Monday 22 June 2009 | By: Menaga Sathia

செட்டிநாட்டு சிக்கன் குழம்பு

தே.பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
கெட்டி தேங்காய்ப் பால் - 1 கப்
கறிவேப்பில்லை - சிறிது

எண்ணெயில் வதக்கி அரைக்க:
சின்ன வெங்காயம் - 20
வறுத்து பொடிக்க:

தனியா - 2 1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 10
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிரிது
பட்டை - 1 சிறு துண்டு
கிராம்பு - 5

செய்முறை:
*வெங்காயம்+தக்காளியை நீளவாக்கில் அரியவும்.சின்ன வெங்காயத்தை வதக்கி அரைக்கவும்.

*வறுக்க குடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விடாமல் வறுத்து பொடிக்கவும்.

*குக்கரில் சுத்தம் செய்த சிக்கனை 1 கப் தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்+கரிவேப்பில்லை+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் சின்ன வெங்காய விழுது+வறுத்தரைத்த பொடி +உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் வேக வைத்த தண்ணீரோடு சிக்கனை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

*கொதித்ததும் தேங்காய்ப் பாலை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

பி.கு:
இந்த சுவையான செட்டிநாட்டு சிக்கன் குறிப்பை டி.வியில் பார்த்து செய்தேன்.நன்றாக இருந்தது.



24 பேர் ருசி பார்த்தவர்கள்:

Jaleela Kamal said...

மேனகா வெளுத்து கட்டிட்டிங்க போங்க, ஆமாம் அங்கு உங்களுக்கு கச கசா கிடைக்குதா?

தேவன் மாயம் said...

கடைசியிலே நம்ம செட்டிநாட்டு குழம்புக்கே வந்துவிட்டீர்கள்!!!

தேவன் மாயம் said...

படித்தவுடனேயே பசிவருது..............உண்மையிலேயே!!!!

malar said...

டயெட் சமையல் அதாவது எண்ணை காரம் கம்மியா சேர்த்து ஸுவையாஹ
சமைக்க எழுதுங்கள்

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஏங்க .. இந்த சென்னா(ரெட்டி இல்லீங்க) வ வச்சி தயாரிக்கிற உணவு வகைகளை பத்தி கொஞ்சம் எழுதுங்க..

Menaga Sathia said...

எனக்கு இங்கு கசகசா கிடைக்கும் அக்கா,தங்கள் கருத்துக்கு நன்றி!!

Menaga Sathia said...

எனக்கு செட்டிநாட்டு உணவு ரொம்ப பிடிக்கும்,தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தேவா!!

Menaga Sathia said...

டயட் சமையல் கண்டிப்பாக எழுதுகிறேன் மலர் 2 மாதம் கழித்து ஏன்னா 15 நாளில் இந்தியா போகிறோம் திரும்ப வந்து டயட் சமையல் தான்.அப்போ எழுதுகிறேன்.நன்றி மலர் தவறாமல் தமிழிஷில் ஓட்டு போடுவதற்க்கு..

Menaga Sathia said...

எனக்கு தெரிந்த சென்னா சமையலை எழுதுகிறேன் ராஜ்குமார்.பாலோவர்ஸ்ல ராஜ்குமார் சின்னசாமி அந்த நபர் நீங்கதானா?

Tech Shankar said...

Thanks for sharing. I took printout this page and gave it to my wife. She is ready to do this for next week's Sunday Special.

Thanks
TN

Menaga Sathia said...

செய்து பார்த்து சொல்லுங்கள்!!நன்றி தமிழ்நெஞ்சம் தங்கள் கருத்துக்கு.

குறை ஒன்றும் இல்லை !!! said...

ரொம்ப நன்றிக்கா...அப்புறம் அந்த பாஸ்தா பத்தின விளக்கம் நன்றி..

UmapriyaSudhakar said...

ஹலோ மேடம், இன்று உங்களுடைய சிக்கன் குழம்பு செய்து பார்த்தேன். மிக நன்றாக இருந்தது. நன்றி.

SUMAZLA/சுமஜ்லா said...

எல்லாருக்கும் நாக்கு ஊற, அதிகமா ஓட்டு கிடைக்கற ‘அரசி’யல்வாதி ஆகிட்டீங்க. உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். ஏற்றுக் கொள்வீர்களா?

Menaga Sathia said...

ஹாய் உமாப்ரியா செய்துப் பார்த்து பின்னூட்டம் குடுத்தற்க்கும்,வருகைக்கும் மிக்க நன்றி!!.என்னை பெயர் சொல்லியே கூப்பிடுங்க.உங்க குட்டிப் பையன் அழகா இருக்கான்.

Menaga Sathia said...

உங்கள் பின்னுட்டம் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு சுமஜ்லா.உங்கள் விருதை மகிழ்ச்சியுடனும்,அன்புடனும் ஏற்றுக் கொள்கிறேன்.
எனக்கு விருது கிடைக்கும்னு நான் நினைக்கவேயில்லை,ஆறுமாதத்தில் 44 பாலோவர்ஸ் பெற்று இந்த ப்ளாக்கை நடத்துக்கிறேனென்றால் அதற்க்கு வாசகர்கள் தான் காரணம்.மிக்க நன்றி சுமஜ்லா!!

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

இந்தக் குழம்பில் மஞ்சள் சேர்க்க மாட்டார்களா? 1/2 கிலோ சிக்கனுக்கு 10 காய்ந்த மிளகாயும், அதனோடு மிளகும் அதிகமாக தெரியவில்லையா? பகிர்வுக்கு நன்றி.

Menaga Sathia said...

மஞ்சள் சேர்க்கவில்லை.இதனை நான் டி.வியில் பார்த்து செய்த குறிப்பு.காய்ந்த மிளகாய்+மிளகு காரம் சரியாக இருண்டஹ்து.அதற்க்கு குறைவாக போட்டால் குழம்பு நன்றாகயிருக்காது.தங்களுக்கு அதிகமென்றால் குறைத்துப் போடவும்.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!!

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

குழம்பு செய்துக்கொண்டேத்தான் உங்களுக்கு பின்னூட்டம் எழுதினேன். அசைவ ஐட்டம் என்பதால் வழக்கம் போல கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்துக் கொண்டேன். நீங்கள் சொன்னபடியே காரம் கம்மியாகப் போட்டேன். குழம்பு சூப்பர்! பிள்ளைகளும் சுவைத்து சாப்பிட்டார்கள். என் மனைவி என்னை மெச்சோ மெச்சென்று மெச்சி தள்ளிவிட்டாள்! அதன் பெருமை உங்களுக்கே! நன்றி.

Menaga Sathia said...

குழம்பு பிள்ளைகளுக்கும் தங்கள் மனைவிக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.செய்துப் பார்த்து பின்னூட்டம் அளித்ததில் மிக்க நன்றி சகோதரரே!!அந்த பெருமையெல்லாம் செய்து காட்டியவருக்கு தான் சேரும்.

Unknown said...

Hi, Menaga I'm new visiter to your blog yesterday saw only your blog. ungaloda chicken gravy ah pathaudane seiyanumnu thonuchu athanala yesterday night na try panene really na onnu solanum na samachathu enga vettla pathala avlo super ah irunthathu really thanks a lot to give this item innum neraya ungalodatha select panieuken na kandipa try panipakanum again thanks your so mach take care bye

Menaga Sathia said...

@கோமதி மதி

தங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி,செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி!!

Unknown said...

உங்கள் குறிப்பு பார்த்து செய்தேன்.அருமை

Ganesan Ramasamy said...

சமையல் பண்ணிட்ருக்கேன்
எப்படி வர போகுதுன்னு தெரியல

01 09 10