திருவாதிரை குழம்பு தாளகம்,ஏழுகறி குழம்பு எனவும் சொல்வார்கள். இந்த குழம்பினை திருவாதிரை களியுடன் சமைத்து ஆருத்ரா தரிசனம் அன்று இறைவனுக்கு படையல் செய்வார்கள்.
இந்த குழம்பிற்கு நாட்டுகாய்கள் மட்டுமே சேர்த்து சமைப்பாங்க.
இதில் சேனைக்கிழங்கு ,மஞ்சள் பூசணிக்காய், ப்ரெஷ் அல்லது டிரை மொச்சை, அவரைக்காய்,சேப்பங்கிழங்கு,வாழைக்காய்,சக்கரைவள்ளிக்கிழங்கு,கொடிவகை காய்கள் என 7 காய்கள் சேர்க்கலாம்.
நான் சேர்த்திருப்பது காய்ந்த 1/4 கப் மொச்சை,1 சிறிய உருளை,1 சிறிய சக்கரைவள்ளிகிழங்கு,1/4 கப் மஞ்சள் பூசணி,1/4 அவரை துண்டுகள்,சிறிய வாழைக்காயில் பாதி, 1/4 கப் சேனைக்கிழங்கு துண்டுகள்
தே.பொருட்கள்
7 வகை காய்கள் - மேலே சொன்ன அளவில்
புளிகரைசல்- 1/2 கப்
உப்பு -தேவைக்கு
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
வறுத்து அரைக்க
காய்ந்த மிளகாய் -7
கடலைபருப்பு- 2டீஸ்பூன்
வெ.உ.பருப்பு - 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்
மிளகு -1 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல்- 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க
எண்ணெய்- 3/4 டீஸ்பூன்
கடுகு- 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -1
கறிவேப்பிலை -1 கொத்து
செய்முறை
*மொச்சையை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
*குக்கரில் காய்களை சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கி,தேவையான நீர்+மஞ்சள்தூள் சேர்த்து 1 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் வருத்து நைசாக அரைக்கவும்.
*காய்கள் வெந்ததும் புளி கரைசல்+உப்பு+வேகவைத்த மொச்சை+அரைத்த விழுதினை சேர்த்து கொதிக்கவிடவும்.
*குழம்பு கொதித்து கெட்டியாக வரும் போது தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து இறக்கவும்.
2 பேர் ருசி பார்த்தவர்கள்:
வணக்கம்
அறபுதமன விளக்கம் செய்முறை விளக்கத்துடன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
my favourite too.. Lovely mix of vegetable
Post a Comment