Friday, 16 October 2009 | By: Menaga Sathia

இனிப்பு பூந்தி/Sweet Bhoondi

தே.பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
சமையல் சோடா - 1 சிட்டிகை
நெய் - 3 டீஸ்பூன்
முந்திரி,திராட்சை,டைமண்ட் கல்கண்டு - தேவைக்கு
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் கலர் - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க

செய்முறை :

*கடலை மாவு+சமையல் சோடா இரண்டையும் கலந்து சலிக்கவும்.

*அதனுடன் மஞ்சள் கலர் கலந்து தோசை மாவு பதத்திற்க்கு நீர் சேர்த்து கலக்கவும்.கண் கரண்டியில் ஊற்றினால் மாவு விழணும் அதுதான் சரியான பதம்.

*எல்லா மாவையும் கண்கரண்டியில் தோய்த்து பூந்திகளாக பொரித்து வைக்கவும்.

*முந்திரி,திராட்சையை நெய்யில் வறுக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு 3/4 கப் நீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.2 விரல்களால் தொட்டால் பிசுபிசுப்பாக இருக்கனும்.அதுதான் பூந்திக்கு சரியான பதம்.

*அடுப்பை நிறுத்திவிட்டு பூந்தி+ஏலக்காய் பொடி+கல்கண்டு+முந்திரி திராட்சை+மீதமிருக்கும் நெய் சர்க்கரை பாகில் கலந்து மூடி வைக்கவும்.

*சிறிது நேரம் கழித்து பார்த்தால் பூந்தி பொலபொலவென இருக்கும்.


பி.கு:

*இது நான் லட்டுக்காக செய்த குறிப்பு.சர்க்கரை பாகு ஆறிவிட்டதால் லட்டு பிடிக்க வரவில்லை.இளஞ்சூடாக இருக்கும் போதே நெய் தொட்டு லட்டுகளாக பிடிக்கவும்.

*கரைத்த கடலைமாவில் 3 பங்காக பிரித்து சிவப்பு+பச்சை+மஞ்சள் கலர் சேர்த்து கலர் பூந்தி செய்யலாம்.பார்ப்பதற்க்கு அழகாக இருக்கும்.

கீரை சுண்டல் /Keerai Sundal

தே.பொருட்கள்:

ஏதாவது ஒரு கீரை - 1 கப்
பொடித்த ஒட்ஸ் - 1கப்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தேங்காய்த்துறுவல் - சிறிதளவு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - வாசனைக்கு

செய்முறை :

*கீரையை சுத்தம் செய்து லேசாக வதக்கி பச்சை மிளகாய்+உப்பு+சீரகம் சேர்த்து அரைக்கவும்.

* அதில் பொடித்த ஒட்ஸ் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைக்கவும்.

*தாளிக்க கொடுத்துள்ளவைகளைத் தாளித்து.தேங்காய்த் துறுவல் வேக வைத்த உருண்டையில் சேர்க்கவும்.

பி.கு:

நான் சேர்த்திருப்பது முருங்கை கீரை.சுவை நன்றாக இருந்தது.
Thursday, 15 October 2009 | By: Menaga Sathia

வெல்ல அதிரசம்

தே.பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்
வெல்லம் - 2 கப்
பொடித்த ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

*அரிசியை 1/2 மணிநேரம் ஊறவைத்து தண்ணியில்லாமல் வடிகட்டி நிழலில் ஈரமில்லாமல் உலர்த்தி மாவாக்கவும்.

*மாவு ரொம்ப நொறநொறன்னு இருக்ககூடாது.

*ஒரு பாத்திரத்தில் வெல்லம் போட்டு அது சிறிது நீர்விட்டு காய்ச்சவும்.வெல்லம் கரைந்ததும் மண்ணில்லாமல் வடிகட்டவும்.

*வடிகட்டிய வெல்லத்தை மீண்டும் காய்ச்சி பாகு எடுக்கவும்.

*ஒரு கிண்ணத்தில் நீர் விட்டு வெல்லத்தை விடவும் அது உருட்டும் பதத்திற்க்கு வந்தால் அதுதான் சரியான பதம்.

*சரியான பதம் வந்ததும் இறக்கி அரிசி மாவு+ஏலக்காய் போட்டு நன்கு கிளறவும்.அதன் மீது நெய்விடவும்.

*பின் உருண்டைகளாக உருட்டி ரொம்ப மெல்லியதாக இல்லாமலும்,தடினமாக இல்லாமலும் தட்டி எண்ணெயில் பொரிக்கவும்.

*சுவையான அதிரசம் ரெடி.

கவனிக்க:

*கிளறிய மாவு கெட்டியாக இருக்கனும்,தண்ணியாக இருந்தால் மீண்டும் அரிசியை ஊறவைத்து அரைத்து போடவும்.

*அதிரசத்திற்க்கு ஈரமாவு தான் பயன்படுத்த வேண்டும்.

*மாவை கிளறி உடனே சுடுவதை விட 2 நாள் கழித்து சுட்டால் நன்றாக இருக்கும்.

*அதிரசத்தை எண்ணெயிலிருந்து பொரித்ததும் ஒரு கிண்ணத்தை வைத்து அழுத்தி எடுத்தால் எண்ணெய் வந்து விடும்.ஆறியதும் மெத்தென்று இருக்கும்.
Wednesday, 14 October 2009 | By: Menaga Sathia

ஈஸி தட்டை / Easy Thattai

தே.பொருட்கள்:

பச்சரிசிமாவு - 2 கப்
காய்ந்த மிளகாய் - 3
பெருஞ்சீரகம் - 2 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 5
ஊறவைத்த கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கட்லை - 1/2 கப்
மிளகு - 1 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
உருக்கிய பட்டர் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

*மிளகாய்+பெருஞ்சீரகம்+பூண்டுபல் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*பொட்டுக்கடலை+மிளகு மிக்ஸியில் பவுடராக அரைக்கவும்.

*ஊறிய கடலைப்பருப்பு+பொட்டுக்கடலை மாவு+அரைத்த மிளகாய் விழுது+உப்பு+உருக்கிய பட்டர்+கறிவேப்பிலை இவற்றை அரிசி மாவுடன் கலந்து கெட்டியாக பிசையவும்.

*பிசைந்த மாவு சிறு உருண்டையாக எடுத்து ஒரு ப்ளாஸ்திக் கவரில் எண்ணெய் தொட்டு வட்டமாக தட்டி பேப்பரில் போட்டு உலர விடவும்.

*ரொம்ப நேரம் உலர விடக்கூடாது அப்படி செய்தால் பேப்பரிலிருந்து எடுக்கும் போது தட்டை உடைந்து விடும்.

*எல்லா மாவையும் இதே மாதிரி செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பொன்னியரிசி (புழுங்கலரிசி) தட்டையின் செய்முறைக்காண இங்கே க்ளிக் செய்யவும்.


பி.கு:

கடையில் விற்கும் அரிசிமாவில் செய்தேன்.செய்வதற்க்கும் மிக எளிது.
Tuesday, 13 October 2009 | By: Menaga Sathia

உருளைக்கிழங்கு ஒமப்பொடி

இது என்னுடைய 150 வது பதிவு.எனக்கு பின்னுட்டமிட்டு உற்சாகப்படுத்தும் சகோதர சகோதரிகளுக்கும்,பாலோவர்ஸ் அனைவர்க்கும் மனமார்ந்த நன்றி,நன்றி!!


தே.பொருட்கள்:

வேகவைத்த உருளைக்கிழங்கு - 1 பெரியது
கடலை மாவு - 1 கப்
அரிசிமாவு - 1/4 கப்
ஒமம் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

*உருளைக்கிழங்கை நன்கு கட்டியில்லாமல் மசிக்கவும்.

*ஒமத்தை சுத்தம் செய்து அரைத்து 1/4 கப் அளவிற்க்கு வடிக்கட்டவும்.

*பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு+கடலைமாவு+அரிசிமாவு+உப்பு+ஒமத்தண்ணீர்+நெய் அனைத்தும் கலந்து கெட்டியாக பிசையவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை ஓம அச்சில் போட்டு நேரடியாக எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்கவும்.


பி.கு:

உருளைக்கிழங்கை தேவைக்கு அதிகமா வேகவைத்துவிட்டேன்.அதை வீணாக்கமல் இப்படி செய்தேன்.ரொம்ப நல்லாயிருந்தது.

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு

தே.பொருட்கள்:

குட்டி கத்திரிக்காய் - 8
புளி தண்ணீர் - 1 கோப்பை
சின்ன வெங்காயம் - 8
பூண்டுப்பல் - 5
கறிவேப்பிலை -சிறிது
தக்காளி - 1 சிறியது
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் - 3 கீறிய பத்தை
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு

எண்ணெயில் வறுத்தரைக்க:

தனியா - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
மிளகு -1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
எள் -1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 6
பூண்டுப்பல் -5
கறிவேப்பிலை -சிறிது

செய்முறை :

*புளிதண்ணீரில் உப்பு+தக்காளி கரைத்து வைக்கவும்.

*எண்ணெயில் வறுத்து அரைக்க கொடுத்துள்ளவையுடன் தேங்காய் சேர்த்து விழுதாக ரைக்கவும்.

*வெங்காயம்+பூண்டுப்பல் நறுக்கவும்.கத்திரிக்காயை நான்காக கீறவும்(முழுவதும் வெட்டக்கூடாது).
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வடகம்+கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்+பூண்டு+கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.

*பின் அரைத்த விழுதை சேர்த்து புளிகரைசலை ஊற்றிக் கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
Monday, 12 October 2009 | By: Menaga Sathia

இனிப்பு சோமாஸ் / SWEET SOMAS | DIWAL RECIPES

தே.பொருட்கள்:

மைதா - 1 கப்
உப்பு - 1 பிஞ்ச்
உருக்கிய டால்டா (அ) நெய் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

பூரணத்துக்கு:

ரவை - 1/2 கப்
மெல்லிய சேமியா -1/2 கப்
சர்க்கரை - 3/4 கப்
தேங்காய்த்துறுவல் - 3/4 கப்
பொடித்த ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
முந்திரி,திராட்சை - தேவைக்கு

செய்முறை:

*மைதா மாவில் உப்பு+நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து 2 மணிநேரம் ஊறவைக்கவும்.


*தேங்காயை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வதக்கி தனியாக வைக்கவும்.

*பின் நெய் விட்டு முந்திரி+திராட்சையை வதக்கி ரவை+சேமியாவை பொன் முறுவலாக வறுக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் வதக்கிய தேங்காய்+ஏலக்காய்த்தூள்+ரவை+சேமியா+முந்திரி +திராட்சை+சர்க்கரை அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*இப்போழுது பூரணம் ரெடி.

*மைதாமாவை நன்கு பிசைந்து சிறு சிரு உருண்டைகளாக்கி மெல்லியதாக பூரி போல் தேய்க்கவும்.



* தேய்த்த பூரியில் பூரணத்தை வைத்து நன்றாக ஓரங்களை மடித்து அல்லது சோமாஸ் கட்டரில் வெட்டி எடுக்கவும்.

*பின் மிதமான எண்ணெய் சூட்டில் பொரிக்கவும்.சுவையான சோமாஸ் ரெடி.


கவனிக்க:

* மைதாவை நன்கு ஊறவைத்து பிசைவதால் சோமாஸ் நன்றாக இருக்கும்.பிசையும் போது வெந்நீர் ஊற்றி பிசைந்தால் சீக்கிரம் நமத்து போகாது.

* பூரணத்தை வைத்த பிறகு ஓரங்களை நன்றாக மடிக்கவும் இல்லையெனில் பொரிக்கும் போது எண்ணெயில் கொட்டும்.எண்ணெயை ரொம்ப சூடாக இருக்ககூடாது.

*நான் ஓரங்களை மடித்து செய்ததால் இந்த அளவுகள் சரியாக இருக்கும்.சோமாஸ் அச்சியில் செய்தால் அளவுகள் ஒரே சீராக இருக்கும்,சோமாஸும் அதிகமா வரும் ஆனால் பூரணம் இன்னும் அதிகமா செய்யனும் மற்றும் வேலை அதிகமா இருக்கும்.

*இந்த அளவில் செய்ததில் 15 சோமாஸ் வந்தது.

*10 சோமாஸ் செய்ததும் பொரிக்கவும்,பின் மறுபடியும் உருட்டி பொரிக்கவும்.மொத்தமாக பொரித்தால் சோமாஸ் காய்ந்துபோய் எண்ணெயில் பொரிக்கும் போது பூரணம் கொட்டும்.

*சேமியா இல்லையெனில் வெறும் ரவை மட்டும் போட்டு செய்யலாம்.

*இன்னொரு வகை பூரணம் செய்ய பொட்டுக்கடலை மாவு 1/2 கப்+பொடித்த சர்க்கரை 1/2 கப்+ஏலக்காய்த்தூள் 1/4 டீஸ்பூன்+தேங்காய்த்துறுவல் 1/2 கப்.தேங்காயை வறுத்து ஆறியதும் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.படங்களில் இருப்பது இந்த பூரணம் வைத்து செய்தது.
01 09 10