தே.பொருட்கள்:
சன்னா(கொண்டைக்கடலை) - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
பூண்டுப்பல் - 5
சோம்பு - 1 டீஸ்பூன்
வாழைப்பூ - 1 சிறியது
தயிர் - 1/2 கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் -பொரிக்க
செய்முறை :
*சன்னாவை குறைந்தது 3 மணிநேரம் ஊறவைக்கவும்.
*வெங்காயம்+பச்சை மிளகாயை பொடியாக அரியவும்.
*வாழைப்பூவை சுத்தம் செய்து தயிரில்(அதில் போட்டால் தான் பூ கறுக்காது)அரிந்து போட்டு அலசி வைக்கவும்.
*கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம்+சோம்பு+பச்சை மிளகாய்+வாழைப்பூ அனைத்தையும் லேசாக வதக்கி ஆறவைக்கவும்.
*ஆறியதும் இதனுடன் ஊறவைத்த சன்னாவை உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
*அரைத்த மாவை வடைகளாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும்.
பி.கு:
சன்னாவில் செய்வதால் இந்த வடை மொறுமொறுப்பாக இருக்கும்.
9 பேர் ருசி பார்த்தவர்கள்:
நன்றிக்கா..
வாழைப்பூ வடை சூப்பரோ சூப்பர்...
படிச்சிட்டு வந்து என் தங்கமணி கிட்ட காட்டுருதுக்குள்ள இன்னொரு பதிவு மற்றும் எனக்கு ஒரு பின்னூட்டம்...இனி என் தங்கமணி உங்களோட பேசும் ..நன்றி :-)
உங்க மனைவி செய்தாங்களா இந்த குறிப்பை,உங்களை வைத்து இன்னும் டெஸ்ட் செய்ய ஆரம்ப்பிக்கலையா?நன்றி!!
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கீதா!!
தங்கள் பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி சிங்ககுட்டி!!
உங்க பெயரை சொன்னால் கூப்பிட வசதியாக இருக்கும்,எனக்கு மட்டும் சொல்லுங்க..
மேனகா, உங்க லாலிபாப் சிக்கன் இப்போ என் ப்ளாகில், http://sumazla.blogspot.com/2009/07/blog-post_27.html வந்து பார்க்கவும்.
நன்றி வசந்ந்,என்னையும் உங்க தோழியா ஏத்துக்குட்டு விருது குடுத்ததற்க்கு!!
நன்றி சுகைனா,உங்க ப்ளாக் படித்து பின்னுட்டமும் குடுத்தாச்சுப்பா!!
Post a Comment