Friday, 16 October 2009 | By: Menaga Sathia

கீரை சுண்டல் /Keerai Sundal

தே.பொருட்கள்:

ஏதாவது ஒரு கீரை - 1 கப்
பொடித்த ஒட்ஸ் - 1கப்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தேங்காய்த்துறுவல் - சிறிதளவு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - வாசனைக்கு

செய்முறை :

*கீரையை சுத்தம் செய்து லேசாக வதக்கி பச்சை மிளகாய்+உப்பு+சீரகம் சேர்த்து அரைக்கவும்.

* அதில் பொடித்த ஒட்ஸ் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைக்கவும்.

*தாளிக்க கொடுத்துள்ளவைகளைத் தாளித்து.தேங்காய்த் துறுவல் வேக வைத்த உருண்டையில் சேர்க்கவும்.

பி.கு:

நான் சேர்த்திருப்பது முருங்கை கீரை.சுவை நன்றாக இருந்தது.

12 பேர் ருசி பார்த்தவர்கள்:

சிங்கக்குட்டி said...

கலக்கல் மேனகா நல்ல சுவை.

GEETHA ACHAL said...

நானும் இதே போல தான் ஒட்ஸ் சுண்டல் செய்வேன். அடுத்த முறை ஸ்பினாச் வைத்து கீரை சுண்டாலாக செய்து பார்கிறேன்.

சத்தான சுண்டல்.

உங்களுக்கு முருங்கைகீரை கிடைக்குதா...எனக்கு முருங்கைகீரை என்றால் மிக விருப்பம்..ஆனா எனக்கு இங்கு அந்த கீரை கிடைக்காது.

Anonymous said...

வித்தியாசமான ரெசிப்பி. நன்றி

Priya Suresh said...

Wow Menaga, kalakuringa ponga..Yeppadi ippadi ellam..

S.A. நவாஸுதீன் said...

நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

R.Gopi said...

கீரை சுண்டல்

ரொம்ப வித்தியாசமான ரெசிபி இது...

நான் முன்னமே சொன்ன மாதிரி... நீங்க நிறைய வெரைட்டியான ரெசிபிஸ் தர்றீங்க...

வாழ்த்துக்கள் மேனகா...

Jaleela Kamal said...

மேனகா கீரை சுண்டல் அருமை.கலக்கல் தான் போங்க‌

பித்தனின் வாக்கு said...

வித்தியாசம நன்றாக உள்ளது. இது சும்மாவும் சாப்பிடலாம், சாதத்திற்கும் தொட்டுக்கலாம்னு நினைக்கின்றேன். மறக்காமல் செய்து பார்க்கின்றேன். ஓட்ஸ் பதிலா பயத்தம் பருப்பு சேர்க்கலாம் என நினைக்கின்றேன். தங்களின் பதிவைப் படித்து முதலில் ஓட்ஸ்டன் செய்து பார்க்கின்றேன். நன்றி.

Menaga Sathia said...

நன்றி சிங்கக்குட்டி!!

கீரை சேர்த்து செய்துபாருங்க கீதா.ரொம்ப நல்லாயிருந்தது.எனக்கு முருங்கைகீரை கிடைக்கும்.நன்றி கீதா!!

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி பிருந்தாவனம்!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி நவாஸ்!!

நன்றி கோபி!!

Menaga Sathia said...

நன்றி ஜலிலாக்கா!!

ஒட்ஸில் செய்து பாருங்கள்,ரொம்ப சாப்டாக இருக்கும்.நன்றி பித்தன்!!

01 09 10