes are available... Yummy Fish Curry Masala powder, Tasty Sambar Powder, Crispy Rava Dosa Mix, Delicious Gulab Jamun Mix, Instant Jalebi Mix, Tasty Masala Vada Mix
Post a Comment