PRINT IT
எந்த கருவாடு போட்டும் செய்யலாம்.இதில் நெத்திலி கருவாடு போட்டு செய்துருக்கேன்.
புளிக்கு பதில் மாங்காயினை புளிப்பிற்கேற்ப போட்டு செய்ய வேண்டும்.
தே.பொருட்கள்
நெத்திலி கருவாடு -2 கைப்பிடி
வாழைக்காய்- 1
மாங்காய்- 1
நீர் -3 கப்
வரமிளகாய்த்தூள்- 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய்- 2
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
சின்ன வெங்காயம்- 10
தேங்காய்த்துறுவல் -1/2 கப்
உப்பு- தேவைக்கு
தாளிக்க
கடுகு- 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்- 5
கறிவேப்பிலை- 1 கொத்து
தேங்காய் எண்ணெய்- 2 டீஸ்பூன்
செய்முறை
*வாழைக்காயினை தோல் சீவவும்.மாங்காய் மற்றும் வாழைக்காயினை அவியலுக்கு நறுக்குவதுபோல் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
*தேங்காயினை மைய அரைத்து வைக்கவும்.
*கருவாட்டினை சுத்தம் செய்து 1/2 மணிநேரம் வெந்நீரில் ஊறவைக்கவும்.
*மண்சட்டியில் நீர்+உப்பு+மஞ்சள்தூள்+வரமிளகாய்த்தூள்+இஞ்சி+கீறிய பச்சை மிளகாய்+1 டீஸ்பூன் எண்ணெய்+நறுக்கிய சின்ன வெங்காயம்+சுத்தம் செய்த கருவாடு+நறுக்கிய வாழைக்காய் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
*நன்றாக கொதித்ததும் மாங்காய்+தேங்காய் விழுதினை சேர்த்து மேலும் நன்கு கொதிக்க வைக்கவும்.
*பச்சை வாசனை அடங்கியதும் மீதமிருக்கும் எண்ணெயில் தாளித்து சேர்க்கவும்.
3 பேர் ருசி பார்த்தவர்கள்:
எனக்கு கருவாட்டுக் குழம்புன்னா ரொம்ப பிடிக்கும்.
ஊருக்குப் போன நண்பரிடம் நெத்திலி, காராப்பொடி எல்லாம் வாங்கிவரச் சொல்லி வைத்திருக்கிறேன்... வாழக்காய் மாங்காய் போட்டுச் செய்ததில்லை... செய்து பார்க்கலாம்....
வாழைக்காய், மாங்காயுடன் நெத்திலி கருவாட்டுக்குழம்பு அமர்க்களமாக இருக்கிறது மேனகா!
Mouthwatering... please parcel some here Menaga!
Post a Comment