Monday, 15 December 2014 | By: Menaga Sathia

சேப்பங்கிழங்கு வறுவல் / Seppankizhangu Varuval | Colocasia (Taro Root / Arbi ) Fry

தே.பொருட்கள்

சேப்பங்கிழங்கு -4 பெரியது
வரமிளகாய்த்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொட்டுக்கடலைமாவு - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு+பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு

செய்முறை

*சேப்பங்கிழங்கை ஆவியில் வேகவைத்து தோலுரித்து வட்டமாக நறுக்கவும்.

*அதனுடன் உப்பு+மிளகாய்த்தூள்+மஞ்சள்தூள் சேர்த்து பிசைந்து 15நிமிடம் வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு+உளுத்தம்பருப்பு+பெருங்காயத்தூள் போட்டு தாளித்து சேப்பங்கிழங்கை போட்டு நன்கு மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.

*பின் பொட்டுக்கடலை மாவை தூவி மேலும் 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

4 பேர் ருசி பார்த்தவர்கள்:

RajalakshmiParamasivam said...

உங்கள் தளத்தில் வாழ்த்துப் பக்கத்தில் உள்ள "சுலபமாக தேர்வு செய்ய" இணைப்புகள் இயங்கவில்லை. இது உங்கள் கவனத்திற்கு.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

சிறப்பான குறிப்பு சுவையான உணவு.பற்றிய அறிமுகம் நன்றாக உள்ளது.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

விச்சு said...

இதைஇதைத்தாங்க நானும் எதிர்பாக்குறேன். எங்க வீட்ல செஞ்சா மட்டும் இந்து பொன்முறுவலா வரமாட்டுக்கே.. அழகா இருக்குங்க.

'பரிவை' சே.குமார் said...

ஊருக்குப் போனால் மனைவியின் கைப்பக்குவத்தில் விரும்பி உண்ணும் உணவு...
அருமை சகோதரி.

01 09 10