தே.பொருட்கள்:
காளான் - 500கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய்= தேவைக்கு
சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
*காளானை வெதுப்வெதுப்பான நீரில் 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைசாறு விட்டு 10 நிமிடம் வைத்து,கழுவி கட் செய்யவும்.
*வெங்காயம்+தக்காளியை நறுக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு சீரகத்தைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூளை போட்டு லேசாக வதக்கி காளான்+உப்பு சேர்த்து மூடி வேகவிடவும்.
*தண்ணீர் ஊற்றவேண்டாம்,காளான் நீர் விடும்.
*நீர் சுண்டும் வரை கிளறி இறக்கவும்.
பி.கு:
ரொட்டி,சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.விருப்பப்பட்டால் இதனுடன் குடமிளகாயும் சேர்க்கலாம் வாசனையாக இருக்கும்.
20 பேர் ருசி பார்த்தவர்கள்:
காளான் மசாலாவினை பிரெட்டுடன் பார்க்கும் பொழுது ஆசையாக இருக்கும்...
சூப்பர் மேனகா...
செஞ்சிடுவோம்....
/*காளானை வெதுப்வெதுப்பான நீரில் 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைசாறு விட்டு 10 நிமிடம் வைத்து,கழுவி கட் செய்யவும்/
காளானை எப்பவும் இப்படிதான் கழுவுவீங்களா?
காளான் மசாலாவினை பிரெட் சூப்பர்.
ரொம்ப நன்றி!
ஞாயிற்றுகிழமை செஞ்சிரலாம்!
தங்கள் கருத்துக்கு நன்றி கீதா!!
செய்து பாருங்க ராஜ்,நன்றி!!
///*காளானை வெதுப்வெதுப்பான நீரில் 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைசாறு விட்டு 10 நிமிடம் வைத்து,கழுவி கட் செய்யவும்/
காளானை எப்பவும் இப்படிதான் கழுவுவீங்களா?
ஆமாம் ஹர்ஷினி அம்மா.செல்விமா சொன்னாங்க,அதுல இருந்து இப்படிதான் செய்றேன்
தங்கள் கருத்துக்கு நன்றிப்பா!!
உங்களுக்கு மெசெஜ் போட்டிருக்கேன் பாருங்க.
செய்து பாருங்க,தங்கள் கருத்துக்கு நன்றி வால்பையன்!!
ம்ம்ம் மாமி நல்லா இருக்கு, எப்பவும் இப்படி தான் செய்வது ஆனால் தக்காளி சேர்க்க மாட்டேன், உங்க சம்பந்திக்கு பிடிக்காது..இந்த முறை தக்காளி சேர்த்தேன் ஆனால் கொஞ்சமா நல்லா இருந்தது நன்றி மாமி!!!
சுவைத்தேன்... நன்றிகள்....
சாப்பிட ஆசைதான்!!
நமக்கு இந்த ஐய்டம் என்றால் அலர்ஜி ஆனால் நீங்கள் செய்தது நல்லாயிருக்கு
செய்து பார்த்து பின்னுட்டம் கொடுத்ததற்க்கு நன்றி மாமி!!
சுவைத்து பார்த்து பின்னுட்டம் அளித்ததற்க்கு நன்றி சந்ரு!!
வாங்க தேவா,எப்போ வேனும்னு சொல்லுங்க செய்து தரேன்..
ஓஓ காளான் பிடிக்காதாப்பா உங்களுக்கு,தங்கள் கருத்துக்கு நன்றி பாயிஷா!!
நல்லா இருக்கு.
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி several tips!!
காளான் எனக்கு பிடிக்காது, என் பெரிய பையனுக்கு மட்டும் ரொம்ப பிடிக்கும், இரண்டு முன்று முறை வாங்கி என் ஸ்டைலில் செய்து கொடுத்தேன், அதுவும் பிரெட்டுடன் என்றால் அவனுக்கு ரொம்பவே பிடிக்கும், டெகரேஷன் சூப்பர் மேனகா.
எனக்கும் ஆரம்பத்தில் காளான் பிடிக்காது,ஆனா இப்போ ரொம்ப பிடிக்குது.நன்றி ஜலிலாக்கா!!
Post a Comment