Thursday 21 May 2009 | By: Menaga Sathia

திடீர் ரசம்



தே.பொருட்கள்:

புளி - 1 எலுமிச்சைபழளவு
தக்காளி - 1
உப்பு + எண்ணெய்= தேவைக்கு
துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லித்தழை - சிறிது


ரசப்பொடிக்கு:

தனியா - 2டீஸ்பூன்
துவரம்பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகு - 11/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2

தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பில்லை - சிறிது

செய்முறை:

*ரசப்பொடிக்கு குடுத்துள்ளவைகளை வறுக்காமல் பொடிக்கவும்.தக்காளியை பொடியாக நறுக்கவும்.


*புளியை 2 கப் நீர்விட்டு கரைத்துக் கொள்ளவும்.அதில் உப்பு+மஞ்சள்தூள் சேர்க்கவும்.


*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து தக்காளியை போட்டு நன்கு மசிக்க வதக்கவும்.


*பின் புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.


*அதில் 1 டேபிள்ஸ்பூன் துவரம்பருப்பை அப்படியே போடவும்.


*நன்கு கொதித்ததும் ரசப் பொடியைப் போட்டு கொதிக்கவிட்டு 10நிமிடம் கழித்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


*இந்த ரசம் மிக அருமையாக வித்தியாசமான சுவையில் இருக்கும்.

7 பேர் ருசி பார்த்தவர்கள்:

ISR Selvakumar said...

mmmm...Cookery is not my favourite.
But I too have some kitchen links.
Long back I directed a show called 'Samayal Galatta' for Vijay TV.
Have a look. http://www.youtube.com/watch?v=GCfVMytxwOA
Watch and do a show like this.

Tail piece : Your blog's lay out is wonderful.

Menaga Sathia said...

வீடியோ முழுமையாக இல்லையே,குறிப்பு பார்க்க நல்லாயிருக்கு முழுபகுதியும் இருந்தால் ரொம்ப நல்லாயிருக்கும் செல்வகுமார் சார்.

//Watch and do a show like this.// முயற்சி செய்கிறேன்.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி செலவகுமார் சார்.

//
Tail piece : Your blog's lay out is wonderful.// Thxs a lot!!

சூர்யா ௧ண்ணன் said...

மனைவி ஊரில் இல்லாத சமயத்தில் இந்த பதிவு மிகவும் உபயோகமாயிருந்தது. எனது மகள் அனு ஸ்ரீ யின் பாராட்டும் கிடைத்தது. நன்றி.

உங்கள் பிளாக்கின் மொழியை மாற்றுங்கள்

Menaga Sathia said...

உங்கள் மகள் அனுஸ்ரீ யின் பாராட்டு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சூர்யா கண்ணன்!!

என்னால் பிளாக்கின் மொழியை மாற்றமுடியல,நான் கூகிள் ஐ.டியை கிரியேட் செய்யும் போது பிரெஞ்சுல செய்ததால் ப்ளாக்கில் மொழிமாற்றம் செய்ய முடியல.உங்களுக்கு தெரிந்தால் எப்படினு சொல்லுங்கள் சூர்யா கண்ணன்.

ஜீவா said...

சகோதரி மேனகாசத்தியா, தங்களின் வலைபதிவை என் நண்பன் மூலம் கிடைக்கப்பெற்றேன், தங்களுடைய சேவைக்கு என்னுடைய சிரம்தாழ்ந்த வணக்கங்கள், எங்களை போன்று வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு உங்களுடைய சமையல் குறிப்புகள் மிகவும் உபயோகமாக உள்ளது. வாழ்க வளமுடன், வளர்க நலமுடன்,
சப்பாத்தி மிருதுவாக செய்வதற்கு தங்களுடைய ஆலோசனையை தயவு செய்து கூறவும்.
அன்புடன் ஜீவா

Menaga Sathia said...

சகோதரர்க்கு வணக்கும்.என் வலைப்பூவை பார்வையிட்ட உங்களுக்கும்,உங்கள் நண்பருக்கும் மிக்க நன்றி..

சப்பாத்தி மிருதுவாக வர பிசையும் விதத்தில் இருக்கு..தயிர் அல்லது பால் சேர்த்து பிசைந்து 1 மணிநேரம் கழித்து சுடவும்.
அல்லது வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து பிசைந்தாலும் மிருதுவாக இருக்கும்.அல்லது அவகோடா பழம்+கரம்மசாலா+மஞ்சள்தூல்+பொடியாக ரிந்த கொத்தமல்லி இவைகளை மாவுடன் சேர்த்து பிசைந்து சுட்டாலும் மிருதுவாக இருக்கும்.அவகோடாவில் சுடும்போது எண்ணெய் ஊற்றி சுடதேவையில்லை.ஏதாவது ஒரு வழிமுறையில் செய்து பார்த்து சொல்லுங்கள்...

ஜீவா said...

தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி.
அன்புடன் ஜீவா

01 09 10