Thursday, 16 July 2009 | By: Menaga Sathia

வெந்தய சாம்பார்

தே.பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/2 கப்
வெந்தயம் - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
புளி - 1கோலிகுண்டளவு
கொத்தமல்லித்தழை - சிறிது
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 15
தக்காளி - 2
பூண்டுப்பல் - 5
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு -1 டீஸ்பூன்
வெ.உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
பெருங்காயம் - வாசனைக்கு
காய்ந்த மிளகாய் - 2

செய்முறை:

*பருப்பை 20 நிமிடம் ஊறவைத்து,அதனுடன் வெந்தயம்+மஞ்சள்தூள்+பூண்டு+தக்காளி சேர்த்து வேகவைக்கவும்.

*வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.பச்சை மிளகாயை கீறவும்.புளியை 1/4 கப் அளவில் கரைத்து வைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் புளிகரைசல்+உப்பு+வெந்த பருப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

12 பேர் ருசி பார்த்தவர்கள்:

GEETHA ACHAL said...

வெந்தயத்தில் சாம்பாரா..இதுவரை நான் வெந்தயம் மட்டும் வைத்து சாம்பார் செய்தது இல்லை. உங்களுடைய ஒவ்வொரு குறிப்பும் மிகவும் வித்தியசமாக இருக்கின்றது.

மேலே URL லிங்கில் இருக்கும் குட்டிமா போட்டோ சூப்பர்...

Menaga Sathia said...

ஆமாம் கீதா வெந்தயத்தில் சாம்பார் நன்ராக இருக்கும்.நாம் வெந்தயகீரையில் செய்வோம் இல்லையா அதுபோல் தான்.
//
மேலே URL லிங்கில் இருக்கும் குட்டிமா போட்டோ சூப்பர்...//தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கீதா.

குறை ஒன்றும் இல்லை !!! said...

சரி..இதையும் என்ன வெச்சிதான் டெஸ்ட் பண்ண போறாங்க என் வூட்டுகாரி...நல்லாதான் இருக்கும் போல இருக்கு ..

Menaga Sathia said...

டெஸ்ட் செய்து சாப்பிட்டு சொல்லுங்க,நிச்சயம் நல்லாயிருக்கும் ராஜ்!இருந்தாலும் உங்களை நினைத்தால் கொஞ்சம் பாவமாதான் இருக்கு..ஆனா என்ன செய்றது வேற வழி இல்லை,நாங்க சமைத்ததை நீங்க சாப்பிட்டு தானே ஆகனும்.

Anonymous said...

வித்தியாசமா இருக்குது, அவசியம் அம்மாகிட்ட சொல்லி முயற்சி செய்றேன் அக்கா

Unknown said...

http://eniniyaillam.blogspot.com/2009/07/32.html
மேனகா உங்களுக்கு 32 கேள்விகள் தொடர்ப்பதிவுக்கு அழைச்சிருக்கேன். நேரமிருக்கும்போது பதிலளியுங்கள்.

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக நன்றி நதியா!!.

Menaga Sathia said...

தங்களின் அழைப்புக்கு மிக்க நன்றி பாயிஷா,பதிவு போட்டுள்ளேன்..

SUMAZLA/சுமஜ்லா said...

உங்க பதிவில் கமெண்ட்ஸ் போஸ்ட் பண்ணும் லின்க் வேலை செய்யவில்லை. 0ருசி பார்த்தவர்கள் என்று இருப்பதை க்ளிக் செய்தால் வேலை செய்யவில்லை.

சைடு பார் கமெண்ட்டை க்ளிக் பண்ணி, அதின் கீழ் இருந்த லின்க்கை உப்யோகித்து பதிலிட்டேன். பாருங்கப்பா!

Menaga Sathia said...

0 ருசி பார்த்தவர்கள் அதை க்ளிக் செய்து எப்படி லிங்க் குடுப்பதுன்னு எனக்கு தெரியாதுப்பா.தெரிந்தால் சொல்லுங்க சுகைனா!!

Asiya Omar said...

அருமை.அமுத சுரபி மாதிரி ரெசிப்பிக்களுக்கு குறைவில்லை மேனு.

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

01 09 10