பாஸ்மதி அரிசி - 3 கப்
வெங்காயம் - 1 சிறியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
புதினா - சிறிது
பச்சை மிளகாய் - 3
பட்டர் அ நெய் - 5 டேபிள்ஸ்பூன்
தயிர் - 125கிராம்
தாளிக்க:
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
பிரியாணி இலை -3
பட்டை - 1 சிறு துண்டு
செய்முறை:
*வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்,பச்சை மிளகாயை கீறவும்.
*அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
*குக்கரில் பட்டர் போட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+பச்சை மிளகாய்+புதினா+தயிர் சேர்த்து வதக்கவும்.
*1 கப் அரிசிக்கு = 11/2 கப் தண்ணீர் விகிதம் 3 கப் அரிசிக்கு 41/2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு+அரிசி போட்டு மூடவும்.
*ஆவி வந்ததும் வெயிட் போட்டு 10 நிமிடம் அல்லது 3 விசில் வந்து இறக்கவும்.
*ப்ரெஷர் அடங்கியதும் குக்கரை திறந்து சாதத்தை உடையாமல் கிளறவும்.
*சிக்கன் குருமா குறிப்பினை பார்க்க இங்கே சொடுக்கவும்.
பி.கு:
விருப்பப்பட்டால் பாதி தண்ணீர்+பாதி தேங்காய்ப்பால் சேர்க்கலாம்.நெய் சாதத்துடன் மட்டன்,சிக்கன் குருமாவுடன் பரிமாறவும்.
12 பேர் ருசி பார்த்தவர்கள்:
ரொம்ப நாளா நெய்ய வச்சுக்கிட்டு என்னா பண்ணுறதுன்னு யொசிச்சுட்டுருந்தேன்
நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன்
இன்னைக்கு நைட் நெய் சோறுதான்
செய்து பாருங்க வசந்த்,நன்றாக வரும்.சைவ,அசைவ குருமாவுடன் சூப்பராயிருக்கும்.
பாக்க நல்லா இருக்கு.. வூட்டுகாரிகிட்ட செய்ய சொல்லனும்...
பார்க்கவே ரொம்ப அருமையா இருக்கு .. சமைப்பதற்க்கும் எளிதான முறையாக உள்ளது.. வாழ்த்துக்கள்..
இன்ன மேனகா..இப்படி சமைச்சு காட்டி ஆசையை கிளப்பூறிங்க..டயட்டிங் முடியட்டும் அப்புறம் உங்கள் நெய் சோறுடன் செட்டிநாடு சிக்கன் குழம்பினை ஒரு கட்டு கட்டவேண்டும்...
செய்து பார்த்து சாப்பிட்டு சொல்லுங்க ராஜ்குமார்,தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!!
இந்த சாதம் செய்வதற்க்கு மிக ஈஸி,தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி திருமதி.கண்ணா!!
ஆஹா கீதா,டயட்லாம் ஒரு ஒரமா மூட்டைகட்டிவெச்சுட்டு செய்து சாப்பிடுங்கப்பா.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கீதா!!
if u cook basmati rice in pres cooker no need 10 mints. only one whistle enough
நான் குடுத்த 10 நிமிஷம் அளவு சரியாக இருந்தது.1 விசில் என்றால் அரிசி சரியாக வெந்து இருக்காது.நான் எப்படி செய்தேனோ அப்படிதான் என் குறிப்பில் குடுத்தேன்.நன்றி அனானி தங்கள் கருத்துக்கு!!
நல்லா இருந்தது மேனு..உங்க மருமகனுக்கு நெய் அவ்ளோ பிடிக்காது..இப்படிதான் இனி நெய் சேர்க்கனும் போல..ரொம்ப தேங்ஸ்..அவரும் நல்லா இருக்கு, இதுபோலவே இனி ரைஸ் பண்ணுனு சொல்றார்...
நல்லாயிருந்ததா மாமி,சந்தோஷம்.மருமகனுக்கு இந்த மாதிரியே செய்துகுடுங்க.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மாமி.
Post a Comment