Wednesday 8 July 2015 | By: Menaga Sathia

தினை அதிரசம் / Thinai (Foxtail Millet ) Adhirasam | Millet Recipes


print this page PRINT IT 
தினைக்கு பதில் மற்ற சிறுதானியங்களிலும் செய்யலாம்.ஆனால் தினையில் செய்தால் மற்ற சிறுதானியங்களில் செய்ததை விட சுவையாக இருக்கும்.

தே.பொருட்கள்
தினை- 1 1/4 கப்
துருவிய வெல்லம்- 3/4 கப்
ஏலக்காய்த்தூள் -1/2 டீஸ்பூன்
சுக்குபொடி -1/4 டீஸ்பூன்
நெய்- 1 டீஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க‌

செய்முறை
*தினையை கழுவி 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

*ஊறியதும் நீரை வடிகட்டி துணியில் பரப்பி நிழலில் ஈரம் போக உலர்த்தவும்.

*உலர்ந்ததும் மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.

*பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து 1/4 கப் நீர் ஊற்றி கொதிக்கவைத்து வடிகட்டவும்.

*வடிகட்டிய வெல்லநீரை மீண்டும் கொதிக்கவைத்து உருண்டை பாகு எடுக்கவும்.

*கிண்ணத்தில் நீரை ஊற்றி,வெல்ல பாகினை ஊற்றினால் உருண்டையாக எடுக்கும் பதத்தில் வரவேண்டும்.

*பாகுபதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஏலக்காய்பொடி+சுக்குபொடி+பொடித்த மாவு சேர்த்து கிளறவும்.

*நன்றாக கிளறிய பின் நெய் சேர்த்து கிளறி ஒர் இரவு முழுவதும் மாவினை ஊற‌ வைக்கவும்.

*மறுநாள் சம உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

*எண்ணெய் தடவி ப்ளாஸ்டிக் கவரில் உருண்டை வைத்து மிக மெலிதாக இல்லாமலும் ,தடிமனாக இல்லாமலும் தட்டவும்.

*எண்ணெய் காயவைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.பொரிக்கும் போது உப்பலாக வரும்.

*பொரித்த அதிரசத்தின் மேலே கிண்ணத்தை வைத்து ஔத்தினால் தட்டையாகவும்,அதிகபடியான எண்ணெயும் வந்துவிடும்.

*ஆறியதும் காற்றுப்புகாத டப்பாவில் வைத்திருந்து பயன்படுத்தவும்.

பி.கு

அதிரசம் செய்வதற்கு பாகு வெல்லம் சிறந்தது.சுவையாகவும்,கலராகவும் இருக்கும்.

4 பேர் ருசி பார்த்தவர்கள்:

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து பார்க்கிறோம்... நன்றி...

Jaleela Kamal said...

மிக அருமை மேனகா எனக்கு ரொம்ப பிடிச்சது , இதை ஒரு இரவு முழுவதும் வெளியில் வைக்கனும அல்லது பிரிட்ஜில் வைக்கனுமா? என்பதை குறிப்பில் குறிப்பிடுங்கள் , அப்ப தான் புதிதாக செய்பவர்களுக்கு வசதியாக இருக்கும்.

'பரிவை' சே.குமார் said...

படங்களோடு விளக்கம் அருமை...

”தளிர் சுரேஷ்” said...

அருமையான பகிர்வு! இந்த பகிர்வை வலைச்சரத்தில் நேற்று அடையாளப்படுத்தி உள்ளேன்! நேரமிருப்பின் பார்க்கவும்! நன்றி!

01 09 10