Friday, 26 June 2009 | By: Menaga Sathia

ஒமப்பொடி /Oma Podi

தே.பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்
அரிசிமாவு - 1/4 கப்
ஒமம் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

*ஒமத்தை சுத்தம் செய்து அரைத்து தண்ணீரில் 1/4 கப் அளவிற்க்கு வடிக்கட்டவும்.

*பாத்திரத்தில் கடலைமாவு+அரிசிமாவு+உப்பு+ஒமத்தண்ணீர்+நெய் அனைத்தும் கலந்து கெட்டியாக பிசையவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை ஓம அச்சில் போட்டு நேரடியாக எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்கவும்.

10 பேர் ருசி பார்த்தவர்கள்:

Jaleela Kamal said...

மேனகா எனக்கு ரொம்ப பிடித்த ஓமப்பொடி முருக்கு.

சின்ன வயதில் அடிக்கடி வெளியில் போகும் போது ரொம்ப தூரம் நடந்து போகும் போது இத தான் வாங்கி சாப்பிட்டு கொண்டே போவேன்,
பார்க்கவே ரொம்ப அருமையா இருக்கு.

முன்பு செய்தது இப்ப செய்வதில்லை இங்கே எல்லாமே கிடைக்குது ஆகையால் செய்வதில்லை

Unknown said...

பார்க்க அழகா இருக்கு,நான் ஏற்கனவே சொல்லிருக்கேன்..உங்க குறிப்புல படங்கள் அழகு..படத்த பார்த்ததுமே செய்முறைய படிச்சு பார்த்து செய்ய வைத்துவிடும்..இப்போ இந்தியா போனபோது தான் முறுக்கு அச்சு வாங்கி வந்தேன்..இடியாப்பம் பண்ண்லாம்னு ஆசைல,,இப்போ உங்க ஓமப்படியும் செய்து வைத்துவிடலாம்..நல்ல ஸ்நாக்ஸ் என் பையனுக்கு..இந்த வீக்கெண்ட் செய்து பார்த்துட்டு சொல்றேன் மேனு மாமி..தேங்ஸ் ஈஸியான தேவையான குறிப்பா கொடுக்கிறீங்க..

தெய்வசுகந்தி said...

என் குழந்தைகளுக்கு பிடித்தது இது.

Menaga Sathia said...

எனக்கும் இது ரொம்ப பிடிக்கும் அக்கா,தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!!

Menaga Sathia said...

ஆமாம் மாமி,பிள்ளைகளுக்கு பிடித்த ஸ்நாக்ஸ்.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிப்பா!!

Menaga Sathia said...

எனக்கும் இது பேவரிட்,தங்கள் கருத்துக்கு மிக்க் நன்றி சுகந்தி!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

பார்க்க அழகா இருக்கு..

Menaga Sathia said...

நன்றி ராஜ்குமார்!!

GEETHA ACHAL said...

//ஒமத்தை சுத்தம் செய்து அரைத்து 1/4 கப் அளவிற்க்கு வடிக்கட்டவும்.//இதனை மாற்றிவிடுங்க...

தண்ணீரில் கரைத்து சேர்க்க வேண்டும் என்பது தானே இது...

Menaga Sathia said...

தவறை சுட்டிக் காட்டியதற்க்கு மிக்க நன்றி கீதா!!

01 09 10