பருப்பு உருண்டைக் குருமா
தே.பொருட்கள்:
க்ரேவிக்கு:
வெங்காயம் பெரியது - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் விழுது -1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லிதூள் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிது
உப்பு+எண்ணெய் - தேவைக்கேற்ப
உருண்டைக்கு:
கடலைப்பருப்பு - 1 கப்
பூண்டு பல் - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி,கறிவேப்பிலை - சிறிது
தாளிக்க:
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - 2
ஏலக்காய் -1
செய்முறை:
*பருப்புக்களை 3/4 மணிநேரம் ஊறவைத்து பூண்டு+சோம்புடன் கொரகொரப்பாக அரைக்கவும்.
*இத்துடன் பொடியாக அரிந்த வெங்காயம்+பச்சை மிளகாய்+ உப்பு+கறிவேப்பிலை+கொத்தமல்லி தழை சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
*வெங்காயம்+தக்காளி பொடியாக நறுக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.
*பின் வெங்காயம்+தக்காளி+விழுது வகைகள்+தூள் வகைகள் சேர்த்து ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
*நன்கு வதங்கியதும் உப்பு+தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
*பச்சை வாசனை அடங்கி கொதித்ததும் உருண்டைகளை சேர்த்து கொதிக்கவிடவும்.
*10 நிமிடம் கழித்து கொத்தமல்லிதழை தூவி இறக்கவும்.
பி.கு: இதே மாதிரி புளி சேர்த்தும் செய்யலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
13 பேர் ருசி பார்த்தவர்கள்:
மிகவும் அருமையாக இருக்கு. ட்ரை பண்ணி பார்க்கிறேன்
பருப்பு உருண்டைக் குழம்பு சுப்பர் மேனகா
செய்து பார்த்து சொல்லுங்க.நன்றி பாயிசா!!
Wow nice .. i vl try this week
thxs harshini
முயற்சித்து பார்க்கின்றேன்..நன்றி
எனக்கு ரொம்ப பிடிச்ச டிஷ் இது.. எப்ப வீட்டுக்கு போனாலும் வீக்லி ஒன்ஸ் இந்த குழம்பு செய்ய சொல்லிடுவேன் :-)
ரொம்ப நன்றிகள் செய்முறை விளக்கத்திற்கு
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தூயா!!
சென்ஷி எனக்கும் பிடித்த குழம்பு வகைகளில் இதுவும் ஒன்று.நன்றி!!
பார்க்கவே நல்லா இருக்கு. ட்ரை பண்ணப்போறேன்.
தெய்வசுகந்தி தங்கள் கருத்துக்கு நன்றி!!நல்லா வரும் செய்துப் பாருங்க.
முயற்சி செய்ததில் வெற்றி உங்களுக்கு நன்றி
I like this kuruma...
Post a Comment