Thursday 8 October 2009 | By: Menaga Sathia

பொங்கல் / Sweet Pongal

தே.பொருட்கள்:

பாஸ்மதி - 1 கப்
வெல்லம் -1/2 கப்
உப்பு - 1 சிட்டிகை
பால் - 1/2 கப்
முந்திரி,திராட்சை = தேவைக்கு
நெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 2

செய்முறை :

*அரிசியை கழுவி 1 1/2 கப் நீர்+பால் சேர்த்து வேக வைக்கவும்.


*வெல்லத்தை சிறிது நீர்விட்டு காய்ச்சி மண்ணில்லாமல் வடிகட்டவும்.

*முக்கால் பாகம் அரிசி வெந்தவுடன் காய்ச்சிய வெல்லம்+உப்பு சேர்த்து மேலும் குழைய வேகவைக்கவும்.


*வெந்ததும் இறக்கி ஏலக்காயை தட்டிப் போடவும்.

*நெய்யில் முந்திரி,திராட்சை வறுத்து பொங்கலில் போடவும்.மீதமுள்ள நெய்யையும் அதன்மேல் ஊற்றி இறக்கவும்.

21 பேர் ருசி பார்த்தவர்கள்:

UmapriyaSudhakar said...

ம்ம் பொங்கல் சூப்பரா இருக்கு மேனகா. நான் குக்கரில் பொங்கல் செய்வேன்.

Anonymous said...

wow..yummy menaka..

Priya Suresh said...

Pongal supera irruku Menaga..

பித்தனின் வாக்கு said...

பொங்கல் அருமை. சுவையா சாப்பிட்ட மாதிரி இருக்கு.

அது என்ன இரண்டு ஸ்பூன் நெய், நல்லா ஒரு கரண்டி விடுங்க, ஆண்டாள் சொன்ன மாதிரி (மூட நெய் பெய்து முழங்கை வழி வார). ஆனா செய்முறையில் ஒரு மாற்றம் சொல்லறன் அது மாதிரி செய்து பாருங்கள். ஒரு டம்ளர் அரிசிக்கு கால் டம்ளர் பையத்தம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு போட்டு கொஞ்சம் குழைய சாதம் வடித்து, சாதம் சூட்டில் இருக்கும் போது அதில் வெல்லப் பாகு விட்டு கலக்க வேண்டும். அப்போது ஒரு கரண்டி நெய்யில் முந்திரி,திராட்சை, கொஞ்சம் பச்சைக் கற்பூரம் சேர்த்து வறுத்து நெய்யுடன் பொங்கலில் இட்டு களறிப் பின் ஏலம் பொடி ,நெய் இட்டு, சிறிது சூடு செய்து இறக்கினால் சுவையான, மணமான பொங்கல் ரெடி.

Thenammai Lakshmanan said...

வாழைப் பூ வெள்ளரிக்காய் பச்சடி சூப்பர் மேனகா
பொங்கலும் கூட

GEETHA ACHAL said...

சூப்பர்ப் பொங்கல்...

எங்கள் வீட்டில் பாசிப்பருப்பு சேர்த்து செய்வோம்...அடுத்த முறை செய்யும் பொழுது பருப்பு சேர்க்காமல் செய்து பார்க்கின்றேன்..

Menaga Sathia said...

குக்கரில் நான் வெண்பொங்கல் தான் செய்திருக்கேன் உமா.நன்றி தங்கள் கருத்துக்கு!!

Menaga Sathia said...

நன்றி அம்மு!!

நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

நன்றி பித்தன்!!நீங்கள் சொல்வதுபோல் செய்து பார்க்கிறேன்.பச்சை கற்பூரத்துக்கு நான் எங்க போவேன்?அதை பொங்கல் தவிர வேற எதற்க்கு உபயோகிக்கலாம்?இங்க கிடைக்குதான்னு பார்க்கிறேன்.

Menaga Sathia said...

நன்றி தேனம்மை!!

நன்றி கீதா!!பருப்பில்லாமல் செய்தால் சுவையில் மாற்றம் இருக்காது.வெண்பொங்கலுக்கு தான் பருப்பு சேர்த்து செய்வேன்.இனிப்புக்கு சேர்க்க மாட்டேன்.

நட்புடன் ஜமால் said...

இதையும் நான் கட்டி சட்னி வச்சி சாப்பிடுவேன் ...

sivanes said...

எளிமையான‌, இனிமையான‌ பொங்கல், ம்ம்ம் முய‌ற்சி செய்து விட‌ வேண்டிய‌துதான், ந‌ன்றி தோழி...! :‍)

சிங்கக்குட்டி said...

தலைப்பை பார்த்தவுடன் அதுக்குள்ளே எப்படி வரும்? ஜனவரிலதான வரும்னு நினைச்சேன், இப்படி ஒரு உணவு இருப்பதே மறந்து போச்சு,அதெல்லாம் ஊரோடபோச்சு.

மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்ததுக்கு நன்றி மேனகா.

S.A. நவாஸுதீன் said...

எளிய முறையில் அழகான செய்முறை விளக்கம்

Rekha raghavan said...

பொங்கலை பார்க்கும்போதே சாப்பிட தூண்டுதே. செய்து பார்த்து ஒரு பிடி பிடித்துவிட வேண்டியதுதான்.ஓட்டும் போட்டுட்டேங்க மேடம். மிக நல்ல பதிவு.

ரேகா ராகவன்

Menaga Sathia said...

சட்னி வைத்து சாப்பிடுவிங்களா?காரம்+இனிப்பு காம்பினேஷன் நல்லாதான் இருக்கும்.நான் இதுவரை அப்படி சாப்பிட்டதில்லை.நன்றி ஜமால்!!

Menaga Sathia said...

நன்றி சிவனேசு!!

நன்றி சிங்கக்குட்டி!!விசேஷகாலத்தில் சாமிக்கு படைக்கும்போது செய்வேன்.

Menaga Sathia said...

நன்றி நவாஸ்!!

நன்றி ரேகா அக்கா!!ஒட்டு போட்டதற்க்கும்,தங்கள் வருகைக்கும் நன்றி!!.என்னை பெயர் சொல்லியே கூப்பிடுங்கள்.

RAMYA said...

பொங்கல் படிக்கும்போதே சாப்பிடனும் போல் இருக்கே மேனகா.

நான் நீங்கள் சொன்னது போல செய்ய மாட்டேன். குக்கரில் தான் செய்வேன்.

செயல் முறையும் எளிதாக இருக்கு.
செய்து பார்க்கிறேன்.

R.Gopi said...

பொங்கல்...

என்னோட ஆல் டைம் ஃபேவரிட் டிஃபன்...

ஆஹா... இது சர்க்கரை பொங்கல்... இதுவும் எனக்கு பிடிக்கும்... அதுவும் முந்திரி, நெய் ஒழுக‌... ஆ........

பால் சேர்த்து பண்ணி பாருங்கள்... இன்னும் நன்றாக இருக்கும்....

வாழ்த்துக்கள் மேனகாசத்யா...

Menaga Sathia said...

பால் சேர்த்துதான் செய்துள்ளேன் கோபி,தங்கள் கருத்துக்கு நன்றி!!

01 09 10