Thursday, 28 May 2015 | By: Menaga Sathia

முந்திரிப் பருப்பு சிக்கி /Cashnew Nut Brittle | Cashew Nut Chikki

print this page PRINT IT
தே.பொருட்கள்

முந்திரிப்பருப்பு - 1 கப்
சர்க்கரை -1/2 கப்
எள் -மேலே தூவ
நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

*முந்திரியை ஒடியாக நறுக்கி வெறும் கடாயில் வறுத்தெடுக்கவும்.

*அலுமினியம் பாயில் மற்றும் பூரி கட்டையில் நெய் தடவி வைக்கவும்.

*பாத்திரத்தில் சர்க்கரை சேர்க்கவும்.
*சர்க்கரை கரைந்து ப்ரவுன் கலரில் வரும் போது உடனே முந்திரியை கலந்து டிரே அல்லது அலுமினியம் பாயிலில் கொட்டி சமபடுத்தவும்.அதன்மேல் எள் தூவி விடவும்.
*சூடாக இருக்கும் போதே துண்டுகள் போட்டு,ஆறியதும் உடைத்துக் கொள்ளலாம்
பி.கு

*1/2 கப் சர்க்கரையே போதுமானது,அதிகம் வேண்டுமெனில் 3/4 கப் சேர்த்துக் கொள்ளலாம்.

3 பேர் ருசி பார்த்தவர்கள்:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, தங்களின் இந்த ’முந்திரிப்பருப்பு சிக்கி’ இப்போது என் கண்களில் சிக்கிக் கொண்டுவிட்டது. உடனே அதை எடுத்துச் சாப்பிடணும்போல ஆசையாக உள்ளது. :)

பகிர்வுக்கு நன்றிகள்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
எல்லாம் எழுதி எடுத்து விட்டாச்சி நிச்சயம்செய்து பார்க்கிறோம்...செய்முறை விளக்கத்துடன் பகிர்வு பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thenammai Lakshmanan said...

அஹா பார்க்கவே செமயா இருக்கே

சாப்பிடணும் போல இருக்கு :)

01 09 10