புளிக்காத தயிர் - 125 கிராம்(அ) 1 கப்
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 1 சிறியது
பச்சை நெல்லிக்காய் - 2
வறுத்த வெந்தயப் பொடி - 1/2 டீஸ்பூன்
வறுத்த உளுந்து பொடி - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய்=தேவைக்கு
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
தாளிக்க:
கடுகு - 1டீஸ்பூன்
கறிவேப்பில்லை -சிறிது
மோர் மிளகாய் - 4
சுண்டைக்காய் வற்றல் - 3/4 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
கடுகு - 1டீஸ்பூன்
கறிவேப்பில்லை -சிறிது
மோர் மிளகாய் - 4
சுண்டைக்காய் வற்றல் - 3/4 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
*பாசிப்பருப்பை 20 நிமிடம் ஊறவைக்கவும்.நெல்லிக்காயை கொட்டை எடுத்து நறுக்கவும்.
*தேங்காய்த்துறுவல்+பச்சை மிளகாய்+சீரகம்+பாசிப்பருப்பு+தக்காளி+நறுக்கிய நெல்லிக்காய் உவை அனைத்தும் விழுதாக அரைக்கவும்.
*கடைந்த தயிரில் உப்பு+மஞ்சள்தூள்+அரைத்த விழுது+வெந்தயப் பொடி+உளுந்துப் பொடி நன்றாக கலந்து அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.
*நுரை வரும் போது இறக்கி,தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்துக் கொட்டவும்.
பி.கு:
நெல்லிக்காய் சேர்ப்பதால் ரொம்ப நல்லாயிருக்கும்.மோர்மிளகாய்+சுண்டைக்காய் வற்றல் சேர்த்து தாளிப்பதால் சுவையும் மணமும் தூக்கலாக இருக்கும்.
10 பேர் ருசி பார்த்தவர்கள்:
வாவ் வித விதமா அதுவும் நெல்லிக்காய் பார்த்தாலே நாவில் நீர் ஊறுகிறது.
பார்க்கவே அருமையா இருக்கு மோர் குழம்பு
looks good. I'm going to try this one
யக்கோவ்...
கலக்குரீங்க .. நான் உங்களோட பதிவ என் மனைவி கிட்ட காட்டி இப்போ அவ ங்க எல்லா பதிவயும் ப்ரிண்ட் ப்ண்ண சொல்றா.. நான் என்ன பண்ன?
நெல்லிக்காயில் செய்ததில் நன்றாக இருந்தது,தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலாக்கா!!
செய்து பாருங்கள்,தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி தெய்வசுகந்தி!!
//யக்கோவ்...
கலக்குரீங்க .. நான் உங்களோட பதிவ என் மனைவி கிட்ட காட்டி இப்போ அவ ங்க எல்லா பதிவயும் ப்ரிண்ட் ப்ண்ண சொல்றா.. நான் என்ன பண்ன?// இந்த வேலைக்கூட மனைவிக்கு செய்யலன்னா எப்படி ப்ரதர்.ப்ரிண்ட் எடுத்துக் குடுங்க.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரரே!!
அருமையாக உள்ளது.. நெல்லிக்காய் சேர்ப்பது இதுவரை கேள்விப்படாத புதுமையான விஷயம்..
தொடர்ந்து குறிப்புகள் தாருங்கள்..உபயோகமாக உள்ளது...
நான் கண்ணா அல்ல
மிஸஸ்.கண்ணா. .
நெல்லிக்காய் சேர்த்து செய்துப் பாருங்கள்.சுவை ரொம்ப நல்லாயிருக்கும்.என்னால் முடிந்தவரை குறிப்புகளை குடுக்கிறேன் திருமதி கண்ணா.நன்றி தங்கள் கருத்துக்கு!!
very innovative.super.
merci. toujour tres differement faire de recipe,nous aimerons, felicitation.
தூள்.அட்டகாசம்.
நன்றி ஆசியாக்கா!!
பாராட்டுக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி முஹமது!!
நன்றி ஸாதிகாக்கா!!
Post a Comment