தே.பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது
பச்சை மிளகாய் - 10
பூண்டுப்பல் - 10
இஞ்சி - 2 அங்குலத்துண்டு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கெட்டி தேங்காய்ப்பால் - 1கப்
புதினா - சிறிது
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
செய்முறை :
*சிக்கனை சுத்தம் செய்யவும்.இஞ்சி பூண்டு +பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும்.
*வெங்காயம்+தக்காளி நீளவாக்கில் அரியவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது +பச்சை மிளகாய் விழுது+தக்காளி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.
*வதங்கியதும் சிக்கன்+உப்பு+மஞ்சள்தூள்+தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிடவும்.
*சிக்கன் வெந்ததும் புதினா+எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
பி.கு:
* இதே போல் மட்டனிலும் செய்யலாம்.
* இந்த குழம்பிற்க்கு பூண்டை விட இஞ்சி அதிகமாக போடனும்.காரம் வேண்டுபவர்களுக்கு பச்சை மிளகாயை அதிகமாக போடவும்.
14 பேர் ருசி பார்த்தவர்கள்:
வாவ்..பார்க்கும்போதே மணக்குதே..
சூப்பராக இருக்கின்றது சிக்கன் இஞ்சி குழம்பு...செய்து பார்த்துவிட்டு கண்டிப்பாக சொல்கிறேன்...கலக்கல் சிக்கன்.
Wow tempting chicken kuzhambu Menaga, next time will try this kuzhambu for the sure...yumm!!
மாமி ரொம்ப நாள் அப்புறம் பதிவு எழுதுகிறேன், மன்னிக்கவும், ஆனால் அடிக்கடி வந்துபோனேன்..அசத்தல் போங்க உங்க சிக்கன் இஞ்சி குழம்பு...
மருமக சுகமா?(she is something special for us)
ஆகா படத்தைப் பார்த்தாலே அசைவப் பிரியர்களுக்கு நாவு ஊறும் போல உள்ளது. நான் இன்னிக்கும் ஜீட்டும்மா, லீவுட்டாச்சு. வரன். பை பை. நன்றி.
ரொம்ப எளிமையாதான் இருக்கும்போல. முயற்சி பண்ணுவோம். நன்றி சகோதரி
பிரிண்ட் அவுட் எடுத்தாச்சு...இந்த வார பேச்சிலர் சமையலில் இதுதான்..(ஞாயித்துக் கிழமை)
சுவையாகவே இருக்கும், தேங்காய்ப்பால் வேறு போடுறீங்க, அப்போ யம் யம் தான்!!:)
நன்றி கோபிநாத்!!
செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி கீதா!!
நன்றி ப்ரியா!!மிகவும் நன்றாக இருக்கும் இந்த குழம்பு..
நன்றி மாமி!!நீங்களும் மருமகனும் நலமா?மருமக நல்லாயிருக்காங்கப்பா.
ஹா ஹா நன்றி பித்தன்!!
செய்வதற்க்கு ஈஸிதான்.நன்றி சகோதரரே!!
ஓஓ அப்போ ஞாயிற்றுக்கிழமை செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி புலிகேசி!!
ஆமாம் நிச்சயம் சுவையாகயிருக்கும்.நன்றி ஷஃபி!!
Post a Comment