தே.பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1 பெரியது
நறுக்கிய தக்காளி - 1 பெரியது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெயில் வறுத்தரைக்க:
தனியா - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
செய்முறை :
*அரைக்க கொடுத்துள்ளவைகளை முதலில் பொடித்து பின் நீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.
*சிக்கனில் தயிர் + 1/2 டேபிள்ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+மீதமிருக்கும் இஞ்சிபூண்டு விழுது+தக்காளி+கரம் மசாலா அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*வதங்கியதும் அரைத்த மசாலா விழுதினை போட்டு நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
*பின் சிக்கனை போட்டு வதக்கி உப்பு+மஞ்சள்தூள் தேவையான நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
*குழம்பு கொதிக்கும் போது தோல்சீவி துண்டுகளாகிய உருளைக்கிழங்கைப்போடவும்.
*குழம்பு நன்கு கொதித்து சிக்கனும் உருளையும் நன்கு வெந்ததும் இறக்கவும்.
*கமகமக்கும் சிக்கன் குழம்பு ரெடி.
21 பேர் ருசி பார்த்தவர்கள்:
அரைக்க கொடுத்துள்ளவை என்னனு சொல்லலியே.. :(
எண்ணெயில் வறுத்தரைக்க என்று கொடுத்துள்ளென் பாருங்கள்.நன்றி தமிழ்பிரியன்!!
"அரைத்துவிட்ட சிக்கன் குழம்பு"' உடனே சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது.அவ்வளவு நல்ல செய்முறையில் கலக்கி விட்டீர்கள்!!!
அரைத்து விட்ட சிக்கன் குழம்பு ..ம்ம்..நாளைக்கே செய்து பார்த்து விடுகின்றேன்.
Sunday special pola irruke...superaa irruku kuzhambu.
$)))
சகோ!
//சிக்கனில் தயிர் + 1/2 டேபிள்ஸ்பூன் சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்//
1/2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு அரைவை தானே!
வழக்கம் போல அருமையான சமையல் குறிப்பு! வாழ்த்துக்கள்!
பிரம்மசாரிகளின் வருங்காலத்துக்கு முக்கியமான பதிவாக உங்கள் பதிவை அங்கீகரித்துடலாம் :)
அருமையான தயாரிப்பு . பார்த்தவுடன் சாப்பிட துண்டுகிறது .
let me ask my mom to prepare
தங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி பூங்குன்றன்!!
வழக்கம் போல் எஸ்கேப்பா?நன்றி பித்தன்!!
செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி ஸாதிகா அக்கா!!
ஆமாம் ப்ரியா சண்டே ஸ்பெஷல்தான்.நன்றி ப்ரியா!!
//1/2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு அரைவை தானே!// ஆமாம் சகோ.இப்போ திருத்திவிட்டேன்.
தவறை சுட்டிக்காட்டியதற்க்கும்,கருத்துக்கும் நன்றி சகோதரரே!!
//பிரம்மசாரிகளின் வருங்காலத்துக்கு முக்கியமான பதிவாக உங்கள் பதிவை அங்கீகரித்துடலாம் :)//மிக்க நன்றி சென்ஷி!!
நன்றி மலர்விழி!!
அருமை,பார்த்தவுடன் சாப்பிட துண்டுகிறது
நன்றி செல்வி!!
தங்கள் விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டேன்,நன்றி ஸாதிகா அக்கா!!
Thanks for your wishes in my blog Mrs. Menaga.
Chicken kuzhambu is really delicious and flavorful. Love the ground masala which gives a very good taste to the curry. Delicious :)
பார்க்கவே ரொம்ப நல்லா இருக்குப்பா வித்யாசமா ட்ரை பண்றீங்க
நன்றி பத்மா!!
நன்றி அக்கா!!
Post a Comment