Friday, 26 June 2015 | By: Menaga Sathia

பஞ்சாபி சமோசா / PUNJABI SAMOSA | SAMOSA RECIPES

print this page PRINT IT 
நம்முடைய சாதாரண சமோசாவை விட இந்த சமோசா எங்கள் அனைவருக்கும் பிடித்த ஒன்று...

குறிப்பினை இங்கே பார்த்து செய்தது.

தே.பொருட்கள்

மேல் மாவுக்கு
மைதா மாவு -2 1/2 கப்
ஓமம்- 1 டீஸ்பூன்
உப்பு -1 டீஸ்பூன்
நெய் -4 டேபிள்ஸ்பூன்

*பாத்திரத்தில் மைதா+உப்பு+ஓமம்+நெய் சேர்த்து கலக்கவும்.பின் நீர் சேர்த்து கெட்டியாக சப்பாத்தி மாவு போல பிசையவும்.

*பிசைந்த மாவினை ஈரத்துணியால் மூடி குறைந்தது 2 அல்லது 3 மணிநேரங்கள் ஊறவிடவும்.

ஸ்டப்பிங் செய்ய‌

வேகவைத்து மசித்த உருளை -5 நடுத்தரளவு
ப்ரோசன் பச்சை பட்டாணி -1 கப்
ஆம்சூர் பவுடர் -1 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா+வரமிளகாய்த்தூள்+தனியாத்தூள் -தலா 1 டீஸ்பூன்
தனியா -1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மாதுளை விதை -1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி- 1 டீஸ்பூன்
சீரகம்- 1 டீஸ்பூன்
உப்பு- தேவைக்கு
நெய் -2 டேபிள்ஸ்பூன்

*கடாயில் நெய் விட்டு சீரகம் சேர்த்து தாளித்து நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.

*பின் ஒன்றிரண்டாக மசித்த உருளை மற்றும் தூள் வகைகள்+உப்பு சேர்த்து வதக்கவும்.

*வேறொரு கடாயில் தனியா மற்றும் காய்ந்த மாதுளை விதையை வருத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும்.

*பொடித்த தனியா பொடியை உருளை மசாலாவில் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி பட்டாணியை சேர்க்கவும்.

*2 நிமிடங்கள் வதக்கி ஸ்டப்பிங் கலவையை ஆறவைக்கவும்.

*மைதா மாவினை சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி போல தேய்க்கவும்.

*அதனை நடுவில் கத்தியால் கீறவும்.

*வெட்டிய நீள பகுதியில் நீர் தடவி அதனை அப்படியே 2 முனைகளையும் நடுவில் சேர்த்தால் நீர் தடவிய பகுதி ஒட்டிக்கொள்ளும்.

*அப்படியே கையில் எடுத்து சிறிது ஸ்டப்பிங் கலவையை நன்கு  அழுத்தி வைக்கவும்.

*மேற்புறம் சுற்றிலும் சிறிது நீர் தடவி அப்படியே ஒட்டி விடவும்.

*இப்படியே அனைத்து உருண்டையிலும் செய்து சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

*பார்ட்டிகளில் இந்த சமோசாவை செய்து அசத்தலாம்.

பி.கு

*மேல் மாவு தளர்த்தியாக இருந்தால் சமோசா மொறுமொறுப்பாக இருக்காது.அதனால் மாவினை கெட்டியாக பிசையவும்.

*எவ்வளவு நேரம் மாவினை ஊறவைக்கிறோமோ அவ்வளவுக்கும் சமோசா நன்றாக இருக்கும்.

*அனைத்து சமோசவையும் செய்து முடிக்கும் வரை காய்ந்து போகாமல் பேரால் மூடி வைக்கவும்.

5 பேர் ருசி பார்த்தவர்கள்:

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர்...!

தி.தமிழ் இளங்கோ said...

அன்புள்ள சகோதரி திருமதி. மேனகா சத்யா அவர்களுக்கு வணக்கம்! நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

தங்களின் வலைத்தளத்தினை இன்று (27.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:

நினைவில் நிற்போர் - 27ம் திருநாள்
http://gopu1949.blogspot.in/2015/06/27.html

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

great-secret-of-life said...

anyone says no to this samosa! perfect for tea time

”தளிர் சுரேஷ்” said...

சுவையான சமோசா பகிர்வுக்கு நன்றி!

'பரிவை' சே.குமார் said...

வாவ்... சூப்பர்.

01 09 10